Go to ...

RSS Feed

சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராப்பிறையார் விழா


இராப்பிறையார் விழாவை யொட்டி வீதியுலா வந்த அம்மன். (வலது)  சேப்பாட்டி அம்மன்  கோயில்  தேரோட்டம் தொடர்பாக  காவல்துறையினர் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம்.

செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் உற்சவத்தையொட்டி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மன் வீதியுலா நடைபெற்றது. 
பெரியநத்தம் பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகிய சேப்பாட்டியம்மன் கோயிலில் பழமையான சம்பிரதாயப்படி இராப்பிறையார் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உற்சவத்தையொட்டி காலை மூலவர் மற்றும் உற்வச அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகாதீபாராதனை நடைபெறும். 
இந்த உற்சவத்தில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள பறைகாரர், தடிக்காரர், பொலிக்காரர் ஆகியோர் சந்திகளுக்கு புஷ்பம், மாலைகள், பூஜைப் பொருள்களுடன் ஊர்வலமாகச்சென்று சந்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மாலை அம்மனுக்கு முளைப்பாரியுடன் பல்வேறு வகையான பழங்கள், பலகாரங்கள், அம்மனுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசையுடன் ஊர்வலமாகச் செல்வர். கோயிலில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலாவிற்குத் தயாராக வீற்றிருக்கும் அம்மன் முன்னிலையில் இப்பொருள்கள் வைக்கப்பட்டு, படையலிட்டு வழிபாடு நடைபெறும். உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இராப்பிறையார் அம்மன் தேரோட்டம் நடைபெறும்.
இந்த உற்சவத்தை முன்னிட்டு சேப்பாட்டி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை புராதன வழக்கப்படி அம்மனுக்கு காப்புக்கட்டி நகர எல்லையிலிருந்து வரும் சந்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை சந்திகளுக்கு எண்ணைக்காப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை மாலை இராப்பிறையார் அம்மன் வீதியுலா வழக்கம்போல் பெரியநத்தம் மற்றும் செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதன் பின் அம்மன் கோயிலை வந்தடைந்தார். விழாவினையொட்டி காலை, மதியம், இரவு அன்னதானம் செய்யப்பட்டுவருகிறது.
காவல்துறை கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு பெரிய நத்தத்தில் உள்ள சேப்பாட்டி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு நடைபெறும் தேரோட்டம் தொடர்பாக காவல்துறை சார்பில் வெள்ளிக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றியும், எந்தெந்த அமைப்புகள் எந்தெந்த இடங்களில் அன்னதானம் செய்கின்றனர் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முக்கியமாக, அண்ணா சாலை, மேட்டுத் தெரு பகுதிகளில் தேர் வரும்போது வாகனங்கள் எதுவும் அந்தப் பகுதிகளில் நிறுத்தியிருக்கக் கூடாது என்றும் வாகனங்கள் வேறு பாதை வழியாகச் செல்லவேண்டும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Source: dinamani

Facebook Comments