Go to ...

RSS Feed

ஹோண்டாவின் புதிய ‘பிளேடு’ பைக்


ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) ‘பிளேடு’ என்ற புதிய வகை மோட்டார்சைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை&சந்தைப்படுத்துதல்) யவீந்தர் சிங் குலேரியா கூறியது:
‘பிளேடு’ மாடல் பைக் கடந்த மாதம் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. உறுதியளித்தபடி, அந்த மாடல் பைக்கை இந்திய சந்தையில் இந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
‘பிளேடு’ பைக்கில் 162.71சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8,500 ஆர்பிஎம்-இல் 13.93 பிஹெச்பி சக்தியை உருவாக்க வல்லது. மேலும், மோனோ ஸாக்கப்சர், 130 எம்எம் அகலமுள்ள டயர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இப்புதிய மாடல் பைக்கின் விலை ரூ.78,500-ஆக (தில்லி விற்பனையக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

Source: dinamani

English summary
Honda’s new ‘ Blade ‘ bike

Honda motorcycle scooter India ovum (hesamesh) ‘ the blade ‘ a new type of motorcycle, sevva

Facebook Comments