5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HARPO PRODUCTIONS – JOE PUGLIESE பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் மெர்கல் ஆகியோர் கூறிய விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன. பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். […]
