Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை – வெவ்வேறு நாடுகளில் மாறுபடும் எண்ணிக்கையும், காரணங்களும்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை செய்வது ஒரு முக்கிய வழியாக கருதப்படுகிறது.

ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று சுகாதாரப்பிரிவு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி பிரிவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியரான ஜான்சன் கூறுகையில், ”தினமும் 10,000க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் தென் கொரியா, இரண்டு நாட்களில் சில நாடுகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் விஞ்சி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

இதேபோல் அதிக அளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

”அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள் என்பதே” என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா பரிசோதனை அளவு வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகிறது.

ஆரம்பத்தில் அதிக அளவில் தென் கொரியா கொரோனா தொற்று பரிசோதனை நடத்தியது. தற்போது அதிக அளவில் பரிசோதனைகளை அமெரிக்கா மேற்கொள்வதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அண்மையில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை என சில ஊடகங்கள் மற்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் இந்தியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் புனேவில் மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனைகள் நடந்த நிலையில், பிறகு 30க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனைகள் ஆரம்பகட்ட பரிசோதனைகள் நடந்தது. தற்போது கூடுதல் இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது எப்படி?

முன்னதாக பிரிட்டனில் அவசரசிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் செவிலியருக்குதான் அதிக அளவில் கொரோனா தொற்று பரிசோதனைகள் நடந்தன. சமூக நல பணியாளர்களுக்கும் அதிக அளவில் பரிசோதனைகள் நடந்தன.

இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு இத்தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த பரிசோதனைகள் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்தில் நடந்து வருகின்றன.

இனி வரும் காலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவர்கள் அதிகமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யும் கருவியை வீட்டிற்கு அனுப்பி ரத்த மாதிரிகளை வாங்கி பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்புகின்றனர். இந்த முறையில் அமேசான், ராயல் மெயில்,பூட்ஸ் போன்ற நிறுவனங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியன ஒருங்கிணைந்து செயல்படுகின்றன

வேறு யார் பரிசோதிக்கப்பட்டனர்?

மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு முன்னர், காய்ச்சல் அதிகம் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது

ஏற்கனவே கொரோனா தொற்று யாருக்காவது இருந்துள்ளதா என சோதித்து பார்க்கும் புதிய சோதனை முறையை ஆராய்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி இருந்திருந்தால் அவர்கள் ரத்தத்தில் அதற்கான ஆன்டிபாடிகள் இருக்கலாம் என நினைக்கின்றனர்.

கருத்தரிப்பு சோதனையைப் போல இதற்கும் ரத்த துளிகளையே பயன்படுத்துவர்.

இது, நோய் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என பார்ப்பதற்கும், நோய் வந்தவர்கள் வேலைக்கு திரும்பலாமா என பார்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இந்த பரிசோதனைக்காக 35 லட்ச ரத்த மாதிரிகளை வாங்கியுள்ளதாகவும் பரிசோதனை வெற்றி பெற்றால் இந்த புது பரிசோதனை முறை விரைவிலேயே அனைவருக்கும் கிடைக்கும் எனவும் பிரிட்டன் அரசு கூறியுள்ளது

அதேவேளையில் ஜெர்மனியில் கூடுதலாக பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஜெர்மனியில் 176 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதேவேளையில் பிரிட்டனில் 48 கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் உள்ளன.

ஆரம்பத்தில் குறைவான அளவே கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்து வந்த பிரான்ஸ், தங்களுக்கு அருகாமையில் உள்ள இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாதிப்பு மிகவும் அதிகமானதை தொடர்ந்து கூடுதலாக பரிசோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஹாங்காங் போன்ற இடங்களில் கொரோனா பரிசோதனை மிக அதிக அளவில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவியிருக்கக்கூடும் என மருத்துவ அதிகாரிகள் குறிப்பிடும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு அங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

தென் கொரியா மற்றும் சிங்கப்பூரிலும் இது போன்றே அதிக அளவில் பரிசோதனைகள் நடைபெறுகிறது.

ஆனால், இது போன்று அனைத்து நாடுகளிலும் நடப்பதில்லை. பல நாடுகளிலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனைகள் நடக்கின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள மருத்துவ வசதி மற்றும் மக்கள்தொகை போன்றவையும் இதற்கு காரணங்களாக அமைகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »