Go to ...

RSS Feed

Page 3

பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள்

மீனவர்களுக்கு கானல் நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம்: வைகோ கவலை

மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை ரூ.1 கோடியே 10 லட்சமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சினைகளில் துன்பப்படும் பாக் ஜலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ்

பாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டின் தலையின் உட்கார்ந்து இருக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார். மதராசபட்டிணம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தில் வசிக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அதில் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இந்நிலையில் எமி

தெலுங்கானா : புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 தொழிலாளிகள் பலி

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts புவனகிரி : தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர். இன்னும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் புவனகிரியில் உள்ள யாதாத்ரி பகுதியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது. வேமுலகொண்டாவில் இருந்து வந்து கொண்டிருந்த டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததில் கால்வாயில் கவிழ்ந்தது.

இமைக்கா நொடிகள் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்’ படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் அறிவிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ImaikkaNodigal கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்’. ஆக்‌ஷன் த்ரில்லராக படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார்.

கால்பந்தில் அர்ஜென்டினா தோல்வி… விரக்தி அடைந்த கேரளா ரசிகர் சடலமாக மீட்பு

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts கோட்டயம்: தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார். ஃபிபா வேர்ல்டு கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இவை 3-0 என்ற கோல் கணக்கில் பெற்றது. இதையடுத்து அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் ஆறுமனூர்

கிண்டியில் ஐஐடி மாணவர் கொலை.. தீயில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: சென்னையில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த அவரது சடலத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்,. தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாங்கேரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சிவக்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மாணவர்கள் யாராவது வீட்டுக்கு சென்றிருக்கலம் என்று சிவக்குமாரை தேடும் முயற்சியில்கூட

இன்னொரு பகீர்… இன்னொரு அதிர்ச்சி… பஸ்ஸையும் கடத்த ஆரம்பித்து விட்டார்களே மாணவர்கள்!

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: சில கல்லூரி பசங்க, படிக்கிற வேலைய தவிர மீதி எல்லா வேலைலயும் இறங்கி அசிங்கப்பட்டு போறாங்க. கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான், முதல்நாள் கல்லூரிக்கு போன மாணவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, அரிவாள்கள் என பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், சுமார் 50-,க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தார்கள். இந்த செய்தி அடங்கி ஓய்ந்து போவதற்குள் இன்னொரு பகீர்… இன்னொரு

பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

பசுமை வழிச்சாலைக்கு புதிய நிபந்தனைகள் விதித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #GreenWayRoad சென்னை: சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாக சென்று இணைகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில்

புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்

செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் இத்தாலி

பசுமைச் சாலை; ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ் குற்றச்சாட்டு

பசுமைச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூ.10,000 கோடியில் அமைக்கப்படவிருக்கும் பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுக அரசு, விவசாகளுக்கு பணத்தாசைக் காட்டி நிலங்களைப் பறித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. நிலங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு தருவதாக

தமிழ்படம் 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2′ படத்தின் அடுத்த பாடல் மற்றும் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2 #TP2 தமிழ் திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2′. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, திரைப்பட, அரசியல் என பல்வேறு

ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஜி.எஸ்.டி! விரிவான அலசல்..

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts இந்தியாவில் இருந்த பல அடுக்கு வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் சொத்துக்கள் வாங்கும் போது முதலில் ஜி.எஸ்.டி வரி விகிதங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் இந்த வரி உங்களின் நிதிநிலைமையின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். சொந்த வீடு

சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு பெரும்பாலானோர் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் : முதல்வர் பேட்டி

சேலம்: சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளதால் விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகிறது என்றார். சென்னை – சேலம் பசுமைவழிச்சாலை அமைக்க விவசாயிகள் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டார். பல்வேறு விவசாயிகள் இந்த திட்டத்திற்கு தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளதாக கூறினார். 100 விவசாயிகளில் நான்கைந்து விவசாயிகள் மட்டுமே நிலத்தை தர மறுப்பதாக கூறினார். வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த வேண்டியது அரசின்

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம்… அமித்ஷா

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts ஜம்மு: இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அமித்ஷா தெரிவித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிடிபி கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியது. இதனால் ஆட்சி

தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது. துருக்கியின் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் ரிசெப் தயிப் எர்துவான் வெற்றி பெற்றால், புதிதாக சில முக்கிய அதிகாரங்கள் அவரது கைகளுக்கு செல்லும். இது ஜனநாயக ஆட்சியை பலவீனப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். குடியரசு மக்கள் கட்சியின் மைய-இடது வேட்பாளரான முஹர்ரம் இன்ஸ், எர்துவானுக்கு முக்கிய

பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் திறக்கப்படும் நீரால் 20,729 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source: Dinakaran

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்: நீண்ட நேரம் காத்திருந்து பொது மக்கள் அவதி

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளா கியுள்ளனர். சென்னையில் தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால், பேருந்துகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள பேருந்துகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக நடத்துநர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘காலாவதியான

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம்: காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து மோதல்

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முன்பு கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் அரசியல் பேச்சுகள் கவனிக்கப்பட்டு வந்தன. தற்போது, யார் யாரோ பேசுகின்றனர். சிலர் தங்கள் படம் வெளியாவதற்கு முன்பு பேசுகின்றனர். படம் வெளி யான பிறகு

டி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் : அமைச்சர் ஓ.எஸ். மணியன்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts நாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் பக்கம் அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ் மணியன், டி.டி.வி

Older Posts›› ‹‹Newer Posts