Go to ...

RSS Feed

Page 2

முடிவுக்கு வருகிறது இம்சை அரசன் பிரச்சனை – புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்?

இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறுப்படுகிறது. #IA24P #ImsaiArasan ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம்

வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது: பிரதமர் மோடி அறிவுரை

 வன்முறையும், கொடூரமான செயல்களும் ஒருபோதும் ஒரு பிரச்சினையை தீர்க்கத் தீர்வாக அமையாது. அஹிம்சை மட்டுமே அனைத்தையும் வெல்லும் திறன் கொண்டதாகும் என்று 45-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். பிரமதர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று வானொலியில் மனதில் இருந்து பேசுகிறேன் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார், அந்த வகையில் 45-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் இன்று மோடி உரையாற்றினார். அப்போது அவர்

கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு- ஒயிட்வாஷ் தவிர்க்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvAUS இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 242 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது போடடியில் 6 விக்கெட்

காரைக்காலில் ஜூன் 27 -ல் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால் : காரைக்காலில் மாங்கனி திருவிழாவையொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார். Source: Dinakaran

பசுமை வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள்: முதல்வர் பழனிசாமி பேட்டி

பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங்களை பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு தானாக முன்வந்து வழங்கியிருக்கின்றார்கள் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார். தொடர்ந்து கர்நாடக அரசு முரண் பிடித்துக் கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே? ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத்

சிவகாசியில் ஒயின்ஷாப்பில் மது அருந்திய 3 பேர் பலி.. மதுவில் விஷம் கலந்து குடித்தனர்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts விருதுநகர்: சிவகாசியில் மதுக்கடையில் மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது பராசக்தி நகர். இங்கு இயங்கிவரும் அரசு பானக்கடை ஒன்றில் 3 பேர் இன்று பிற்பகல் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தங்களிடமிருந்த விஷத்தை மதுபானத்தில் கலந்து குடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 3

ஆளுநரின் இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது: துரைமுருகன்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை : நாமக்கல்லில் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார். இதனை எதிர்த்து திமுக கட்சியினர் ஆளுநருக்குக் கருப்புக்கொடி காட்டினர். கருப்புக்கொடி காட்டியதற்காக கைது

பெண்கள் டி20 கிரிக்கெட்- பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிகா பெண்கள் அணி. #ENGWvSAW இங்கிலாந்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனை டாமி பியூமோன்டின் (59 பந்தில் 71 ரன்கள்) சிறப்பான

குழந்தைகளின் ஆபாசப்படம்: வாட்டிகன் முன்னாள் தூதருக்கு சிறை

குழந்தைகளின் ஆபாசப்படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, வத்திக்கானின் முன்னாள் தூதருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோசிங்னோர் கார்லோ அல்பர்டோ கபெல்லாவின் மொபைல் போனில் டஜன் கணக்கான ஆபாச புகைப்படம் மற்றும் கணொளிகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு, வத்திக்கான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், தன் குற்றத்தை நீதிமன்றத்தில் கபெல்லா ஒப்புக்கொண்டார். வாஷிங்டனில் உள்ள வாத்திகன் தூதரகத்தில் பணியாற்றியபோது, தனிப்பட்ட நெருக்கடிக்குத் தான் உள்ளானதாக அவர் கூறியுள்ளார். கபெல்லா மீது தங்களுக்கு உள்ள சந்தேகங்களை வத்திக்கானுக்கு அதிகாரிகள் தெரிவித்த

பண்ருட்டியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மயங்கிய நிலையில் மீட்பு

கடலூர் : பண்ருட்டியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் குள்ளன்சாவடி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பண்ருட்டியில் தொழிலதிபர் விஜயரங்கனை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியிருந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற விஜரங்கனை கடத்திய 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். Source: Dinakaran

காவிரி: குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts கொடைக்கானல்: காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யும் என்று குமாரசாமி கூறியுள்ளார். அழுது புலம்பினாலும் இந்நிலையில் கொடைக்கானலில்

பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் – திரைப்பட தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50

சேலம் – சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை : சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் -சென்னை இடையே 277 கிமீ., 8 வழிச்சாலை

ஆளுநரின் செயலை விமர்சித்தால் நடவடிக்கை.. நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை விளக்கம்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது, ஆளுநரின் செயலை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மளிகை விளக்கம் அளித்துள்ளது. நாமக்கல்லுக்கு ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை எறிந்தும் போராடினர்.

மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடல் கண்டெடுப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட கேரள வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.  இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம்

சென்னை அண்ணா நகரில் நடிகையின் கைபேசி பறிப்பு

சென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ரேனிகுண்டா, அஞ்சான், மீகாமன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சஞ்சனா சிங், தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அவர், தினமும் காலை சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி நேற்று அதிகாலை சைக்கிளிங் செய்துள்ளார்.  அண்ணா நகர், சிந்தாமணி சிக்னலில் சஞ்சனா தனது  போனை எடுத்து பார்த்துள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி கைது.. தனிப்படை காவல் துறை நடவடிக்கை

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை காவல் துறை கைது செய்துள்ளது. பிரபல ரவுடி சிடி மணி கைது செய்வதற்காக, சென்னை காவல் துறை கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை குழுவை அமைத்து இருந்தது. கடந்த சில மாதங்களாக காவல் துறை இவனை தேடி வந்தது. கடந்த மே 6ம் தேதியில் இருந்து

விப்ரோ சிஇஓ அபித்-க்கு அடித்தது ஜாக்பாட்.. 34 சதவீத சம்பள உயர்வு..!

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts இந்திய மென்பொருள் சந்தையில் இருக்கும் நிறுவனங்களில் 3வது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வரும் விப்ரோ-வின் தலைமை நிர்வாக அதிகாரியான அபித் அலி நீமுச்வாலா-விற்கு 2018ஆம் நிதியாண்டிற்காகச் சம்பளத்தில் சுமார் 34 சதவீதம் அதிகரித்துச் சுமார் 18.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். அபித் அலி நீமுச்வாலா பெற்ற சம்பளத்தில் 6.2 கோடி ரூபாய் சம்பளமாகவும்,

சிவகாசியில் அரசு மதுபானக்கடையில் மது அருந்திய 3 பேர் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு மதுபானக்கடையில் மது அருந்திய 3 பேர் உயிரிழந்துள்ளனர். மது அருந்தியதால் உயிரிழந்த 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran

சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகையிடம் கைபேசி பறிப்பு

சென்னையில் நேற்று காலையில் சைக்கிளிங் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகையிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் ‘கோ’, ‘அஞ்சான்’, ‘தனி ஒருவன்’, ‘ரேணிகுண்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு சைக்கிளிங் உடற்பயிற்சிக்காகச் சென்றார், அப்போது அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே வந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் சஞ்சனா

Older Posts›› ‹‹Newer Posts