Press "Enter" to skip to content

Coronavirus News: கொரோனா சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம் என்ன தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

‘கொரோனா வைரஸ் சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம்’

ஐம்பது நாடுகளில் 2400க்கும் அதிகமான மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றால், கொரோனோ சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தையும் செலுத்தி இருக்கிறது.

கொரோனா அச்சம் காரணமாக சீனாவில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாசு அளவானது வியத்தகு அளவில் குறைந்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள படத்தில் சீனாவில் இந்தாண்டு நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு பெரியளவில் குறைந்துள்ளது தெரிகிறது.

அமெரிக்கா – தாலிபன் அமைதி ஒப்பந்தம்: முடிவுக்கு வருகிறதா ஆஃப்கன் போர்?

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட வகை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் தாலிபன் அமைப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

விரிவாகப் படிக்க:அமெரிக்கா – தாலிபன் அமைதி ஒப்பந்தம்: முடிவுக்கு வருகிறதா ஆஃப்கன் போர்?

மலேசிய பிரதமர் ஆகிறார் மொகிதின் யாசின் – யார் இவர்?

மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் மூலம் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை நம்ப முடிகிறது என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:மலேசிய பிரதமர் ஆகிறார் மொகிதின் யாசின் – யார் இவர்?

கோவையில் 21 வயது கல்லூரி மாணவி கொலை – இளைஞர் மீது வழக்கு

கோவையில் திருமணம் செய்து கொள்ள தாமதித்ததால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கீரணத்தம் பகுதிக்கு அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த நந்தினி (வயது 21) அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார்.

விரிவாகப் படிக்க:கோவையில் 21 வயது கல்லூரி மாணவி கொலை – இளைஞர் மீது வழக்கு

டெல்லி மத வன்முறையில் காவல்துறையின் பங்கை யார் விசாரிப்பது?

பிப்ரவரி 29ம் தேதி நிலவரப்படி டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உள்ளது. மேலும் காயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ”கடந்த ஏழு தசாப்தமாக இது போன்ற இந்து-முஸ்லிம் பிரச்சனையை டெல்லி கண்டதில்லை” என டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கையை பார்த்துவிட்டு பலர் கூறுகின்றனர்.

விரிவாகப் படிக்க:டெல்லி கலவரத்தில் காவல்துறையின் பங்கை யார் விசாரிப்பது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »