Go to ...

RSS Feed

6 ஆண்டுகளில் 1212 மோசடி உத்திரவாத கடிதம் பெற்றுள்ளார் நீரவ்மோடி: அருண் ஜெட்லி தகவல்


புதுடெல்லி: வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி கடந்த 6 ஆண்டுகளில் 1212 மோசடியாக உத்திரவாத கடிதங்களை பெற்று, வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் கடன் பெற்றுள்ளார் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், அவரது மாமா மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி குருப் நிறுவனங்களும் சேர்ந்து ரூ.12,700 கோடி வங்கிக் கடன் பெற்று பஞ்சாப் நேசனல் வங்கியை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகுல் சோக்சி நிறுவனம் மேலும் ரூ.942 கோடி மோசடி செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நீரவ் மோடி, மெகுல் சோக்சியின் மோசடி ரூ.13,578 கோடியாக உயர்ந்துள்ளது.  இதில் கீதாஞ்சலி குழுமம் மட்டும் ரூ.7,080.86 கோடிக்கு மோசடி செய்துள்ளது. மீதம் நீரவ் மோடியின் நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன.

 இது தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:
நீரவ் மோடி குழுமத்துக்கு 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்கிகளில் இருந்து 53 உண்மையான உத்திரவாத கடிதங்களை பெற்றுள்ளார். 1212 மோசடியான உத்திரவாத கடிதங்களை பெற்றுள்ளார். சில மோசமான ஊழியர்களின் உதவியுடன், ஒரே நாளில் 5 உத்திரவாத கடிதங்கள் எல்லாம் நீரவ் மோடி நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவற்றை வைத்து வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளன. இந்த முறைகேடு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் தலைமையகத்துக்கு கடந்த ஜனவரி 23ம் தேதி தெரியவந்தது. உடனடியாக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு முதல்கட்ட அறிக்கை ஜனவரி 25ம் தேதி தாக்கல் செய்யப்ட்டது. இந்த மோசடி குறித்து கடந்த 29ம் தேதி அன்று ரிசர்வ் வங்கிக்கும், மும்பை சிபிஐக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த தவலை நிதி சேவைகள் துறைக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் தெரிவித்தது. வங்கி உத்திரவாத
கடிதத்துக்கு தடை தொழிலதிபர்கள் ஒரு வங்கியின் உத்திரவாத கடிதத்தை(எல்ஓயு) பெற்று மற்றொரு வங்கியில் கடன் பெற்று வந்தனர். இவ்வாறு கடன் பெறுபவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால், உத்திரவாதம் அளித்த வங்கி அந்த கடனை செலுத்த வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் உத்திரவாத கடிதங்களை பெற்றுத்தான் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி நிறுவனங்கள் ரூ.13,578 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளன. இதையடுத்து வங்கிகள் உத்திரவாத கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Source: dinakaran

English summary
6 years 1212 fraud has obtained the guarantee letter, Arun Jaitley: information neeravmodi

New Delhi: fled abroad in the past 6 years 1212 Nirav MODI, fraudulently obtaining a letter of guarantee, velinadugu

Facebook Comments