Press "Enter" to skip to content

கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் – காணொளிகளை தடை செய்யும் யூடியூப் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம்.

அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து ‘கான்ஸ்பிரஸி தியரி’ (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது.

கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.

இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.

இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த காணொளியை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து காணொளிகளையும் நீக்குகிறது.

அனுமதி திடீர் ரத்து – காரணம் என்ன?

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த 13 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மாலையில் அனுமதி அளித்திருந்த தமிழக அரசு, தற்போது அந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக, தொடர்ச்சியான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

விரிவாகப் படிக்க: தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தரப்பட்ட அனுமதி திடீர் ரத்து – காரணம் என்ன?

முடங்கிய இந்தியா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் திடீரென லாக் டவுன் அமல்படுத்தப்பட்டதால், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலிருந்து உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூருக்கு திரும்பிய ஆயிரக்கணக்கானோரில் ராகோராமும் ஒருவர்.

விரிவாகப் படிக்க: கமனைவியை அழைத்துக் கொண்டு 750 கி.மீ சைக்கிளில் பயணித்த தொழிலாளி

கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மையங்கள்

இந்தியாவில் முன்பு பயன்பாட்டில் இருந்த எஸ்.டீ.டி பூத்கள் மற்றும் தென் கொரியாவில் உள்ள பரிசோதனை மையங்களை அடிப்படையாக கொண்டு கேரள மருத்துவர்கள் இந்த மாதிரிகளை சேகரிக்கும் பூத்தை உருவாக்கியுள்ளனர்.

விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் பரிசோதனை: கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மையங்கள் செயல்படுவது எப்படி?

சூப்பர் பிங்க் மூன்

ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ”சூப்பர் பிங்க் மூன்” என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது?

விரிவாகப் படிக்க: சூப்பர் பிங்க் மூன்: எங்கு, எப்படி, எப்போது காணலாம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »