Go to ...

RSS Feed

தமிழகம்

வெயிட்டேஜ் முறை ரத்து: 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு…அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: கோபியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள்  நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.தற்போது வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி

திருப்பூர் நகரில் அரை மணி நேரமாக அடைமழை (கனமழை)

திருப்பூர்: திருப்பூர் நகரில் அரை மணி நேரமாக அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், வடுகபாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source: Dinakaran

நாங்கள் ஜீரோ; ராகுல் காந்திதான் கதாநாயகன்: தொண்டர்கள் மத்தியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே கதாநாயகன். கட்சியில் ஒற்றுமை அவசியம். பாகுபாடு கூடாது என்று முதல்வர் நாராயணசாமி இளைஞர் காங்கிரஸாரிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வெற்றிபெற்ற புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர்கள், பொது செயலாளர்கள், ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினர். சிறப்பு

மத்திய அரசின் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்; முதல்வர் காப்பீட்டு பயனாளிகள் அனைவரும் இணைப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த 1.57 லட்சம் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில்,

விருத்தாசலத்தில் இன்று காலை ருசிகரம்: மணமகளுக்கு காஸ் சிலிண்டரை மொய்யாக வழங்கிய நண்பர்கள்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இன்று காலை நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு மொய்யாக காஸ் சிலிண்டரை வழங்கியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மத்திய அரசை விமர்சித்து மீம்ஸ், பதிவுகள் மக்களிடையே மிகுதியாக பகிரப்பட்டு ஆகி வருகிறது. சகட்டு மேனிக்கு மத்திய அரசை கலாய்த்து வருகின்றனர். கடந்த வாரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் நடந்த திருமண

அதிமுக-வின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம்; ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்: தினகரன் பேச்சு

தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையில் 90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். மேலும், அ.தி.மு.க.வில் இருந்து விலகி எங்கள் இயக்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் பொள்ளாட்சியில் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி.வி. தினகரன் முன்னிலையில்

நாகை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சிவதர்ஷினி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட  குழந்தை சிவதர்ஷினி நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  Source: Dinakaran

ஹை-டெக்காக மாறும் புழல் சிறையின் பாதுகாப்பு: சாப்ட்வேர் மூலம் பராமரிக்க, கட்டுப்படுத்த முடிவு

சென்னையில் உள்ள புழல் சிறை ஹெ- டெக்காக மாற்றப்பட உள்ளது. சாப்ட்வேர் மூலம் அனைத்துக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு, கட்டுப்படுப்பட உள்ளது. புழல்சிறை வளாகத்தில் முதல் முறையாக இந்த சாப்ட்வேர் முறையில் கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பின் மற்ற சிறைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்குச் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளில் காவல்

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த  நெடியம் புது காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த  ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஊராட்சி   நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வயல்வெளியில்  தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி

கைபேசி திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்துக் கொலை: கரூரில் தாய், சகோதரி முன்னிலையில் பயங்கரம்

கரூர் கரூர் மாவட்டம் அல்லிக்கவுண்டர் என்ற இடத்தில் ச்ல்போன் திருடியதாக சந்தேகத்தின்பேரில் 15 வயது சிறுவனை தாய் சகோதரி கண்ணெதிரில் அடித்துக்கொன்றது ஒரு கும்பல். கரூரை அருகே உள்ளது அல்லிக்கவுண்டனூர் கிராமம். இங்கு வசிப்பவர் பழனிசாமி. இவருக்கு பாலசுப்பிரமணி(15) என்ற மகனும், ஒருமகளும் உள்ளனர். பாலசுப்ரமணியம் சரியாக படிப்பு வராததால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் பள்ளிக்குச் செல்லாமல் கிடைத்த வேலைகளை செய்துக்கொண்டு கிராமத்தில் சுற்றிவந்துள்ளார். பாலசுப்ரமணியத்துக்கு திருட்டுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கைச்செலவுக்காக

நாகை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த குழந்தை… மீட்கும் பணி தீவிரம்

நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய துளையில் 2 வயது குழந்தை விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். Source: Dinakaran

கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்

சர்ச்சை, மிரட்டல், அவதூறு பேச்சு பேசியதாகக் கைது செய்யப்பட்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் முதல்வர், காவல்துறையை அவதூறாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார். பிறகு அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரிக்கப்பட்டார். பிறகு எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக்,

தமிழகத்தின் மேற்கு, தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

தமிழக்தின் உள்மாவட்டங்கள், மேற்கு, தென் மாவட்டங்களில் இன்று காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் வானிலை குறித்து எழுதி வருகிறார். மழை குறித்து இன்று அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் மோதிக் கொள்வதால், இன்று தமிழகத்திலும், கேரளாவிலும் இடியுடன் கூடியமழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள்,

‘பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார்’ – ஓ அப்படிக் கேட்டீர்களா? என்று பதிலை மாற்றிய எஸ்.வி.சேகர்

பாஜக தலைவர் பதவியை ஏற்கத்தயார் என்றும் வாய்ப்பளித்தால் இப்போதுள்ளதைவிட கூடுதல் வாக்கு வங்கியை பெற்றுத்தரத்தயார் என கேள்வியை தவறாக புரிந்துக்கொண்டு பதிலளித்தார் எஸ்.வி.சேகர். தமிழிசை 2014 ஆகஸ்ட் முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.2019-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். பாஜகவில் உள்ள மாநிலத் தலைவர்களில் தமிழகத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிசைக்கு பின்னர் பாஜக தலைவராகும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழிசை பாஜக

கருணாஸ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?- கொலை முயற்சி பிரிவு நீக்கம்; அக்.5 வரை சிறை

வன்முறையைத்தூண்டும் பேச்சால் கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது போடப்பட்ட 307 வது பிரிவை நீக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் டிசி அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய

ஈரோடு அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

ஈரோடு: மாமரத்துப்பாளையத்தில் விஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். கார்த்திகேயன் என்பவர் ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியது. Source: Dinakaran

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?- ஸ்டாலின் கேள்வி

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள காவல் துறையினர் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்பதிலும், பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும், இரு வேறு கருத்துகளுக்குஇடமே இல்லை.

கரூரில் கைபேசி திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை

கரூர்: கரூரில் கைபேசி திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran

குமரெடியபுரம், தெற்குரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் ஆய்வு

தூத்துக்குடி: குமரெடியபுரம், தெற்குரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குளங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வுகள் மேற்கொள்ளும் வல்லுநர் குழுவினர் பகுதி மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கேட்டு வருகின்றனர். ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான கூவலுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். Source: Dinakaran

சொகுசு வசதிகள் அளிக்கப்பட விவகாரம்: மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

மதுரை: புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், ரேடியோக்கள், கைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை

Older Posts››