Go to ...

RSS Feed

மெஸ்சி, என்னை பின்னுக்குத் தள்ளி சாலாவால் பலோன் டிஆர் விருதை வெல்ல முடியும்- ரொனால்டோ


மெஸ்சி மற்றும் என்னை பின்னுக்குத் தள்ளி முகமது சாலாவால் பலோன் டிஆர் விருதை வெல்ல முடியும் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். #Ronaldo

ஆண்டுதோறும் கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு பலோன் டிஆர் என்ற உயரிய விருது வழங்கப்படும். 2008-ல் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்த விருதை இவர்கள் இருவரையும் தவிர மற்ற வீரர்கள் நெருங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், முகமது சாலாவால் இந்த விருதை வெல்ல முடியும் என்ற ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடத்தின் வெளிப்பாடுகளில் ஒருவர் சாலா. ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோப்பா சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட காயம் அவரை வெளியேற்றாது என்று நம்புகிறேன்.

பலோன் டிஆர் விருதிற்கு எனக்கும், மெஸ்சிக்கும் இடையில்தான் போட்டி என்று பெரும்பாலான நபர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்ற வீரர்களும் இந்த போட்டியில் நுழைய வாய்ப்புள்ளது. அதில் உறுதியாக சாலாவும் ஒருவர்’’ என்றார்.

லிவர்பூல் அணிக்காக சாலா ஒட்டுமொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Facebook Comments