Go to ...

RSS Feed

ஆன்மிகம்

விதவிதமாக விநாயகரைக் காண.. மகா கணபதியின் மெகா கண்காட்சி! 

குரோம்பேட்டையில் இயங்கிவரும் ஸ்ரீ விநாயகா குழுமம் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விநாயகர் வடிவங்களுடன் கூடிய இனிய கண்காட்சியை இலவச அனுமதியுடன் இப்பகுதியில் நடத்தி வருகின்றது. அவ்வகையில் தொடர்ந்து 12-வது ஆண்டாக இந்த கண்காட்சி இவ்வருடம், சென்னை – 64, சிட்லபாக்கம் ஏரியாவில் அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அருகில் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ லஷ்மிராம் கணேஷ் மகாலில் “பிள்ளையார் அனுக்ரஹம்” என்ற சிறப்பு பெயரில் செப்டம்பர் 13 அன்று தொடங்கப்பட்டது.  இந்த மகாலில் மூன்று

திருமலையில் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

பிரம்மோற்சவ நிறைவு நாளில் தீர்த்தவாரியைக் காண திருக்குளத்தில் திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீர்த்தவாரி. திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி மாலை கொடியேற்றதுடன் தொடங்கியது. விமரிசையாக நடைபெற்று வந்த இந்த உற்சவம் வெள்ளிக்கிழமை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலிலிருந்து

திருமலை: புரட்டாசி சனிக்கிழமைகளில் விஐபி பிரேக் பார்வை ரத்து

திருமலையில் புரட்டாசி மாத சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் கடந்த திங்கள்கிழமை பிறந்தது. இம்மாதத்தில் ஏழுமலையானை பார்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவர். விரதம் இருந்து பாதயாத்திரையாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். அதனால் தேவஸ்தானம் புரட்டாசி மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கும் விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது.அதன்படி செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும்

திருக்கழுகுன்றத்தில் இன்று மகா ஸ்படிக லிங்க பார்வை

திருக்கழுக்குன்றத்தில் வேதமலை வல பெருவிழாக் குழு சார்பில் அகஸ்திய கிருபா மகா ஸ்படிக லிங்கம், வேதகிரீஸ்வர் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்காக இன்று வைக்கப்பட்டது.  உலக நலனுக்காக திண்டுக்கல் நவாமரத்துப்பட்டில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒன்றரை அடி உயரம் கொண்ட அபூர்வமான மகா ஸ்படிக லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம், பொதுமக்கள் மற்றும் இறை அன்பர்கள் பார்வை செய்வதற்காக, திருக்கழுக்குன்றண் வேதகிரீஸ்வரர் மலை அடிவாரத்தில் உள்ள ராஜம் மகாலில் இன்று காலை 8 மணி

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் ஏகதின தீர்த்தவாரி உற்சவம்

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் நரசிம்மர் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதின தீர்த்தவாரி உற்சவ விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு தெப்பக்குளத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, தெப்பக்குளத்திற்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ஸா்வ தோஷநிவா்த்திக்காக புருஷ சூத்த ஹோமம், கலசத்தில் வருண ஜெபம், குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, பெருமாள் தெப்பக்குளத்தில் உற்சவ மூா்த்தியுடன் இறங்கி தீர்த்தவாரி கண்டருளினாா். தொடர்ந்து, பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கோயிலையும், தெப்பக்குளத்தையும் சப்பரத்தில் வலம்வந்தாா். பிறகு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல, மாலையிலும்

நவீன கால ஓட்டத்தில் இறைவனிடம் அதிகம் கையேந்தி நிற்பது இதற்காகத்தான்! 

இறைவன் சோதித்து அளிப்பவராக இருந்தாலும், அம்பிகை கேட்காமலேயே கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவள் அல்லவா. இன்று நவீன கால ஓட்டத்தில் நாம் அதிகம் இறைவனிடம் கையேந்தி நிற்பது குழந்தைப்பேறுக்காக. இப்படிக் கையேந்தி நிற்கும் தம்பதிகளுக்கு அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கருப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, ‘கருவளர்நாயகி’ என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் இவ்வூருக்கே கரு-வளர்-சேரி எனப் பெயர். கும்பகோணத்தின் தெற்கில் திருவாரூர் சாலையில் 6 கி.மீ தூரத்தில் மருதாநல்லூர்

ஸ்ரீவிலி. ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லித்தூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி சனி உற்சவம் நாளை முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 3.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.  இதைதொடர்ந்து 12.30-க்கு உச்சிகால பூஜையும், இரவு 8.00 மணிக்கு சாயரட்சை பூஜைகள் நடைபெறுகிறது.

திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: லட்சக்கணக்கான பக்தர்கள் பார்வை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று சக்கரஸ்நான தீர்த்தவாரி இன்று காலை நடைபெற்றது.  திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் (9-ம்) இறுதி நாளான இன்று தீர்த்தவாரி காலை நடைபெற்றது.  பிரம்மோற்சவத்தின் 7 நாள்களில் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் எழுற்தருளிய மலையப்ப சுவாமி 8-ம் நாள் காலை தன் நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளிய காட்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாலையில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி

பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளில் திருத்தேரில் மலையப்பர் பவனி

தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பிரிவினர். திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் காலை திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றதுடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 8ஆம் நாளான வியாழக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் 7 நாள்களில் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி 8ஆம் நாள் காலை தன் நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார்.தேரின் மீது வண்ணத் துணியைப் போர்த்தி,

கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்?

ஊர்த்தலைவர்களைப் பட்டக்காரர் என அழைப்பர். இச்சமூகத்தினரிடையே ஏற்படும் பிணக்குகளை, இவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பேசித் தீர்த்துவைப்பர். இவரது தீர்ப்புக்கு இருதரப்பாரும் கட்டுப்படுவர். இவர்கள் குடியிருந்த பகுதி என்பதால் பட்டக்காரர் தெரு என அழைக்கப்படுகிறது. மன்னார்குடியில் இருந்து பாமணி கோயில் செல்லும் ஆற்றுப் பாலத்தினை கடந்து வலதுபுற சாலையில் சென்றால் பட்டகாரதெருவை அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. கிழக்கு நோக்கி பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன் சோழேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி

சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஏகலக்ஷ மூலமந்திர ஜபம் 

சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 19-ம் ஆண்டு ஏகலக்ஷ மூலமந்திர ஜப யாகம் நடைபெறுகிறது.  ஆர்ய வைஸ்ய சமூகத்தாரின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 19-ம் ஆண்டு ஏகலக்ஷ மூலமந்திர ஜப யாகம் நடத்தப்பட உள்ளது. புரட்டாசி மாதம் 13 மற்றும் 14-ம் நாள் 29.09.18 சனி மற்றும் 30.09.18 ஞாயிற்றுக்கிழமையும் ரோகிணி நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஏகலக்ஷ மூலமந்திர ஜபம், தசாம்ச ஹோமம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற திருவுள்ளம் கூட்டிவைத்துள்ளது. 

திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை

சென்னை, பாடியில் உள்ள அருள்மிகு ஜெகதாம்பிகை சமேத அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை மற்றும் பரிகார பூஜை நடைபெறுகின்றது.  தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற 32 சிவாலயங்களில் ஒன்றானதும், வியாழ குரு வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்றதன் காரணமாக குருஸ்தலம் எனப் பெயர் பெற்றது. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் மற்றும்பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்களால் பாடப் பெற்ற முக்கிய குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.  இத்திருக்கோயிலில் புரட்டாசி மாதம்

மறந்ததை மஹாளயத்தில் செய்!

தமிழ் புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி மாதத்து அமாவாசை வரை வரும் 15 நாட்களை (ஒரு பக்க்ஷம்) மஹாளய பக்க்ஷம் என்பர். முதலில் சிராத்தம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்த்தால் சிரத்தையோடு நம் பித்ருக்களை (முன்னோர்களை) நினைவு கூறும் நாள் என்ற விடை கிடைக்கிறது. ஒரு இல்லறவாசியானவன் ஒரு வருடத்தில் 15 நாட்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டுமென யாக்யவல்கியர் வழிவகுத்துத் தந்துள்ளார். அவையாவன:  1) அமாவாசை; 2) மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்து கிருஷ்ண

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.  திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று காலை ரத உற்சவம் நடைபெற்றது. கோயிலின் பெரிய தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார்.  தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷத்துடன் தேரை வடம்

திருமலையில் இன்று சூரிய, சந்திரபிரபபை வாகன சேவை

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை சூரிய பிரபை வாகனம் மற்றும் இரவு சந்திரபிரபை வாகன சேவை நடைபெற்றது.  திருமலையில் செப்.13-ஆம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றதுடன் விமரிசையாக தொடங்கி நடந்து வருகிறது. அதன் 7-ஆம் நாளான புதன்கிழமை காலை மலையப்பஸ்வாமி சூரியபிரபை வாகனத்தில் பத்ரிநாராயணா் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.  உலகுக்கு ஒளியூட்டும் 7 குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணன் வாகனத்தில் யோகமுத்திரையுடன் பத்ரிநாராயணனாக செந்நிற பூக்கள், குருவிவோ் உள்ளிட்ட

கடவுளிடம் ஒப்பந்தம் போடுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!! 

அரிய பெரும் உயரிய பிறப்பு, நம் மானுடப் பிறப்பு. மகிழ்ச்சியோடு இருந்தாலும் சரி, சோதனையோடு இருந்தாலும் சரி, நாம் அன்றாடம் இறைவனைத் தொழும் வழக்கம் நம்மில் ஒரு பகுதியானோருக்கும் இருப்பதில்லை. நாயன்மார்களை நாம் போற்றுகின்றோம். வணங்குகின்றோம், புகழ்பாடுகின்றோம். ஆனால், அவர்கள் வழிபாடுகளைக் கொண்ட போக்கையும், தொண்டுகளையும் நாம் கடைப்பிடிப்பதில்லை. மூவர் முதலிகள் போல நமக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டாம்!, ஆனால், இறை வழிபாடு, அடியார் தொண்டு இதையாவது செய்து வரலாமில்லையா?!. நாம் அவனைத் தொழுவது, அவனுக்காணுவதாக இருக்க வேண்டும். நம்மை

மகாராஷ்டிராவில் ஒரே இடத்தில் நடத்தப்பட்ட இந்து – முஸ்லீம் பண்டிகை!

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் விநாயகர் சிலையும் மொஹரம் பண்டிகைக்கான வழிபாட்டுப் பொருட்களும் ஒரே இடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டன.  யாவத்மால் மாவட்டத்தில் விதுல் என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் சகோதர்களாக பழகி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லீம் பண்டிகையான மொஹரம் பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இரு பண்டிகைகளும் ஒரே இடத்தில்

பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளில் ஸ்ரீ ராமர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி வலம்

பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் காலையில் அனுமன் வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி. திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் காலையில் அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார். ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் மலையப்ப சுவாமி, அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அனுமன்

சதாசிவ பிரும்மேந்திரரும், சிருங்கேரி மகானும்..

சுமார் 220 வருடங்கள் முன்பு பரபிரம்மத்துடன் கலந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். ஸ்ரீ சதாசிவர் அப்போதைய காஞ்சி ஆசார்யாரான (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் அக்.4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா 

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் அக்.4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.  தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் இத்தல இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  இந்த கோயிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார்.  அவ்வளவு சிறப்பு வாய்ந்த குருப்பெயர்ச்சி திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் அக்டோபர் 4-ம்

Older Posts››