Go to ...

RSS Feed

உலகம்

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி – இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்த வாட்ஸ்அப்!

இந்திய வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக (grievance officer) கோமல் லஹிரி என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில், கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலிதான் முதலிடத்தில் உள்ளது. இதே நேரத்தில், வாட்ஸ் அப் செயலி மூலம் நாள்தோறும் போலியான செய்திகள், தவறான விளம்பரங்கள் என அதிகளவில் பரிமாறப்பட்டு வருகின்றன. இதேபோல், வாட்ஸ் அப் குரூப்பில் வெளியான போலியான செய்திகளால் அப்பாவிகளைப் பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவங்களும் கடந்த

‘டாங்கிகள், துப்பாக்கி சந்தை, போர் சத்தம்’- 30 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது ஆஃப்கன்?

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் 1970 ஆம் ஆண்டு தன் அண்டை வீட்டார் ரஹ்மத்துல்லாஹ் சஃபியுடன் நண்பராகிறார். ரஹ்மத்துல்லா ஆஃப்கனை சேர்ந்தவர். ரஹ்மத்துல்லாஹ் 1988 ஆம் ஆண்டு ஜானை தம் சொந்த நாட்டிற்கு அழைக்கிறார். சொந்த நாடு என்றால் மலைகளும், காடுகளும் அடங்கிய சுற்றுலா பகுதிக்கு அல்ல. போர் பாதித்த பகுதிக்கு செல்லலாமா என்று கேட்கிறார். இருவரும் ஒரு சவாலான, அசெளகர்யமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஜான் அந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும், பயணக்குறிப்புகளையும் `கோயிங் –

கடலில் தனியாக சிக்கியிருக்கும் இந்திய மாலுமி; மீட்கும் முயற்சிகள் தீவிரம்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். கடலில் சிக்கியிருக்கும் இந்திய கடலோடி கோல்டன் க்ளோப் உலகத்தை சுற்றிவரும் படகுப்போட்டியில் கலந்து கொண்டு தீவிரமாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். தனியாக சென்ற மாலுமி அபிலாஷ் டாமி, மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட கடும் புயலால் அவரது படகு, ’துரியா’ உடைந்து

இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; பலர் பலி 20 பேர் காயம்

இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணிவகுப்பு நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராணுவ சீருடைகள் அணிந்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய போராளிகள் இருக்கக்கூடும் என அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இராக்குடன் 1980-88 போர் தொடக்கத்தின் ஆண்டினை குறிக்கும் வகையில், அந்நாடு முழுவதும் ராணுவ அணிவகுப்புகள்

பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு – டிவிட்டர் நிறுவனம்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு – டிவிட்டர் நிறுவனம் கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் (messages) மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் பிழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிவிட்டரினுள் நுழைந்தவுடன் அதில் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து

அமெரிக்கா: விநாயகரை அவமதித்து சர்ச்சையில் சிக்கிய அதிபர் டிரம்ப் கட்சியினர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அதிபர் டிரம்பின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இந்திய வாக்காளர்களையும் இந்துக்களையும் கவரும் வகையில் வெளியிட்ட பத்திரிகை விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் பெண்ட் கவுண்டியை சேர்ந்த ஆளும் குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்ளூர் நாளிதழில் ஒரு பக்கத்திற்கு நான்கு கைகளை கொண்ட விநாயகரின் படத்தை வெளியிட்டிருந்தனர். அந்த விளம்பரத்தில், விநாயகரின் தலை முதல் கால் அருகே இருக்கும் எலி வரை ஒவ்வொரு பகுதிக்கும்

போரில் நசுங்கும் எளிய மக்கள்… அமைதி வேண்டும் அந்த இரு சம்பவங்கள்! #WorldPeaceDay

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவேவிடியும் பூமி அமைதிக்காக விடிகவேமண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவேமலர்கள் சோம்பல் முறித்து எழுகவேகுழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்உலகம் விடியட்டுமே… பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்! – கவிஞர் வைரமுத்து.  இன்று உலக அமைதி தினம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி ஐ.நா சபையால் உலக அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது. எதன் பொருட்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது எனப் பார்ப்பதற்கு முன், இரண்டு சம்பவங்களைத் தெரிந்துகொள்வோம். சம்பவம்-1 10-க்கும் அதிகமான குழந்தைகள்

பணத்துக்காக மனைவிகளாக விற்கப்படும் சிறுமிகள்

நைஜீரியாவின் பெசேவே இன மக்களிடம் திருமணம் செய்ய சிறுமிகளை விற்கும் வழக்கம் உள்ளது. கடன்களை அடைப்பதற்காக சிறுமிகள் விற்கப்படுவார்கள். பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு

ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது முன்னதாக அமெரிக்கா சில தடைகள் விதித்திருந்த நிலையில், ரஷ்ய நிறுவனத்துடன் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்த சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. மிகப் பெரிய அளவில் வட கொரியா மீது

‘அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்’ – அடம்பிடிக்கும் புதிய மெக்ஸிகோ அதிபர்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். ‘அரசு விமானத்தை பயன்படுத்தமாட்டேன்’ மெக்ஸிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சாதாரண பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இவர் சமீபத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்தபோது அடைமழை (கனமழை)யின் காரணமாக விமானத்தினுள்ளே சுமார் மூன்று மணிநேரங்களுக்கு சிக்கியிருக்க நேர்ந்தது. இருந்தபோதிலும், வரும் டிசம்பர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்கவிருக்கும் இவர் அதிபருக்கான பிரத்யேக விமானத்தை விற்பதுடன், தொடர்ந்து பயணிகள்

இரால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்

அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இரால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது. இரால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர். “கஞ்சா புகை செலுத்தி இரால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்,”

உடல் ஓவியங்கள் மூலம் மாயத்தோற்றம்: அசத்தும் ஒப்பனை கலைஞர்

டேயின் யோன் உடல் ஓவியங்கள், நமது கண்களையே நம்ப முடியாத அளவு மனதை கவரும் மாயத்தோற்றங்களை உருவாக்குகின்றன. என் உடலில் ஓவியம் வரைந்தால், மேலும் நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என நினைக்கும் டேயின் யோன் பற்றிய காணொளி. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com

ஜேர் போல்சானாரோ: பிரேசில் தேர்தலில் முன்னிலை வகிப்பவருக்கு பெண்கள் #NotHim சொல்வதேன்?

பிரேசிலில் அக்டோபர் 7-ம் தேதி அதிபர் பதவிக்கான முதல் சுற்றுத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் முன்னிலை போட்டியாளரான ஜேர் போல்சானாரோவுக்கு எதிராக பல லட்சம் பெண்கள் ஒரு பிரகடனமே செய்துள்ளனர். செப்டம்பர் 6-ம் தேதி ஓர் அரசியல் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேர், பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் மீது மோசமான, தடாலடியான கருத்துகளைக் கூறி பிரபலமடைந்தவர். மன நிலை பாதிக்கப்பட்ட நபரால் குத்தப்பட்டதில் இருந்து கருத்துக் கணிப்புகளில் அவரது செல்வாக்கு 26

“எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்” – ஜாக் மா அறிவிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். “நான் அளித்த வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்” – ஜாக் மா அறிவிப்பு உலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான அலிபாபாவின் மூலம் அமெரிக்காவில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக அதன் நிறுவன தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமையிடம்

ஆஸ்திரேலிய நகரை ‘தன்னந்தனியே’ பாதுகாக்கும் காவல் துறைகாரர்

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நாட்டின் அளவுள்ள ஒரு பகுதி முழுவதையும் ஒரே ஆளாக ஸ்டீபன் பர்செல் மட்டுமே பாதுகாத்து வருகிறார். சிம்ப்சன் பாலைவனத்தை உள்ளடக்கிய இப்பகுதியை ஒரு முறை சுற்றி வர நான்கு நாட்களாகும். ஸ்டீபன் பர்செல் எவ்வாறு தனி நபராக காவல் துறை வேலை பார்க்கிறார் என்பதை விளக்கும் காணொளி. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com

உலகில் எளிமையாக வாழத்தகுந்த 5 நகரங்கள் இவைதான்

நம் சொந்த ஊரை விட்டு உலகில் வேறு எந்த நகரத்திற்கு சென்று வாழ வேண்டும் என்றாலும் அது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால், இந்த 5 நகரங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையை எளிமையானதாக்கும். எளிமையாக வாழத்தகுந்த நகரங்களை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பொருளாதார நிபுணர் பிரிவு பட்டியலாக வெளியிடும். பாதுகாப்பு, சுகாதாரம், உணவு மற்றும் குடிநீரின் தரம், கல்வி மற்றும் சாலை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஹோனலூலு, அமெரிக்கா ஹவாயின் தலைநகரமான

“ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா”: தென்கொரிய அதிபர் தகவல்

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தமானது,

ஏமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு – தொண்டு நிறுவனம் எச்சரிக்கை

ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ‘ஏமனில் 10 லட்சம்

வர்த்தகப் போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. டிரம்ப்க்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப்

பெண்களின் வாசனையை ஆண்கள் விரும்புவது ஏன்?

ஒருவரின் வாசனை பிறரை கவருமா என்பது குறித்தும் சிலரின் வாசனை விரும்பத்தகாததாக ஆவதற்கு காரணம் என்பது குறித்தும் பெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் பெண்களின் வாசனை அவர்களின் மகப்பேறு தன்மையுடன் தொடர்புடையது எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com

Older Posts››