Go to ...

RSS Feed

ஏற்றுமதி தேயிலைத்தூள் விற்பனை அதிகரிப்பு


கோவை:கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் 2.80 கோடிக்கு தேயிலை விற்பனையானது. கோவை தேயிலை வர்த்தக மையத்தில் புதன் தோறும் இணையத்தில் தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 2.71 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.94 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 93.16. விற்பனை மதிப்பு 1.82 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.46 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.13 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 86.46. விற்பனை மதிப்பு 98 லட்சம்.

கடந்த வார விற்பனையோடு ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு 48 பைசா அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ரகம் கிலோவிற்கு 4.79 குறைந்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் 2.80 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை விட 27 லட்சம் குறைவாகும். விற்பனை சரிவிற்கு ஏற்றுமதி தேயிலைத்தூள் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.

Source: dinakaran