Go to ...
RSS Feed

செய்திகள்

தென்பெண்ணையை கெடிலம் ஆற்றோடு இணைக்க வேண்டும்: விழுப்புரம் கலெக்டரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

விழுப்புரம்: தென்பெண்ணையை கெடிலம் ஆற்றோடு இணைக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், விழுப்புரம் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, விவசாய நிலங்களை விற்றுவிட்டால் கார்பரேட் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி பலதிட்டத்தை செயல்படுத்தி நீர்மட்டத்தை 2 ஆயிரம் அடிக்கு கீழ் கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர்

100வது நாள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி

* போர்க்களமானது தூத்துக்குடி* 2 பெண்கள் இறந்த பரிதாபம்* கலெக்டர் அலுவலகம் தீவைப்பு* ஊழியர் குடியிருப்புகள் எரிப்பு* திரும்பிய இடமெல்லாம் வன்முறை; தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி  144 தடை உத்தரவை மீறி கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர்

சிரியா: ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சிரியா படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ISAttack டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக

எதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற காவல் துறை- பதை பதைக்க வைக்கும் காணொளி

தூத்துக்குடி: எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக போராட்டம் நடத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள். இதன் உச்சகட்டமாக இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதற்காக போலீசாரின் அத்தனை தடைகளையும் தகர்த்து

தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக்; காவல்துறையின் அராஜகம்: வைகோ கண்டனம்

ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதை எதிர்த்து, மீனவர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்பினர் உட்பட எங்கள் மதிமுகவும் தொடக்க நாளில் இருந்து இடைவிடாத அறப்போராட்டங்களை நடத்தினோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்து, 1998 செப்டம்பர்

உ.பி. டாக்டர் கபீல்கான் நிபா வைரஸ் நோய்க்குச் சிகிச்சை அளிக்க விருப்பம்: முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல்கான் விருப்பம் தெரிவித்துள்ளதை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஸஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்தநிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும்பாஜக அரசு அவர்மீது கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. கேரள மாநிலத்தில்

தலைமைச் செயலாளருடன் ஸ்டாலின் சந்திப்பு; பெங்களூரு பயணத்தை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்வதாக அறிவிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தார். பிறகு கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவுக்கு செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்ல இருப்பதாகக் கூறினார். தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு தலைமைச்

ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?

கர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் ஜி.பரமேஸ்வரா கொரட்டாகிரே தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி வேட்பாளர் சுதாகர் லாலை எதிர்த்துதான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகியுள்ளார். இதன் மூலம் பரமேஸ்வரா மாநிலத் தேர்தல்களில் 5வது முறையாக வெற்றி பெற்றார்.

துப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா!

சென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,

தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்… மனுவை வாங்க மறுத்ததால் ஆவேசம்!

சென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,

இது மக்களாட்சியா இல்லை, வெள்ளைக்காரன் ஆட்சியா.. பாரதிராஜா ஆவேசம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதி ராஜா, தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி நடத்தினர். ஆட்சியர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பாரதி ராஜா கண்டனம் இதற்கு பலரும் கண்டனம்

எங்கே போகிறது சென்னை? இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை

சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. சாதாரணமாக இரவிலும், அதிகாலையிலும் ஆளரவமற்ற தனியான இடங்களில் பயந்து பயந்து செயின் பறித்த நபர்கள் துணிந்து பட்டப்பகலில் ஸ்கெட்ச் போட்டு பறித்துச்செல்வதும் அதை மற்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்ப்பதும் நடந்தது. அடுத்த

ஆலையை மூடாமல் மக்களை கொன்று குவித்த தமிழக அரசு.. தவ்ஹீத் ஜமா அத் பாய்ச்சல்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பதிலாக மக்களை கொன்று குவித்த தமிழக அரசின் இந்த செயலானது மிகவும் கொடுமையானது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷில்பி கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக இதுவரை

தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்

தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 100 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நூறாவது நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போராட்டக்காரர்கள் முயன்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர். ஆனால், மக்கள் அதற்கும் அசராமல்

ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடியில் மக்களின் உணர்வு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டிற்கு 10 பேர் பலியான சம்பவத்தினால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலீசாரின் துப்பாக்கி

[unable to retrieve full-text content] Source: Maalaimalar English summary [unable to retrieve full-text content] Source: Maalaimalar

தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

[unable to retrieve full-text content]ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite Source: Maalaimalar English summaryOne more place in Tuticorin in gunfire-toll increase 9 [Unable to retrieve full-text content] sterlit factory demanding the closure of public violence in the struggle waged by the

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு

[unable to retrieve full-text content]தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. #SterliteProtest Source: Maalaimalar English summaryThe death toll in shooting the family, the Government of Tamil Nadu-RS. 10 Lakhs monetary relief [Unable to retrieve full-text content] in the struggle with thoothukkudi sterlit police

திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி ‘பிங்க்’ வைரம், நகைகள் மாயம்?: அர்ச்சகர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலம், திருப்பதியில் திருமலா திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி மதிப்புமிக்க பிங்க் நிற வைரம் மாயமாகி உள்ளது, ஏராளமான நகைகள் காணாமல் போயுள்ளதாக கோயிலின் அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆந்திர மாநில அரசு சமீபத்தில் அர்ச்சகர்களுக்கான ஓய்வு வெறும் வயது 65 ஆக நிர்ணயித்தது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு (வயது69) பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தப் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் மிகவும்

தூத்துக்குடியிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து.. மைசூர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி நகரமே போர்க்களமாக மாறியது. திருச்செந்தூர், நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. தூத்துக்குடி நகருக்குள் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Older Posts››