Go to ...
RSS Feed

இந்தியா

உ.பி. டாக்டர் கபீல்கான் நிபா வைரஸ் நோய்க்குச் சிகிச்சை அளிக்க விருப்பம்: முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல்கான் விருப்பம் தெரிவித்துள்ளதை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஸஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்தநிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும்பாஜக அரசு அவர்மீது கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. கேரள மாநிலத்தில்

ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?

கர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் ஜி.பரமேஸ்வரா கொரட்டாகிரே தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி வேட்பாளர் சுதாகர் லாலை எதிர்த்துதான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகியுள்ளார். இதன் மூலம் பரமேஸ்வரா மாநிலத் தேர்தல்களில் 5வது முறையாக வெற்றி பெற்றார்.

திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி ‘பிங்க்’ வைரம், நகைகள் மாயம்?: அர்ச்சகர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலம், திருப்பதியில் திருமலா திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி மதிப்புமிக்க பிங்க் நிற வைரம் மாயமாகி உள்ளது, ஏராளமான நகைகள் காணாமல் போயுள்ளதாக கோயிலின் அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆந்திர மாநில அரசு சமீபத்தில் அர்ச்சகர்களுக்கான ஓய்வு வெறும் வயது 65 ஆக நிர்ணயித்தது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு (வயது69) பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தப் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் மிகவும்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசைச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்

மாணவர்களே எழுந்திருங்கள்; உங்கள் எதிர்காலத்துக்கு மோடி அரசால் ஆபத்து: ராகுல் காந்தி எச்சரிக்கை

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் பணிக்கு, தகுதி மூலம் தேர்வானவர்களை அதிகாரிகளாக நியமிப்பதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்வு செய்பவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் பணியாளர் பயிற்சித்துறை சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி 100 நாள் பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு நடக்கும் பயிற்சியில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என்று புதிய விதியை

குமாரசாமி பதவியேற்கத் தடை கோரும் மனு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை ஆட்சி அமைப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, குமாரசாமி முதல்வராக பதவி ஏற்பதை நிறுத்திவைக்கக் கோரி அகில பாரத் இந்து மஹாசபா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தது. அவசர வழக்காகக் கருதி இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று இந்து மஹாசபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்

எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமரிசித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார்

ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல்; 2019-தேர்தலுக்காகப் பிராத்திப்போம்: ஆர்ச் பிஷப் கடிதத்தால் சர்ச்சை

நாட்டில் ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிலவுகிறது, ஆதலால், 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக எழுதப்பட்டதாக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், ஆர்ச்பிஷப் அணில் குட்டோ நாட்டின் நலனுக்காக எப்போதும் போல் பிரார்த்தனை செய்யக்கோரி எழுதப்பட்ட கடிதம்தான். வேறு எந்த உள்நோக்கத்துடனும் எழுதப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் எச்சரிக்கை: பழந்தின்னி வவ்வால்களால் கிணறுகள், பழங்கள் மூலம் பரவும் ஆபத்து

கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கோழிகோடு மாவட்டம், பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதலில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நிபா வைரஸ் தாக்கி மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார் இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை

காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை: தேவே கவுடா

காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா தெரிவித்திருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இருக்கும் சூழலில் தேவே கவுடாவின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து.. பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளையும் குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருப்பதன் நோக்கம் என்ன? எனது அழைப்புக்கு

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவியை பகிர்வதில் இழுபறி

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், மஜத கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமையும் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசில் எந்த கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம், எத்தனை அமைச்சர்கள், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மஜத தேசிய தலைவர் தேவகவுடா தலைமையில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர்

தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சி கேட்ட பிறகு ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்: எல்லையோரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எல்லையில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்தியப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான், சில மணி நேரங்களில் அத்துமீறி மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் 2 பேர், பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். அதற்கு கடந்த 3 நாட்களாக பிஎஸ்எப் வீரர்கள் பயங்கர பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பதுங்கு

ஊடக செய்தியின் உள்ளடக்கத்தை தேர்தல் ஆணையத்தால் ஒழுங்குபடுத்த முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊடக செய்தியின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மூத்த அமைச்சராக இருப்பவர் நரோத்தம் மிஸ்ரா. இவர் 2008 தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்கில், பத்திரிகைகளில் தனக்கு ஆதரவு செய்தி வெளியாக பணம் கொடுத்ததை கணக்கில் காட்டவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், மிஸ்ராவை எம்எல்ஏ பதவியிலிருந்து 3

டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் குமாரசாமி: கர்நாடக அமைச்சரவை குறித்து ஆலோசனை

மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) மாநில தலைவரும் கர்நாடக முதல்வ ராக பொறுப்பேற்க உள்ளவருமான எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்தது. இதன்படி, மஜத மாநில

கேரளாவில் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழப்பு?- மத்திய உயர்நிலை மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு

கேரளாவில் கடந்த 2 வாரமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் நிபா வைர ஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய உயர்நிலை மருத்துவக் குழு கேரளா விரைந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்க ளில் இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பலனின்றி ஒரு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்

எதிரிகளின் பேரணிகளில் கலந்து கொண்டால் மஞ்சள் காமாலை தாக்கும்: உ.பி.அமைச்சர் ‘சாபம்’

உ.பி.மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், அரசியல் எதிரிகளின் பேரணிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை நோய் பீடிக்கும் என்றும் தன் அருள் கிடைத்தால் மட்டுமே அது குணமடையும் என்றும் ‘சாபம்’ விடுத்துள்ளது பரபரப்பாகியுள்ளது. சுஹெல்தேவ் பாரத் சமாஜ் கட்சியின் தலைவராவார் ஓம்பிரகாஷ் ராஜ்பார். ஞாயிறன்று மது ஒழிப்புப் பேரணி ஒன்றில் கலந்த் கொண்டு பேசும்போது, “எனது கட்சியின் அறிவிப்பு இன்றி, அனுமதியின்றி வேறு எந்தக் கட்சியின் பேரணியிலும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி யாராவது மீறி

திடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஒலிநாடா போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முதல்நாள் எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப்கள் போலியானது என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வாஜுபாய் வாலா. இதை எதிர்த்து காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதாதளம்கட்சி சார்பில் தாக்கல் செய்த

குஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொழிற்பேட்டை பகுதி ஒன்றில் தலித் வாலிபரை கட்டி வைத்து அடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ரதாதியா இண்டஸ்ட்ரீஸைச் சேர்ந்த 5 பணியாளர்கள் முகேஷ் வானியா என்ற குப்பையகற்றும் துப்புரவுப் பணி செய்து வரும் தலித் வகுப்பைச் சேர்ந்த வாலிபரை சுவற்றில் வரும் பைப்பில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேரை இது தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் இன்னும்

குடியரசுத் தலைவரும், ஆளுநரும் மத்திய அரசின் முகவர் போல் செயல்படுகிறார்கள்: விளாசிய சிவசேனா

குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சில நேரங்களில் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள் என்று சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்து, எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான

உலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதை புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடும் உறுதி செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கோழிகோடு மாவட்டம், பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தான் முதலில்

Older Posts››