Go to ...

RSS Feed

பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் சாவு


நாகர்கோவில்: பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று மேலும் 4பேர் இறந்தனர்.தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், நாளுக்குநாள் உயிரிழப்பு உயர்ந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்தவர் அருண்(32). மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு  நேற்று உயிரிழந்தார்.குமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு புதுப்பள்ளியை சேர்ந்தவர்  சக்ரியா(50). முன்னாள் இமாம். இவர், பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

ஈரோடு திண்டல் புதுக்காலனி பி.கே.என். நகரை சேர்ந்த ஓய்வு  பெற்ற தனியார் வங்கி ஊழியர்முத்துசாமி(58) கோவை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலுக்கு நேற்று காலை பலியானார்.
திருச்சி மாவட்டம்   தொட்டியம் அருகே  பெரியநாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி தமிழழகனின் ஒன்றரை  வயது குழந்தை, திருச்சி அரசு  மருத்துவமனையில். பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று இறந்தது.

Source: Dinakaran

Tags: