Go to ...

RSS Feed

தேசிய யூத் ஸ்போர்ட்ஸ் போட்டியில் தமிழக அணி சாம்பியன் ஷிப் வென்றது


சேலம்:

தேசிய யூத் ஸ்போர்ட்ஸ் போட்டிகள் மகராஷ்டிர மாநிலம் ஷீரடியில் 2 நாட்கள் நடந்தது.

இந்த போட்டியில் தமிழக யூத் கேம்ஸ் மினி புட்பால் அணி சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற தமிழக அணியில் மாணவர்கள் கார்த்திக், சன்ஜய், சரவணபிரசாத், பாலாஜி, ஆதித்யபிரதாப்சிங், தினேஷ் கண்ணன், அம்பரிஷ் பிரபு, பிந்துக்குமார், பார்த்த சாரதி, ஏற்காடு சேர்வராய்ஸ் வேலி பப்ளிக் பள்ளியை மாணவர் புஷ்கர், நோட்ரி டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளி மாணவர் ஸ்ரீதர்‌ஷன், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர் கிருபாகரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களை முன்னாள் எம்.பி. தேவதாஸ், சேர்வராய்ஸ் பள்ளி தாளாளர் இளவரசி தேவதாஸ், இயக்குனர் சேகர், முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர் சிவக்கு மார், தமிழக யூத் கேம் கமிட்டி சேர்மன் வக்கீல் மூர்த்தி, தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர் மாங்க் பிரசாத் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Source: Maalaimalar