Go to ...

RSS Feed

பெட்ரோல், டீசல் விலையில் 2வது நாளாக மாற்றமில்லை


புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 2வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கர்நாடக தேர்தலுக்காக 19 நாட்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்த நிறுவனங்கள், கடந்த மாதம் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை தொடர்ந்து விலையை உயர்த்தின. இதில் சென்னையில் பெட்ரோல் 4 டெல்லியில் 3.80 அதிகரித்தது. டீசல் சென்னையில் 3.62 டெல்லியில் 3.38 உயர்ந்தது. இதன்மூலம், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இதன்பிறகு, முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் குறைக்க தொடங்கின. கடந்த 12ம் தேதி வரை சென்னையில் பெட்ரோல் 2.10 டெல்லியில் 2 குறைக்கப்பட்டது. டீசல் சென்னையில் 1.56 டெல்லியில் 1.46 குறைக்கப்பட்டது. 12ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை. இதனால் பெட்ரோல் சென்னையில் 79.33 ஆகவும், டெல்லியில் 76.43 ஆகவும், டீசல் சென்னையில் 71.62 ஆகவும், டெல்லியில் 67.85 ஆகவும் நீடித்தது.

Source: dinakaran

Facebook Comments