Press "Enter" to skip to content

ஐஸ்லாந்து, அண்டார்டிகா: அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தில் தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம் மற்றும் பிற செய்திகள்

அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம்

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன.

இதன் காரணமாக 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இன்டர்கம்பரிசன் திட்டம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்

மலேசியாவில் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 428ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் சந்தேக நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் கண்காணிப்பதும் தீவிரமடைந்துள்ளது.

விரிவாகப் படிக்க:கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்

நடிகர் விஜய்: “சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது”

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் “மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது” என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன.

விரிவாகப் படிக்க:நடிகர் விஜய்: “சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது”

கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறியிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பிறகு இந்த தொற்றின் மையமாக ஐரோப்பா ஆகியிருப்பதாகவும் அறிவித்தது.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »