Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிறைச்சாலை உடைப்பு, தனிமைப்படுத்தப்பட்ட பாலத்தீனம் – என்ன நடக்கிறது? Corona Global updates

கொரொனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் 383, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,767 பேர் பலியாகி உள்ளனர்.

சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு மட்டும் 46,450 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பாலத்தீனத்தின் நிலைமை என்ன?

பாலதீனத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உலகத்தில் குறுகிய இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் காஸா பகுதியும் ஒன்று.

2007ஆம் ஆண்டு ஹமாஸ் கட்டுப்பாட்டில் இந்த பகுதி சென்றதிலிருந்து இந்த பகுதியை இஸ்ரேலும், எகிப்தும் முடக்கி உள்ளது.

இப்படியான சூழலில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் அதே நேரம் அந்த பகுதி பல ஆண்டு காலமாகத் தனிமைப்படுத்தப்பட்டே வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் அபாயம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அடுத்த ஆறு மாத கால பாலத்தீனத்திற்கு 150 மில்லியன் டாலர்களைத் தருவதாக கத்தார் உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேலின் நிலை?

இஸ்ரேல் முழுமையாக முடக்கப்பட உள்ளது. மக்கள் உணவு, மருத்துவத்திற்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

சிறைசாலை உடைப்பு

கொலம்பியா தலைநகரான பொகொடாவில் உள்ள மிகப்பெரிய சிறையொன்றில் கொரோனா அச்சம் காரணமாக அங்குள்ள கைதிகள் சிரையிலிருந்து தப்பிக்க முடிவு செய்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 83 கைதிகள் காயம் அடைந்தனர்.

சிறைச்சாலையில் சுகாதார குறைபாடு காரணமாகவே அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளதாக வரும் தகவல்களை அந்நாட்டு சட்ட அமைச்சர் மறுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »