Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

“அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

ஸ்பெயினில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் கட்டற்ற உழைப்பு சுரண்டல் நடப்பது பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்பெயின் அல்மெரியா மாகாணத்தில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பழங்களும், காய்கறிகளும்தான் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த பண்ணைகளில் ஏராளமான ஆப்ரிக்க மக்கள் பணியாற்றுகிறார்கள். அதில் சிலர் எந்த ஆவணமுமற்ற புலம்பெயர் தொழிலாளர்கள். இங்கு ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை மற்றும் இருப்பிட வசதி செய்து தரப்படவில்லை என பல வருடங்களாகக் குற்றச்சாட்டு உள்ளது.

“அடிமைகளாக இருக்க முடியுமென்றால் இருங்கள் இல்லையென்றால் கிளம்புங்கள் ,” என பண்ணை உரிமையாளர்கள் சொல்வதாக அங்கு பணியாற்றும் ஆஃப்ரிக்க மக்கள் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு இந்த பண்ணைகளில் பிபிசி ரகசிய புலனாய்வை மேற்கொண்டது. அதில் இந்த குற்றச்ச்சாட்டுகள அனைத்தும் உண்மை தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பண்ணை உரிமையாளர்கள் மறுக்கிறார்கள்.

சீனாவின் வெற்றி தோல்விகளை மலேசியா அறிய விரும்புவது ஏன்?

மலேசியாவில் இன்று புதிதாக 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,389ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இன்று 194 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தில் நான்காவது முறையாக, வைரஸ் தொற்றியோரின் அன்றாட எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக, அதாவது இரட்டை இலக்கங்களில் பதிவாகி உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: சீனாவின் வெற்றி தோல்விகளை மலேசியா அறிய விரும்புவது ஏன்?

“தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா வைரஸ்” – தமிழக நிலவரம் என்ன?

தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அதிகபட்சமாக சென்னையில் இன்று(ஏப்ரல் 19) 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகம் முழுவதும் 46 நபர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:“ஏற்கனவே எட்டு… இப்போது மேலும் நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ்”

“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்”

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” – போலீஸ் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ்: இன்று முதல் ஓரளவு தளர்த்தப்படும் ஊரடங்கு – எங்கு, எப்படி?

இந்தியாவில் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.இந்திய அரசு அதிகாரிகள் கொரோனா வைரஸ் குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த முக்கிய தகவல்களை தொகுத்துள்ளோம்.

விரிவாகப் படிக்க:இந்தியாவில் நாளை முதல் ஓரளவு தளர்த்தப்படும் ஊரடங்கு – எங்கு, எப்படி?

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »