Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டொனால்ட் டிரம்ப் பேசியவை – சீனாவுடன் சண்டையிட அமெரிக்காவுக்கு இது சரியான நேரமா?

சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்து வரும் வார்த்தை போருக்கு பெரும்பாலும் உள்நாட்டு அரசியலும், எதிர்வரும் தேர்தலும்தான் காரணம். ஆனால், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அணுகுமுறை வரும் மாதங்கள், ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க கட்டத்தை சீனா கையாண்ட விதத்தை விமர்சிப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை கொண்டு அரசியல் ஆதாயத்தை பெறுவதற்கு டிரம்ப் மட்டுமின்றி எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து களமிறங்கவுள்ள ஜோ பிடனும் முயற்சித்து வருகின்றனர். இருவரும் தொடர்ந்து சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், சீனாவுடன் அமெரிக்கா சண்டையை வைத்துக்கொள்வதற்கு சரியான நேரமா இது? என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தனது பிராந்தியத்தில் ராணுவ வல்லரசாக விளங்கும் சீனா, அமெரிக்காவுக்கே சவால் கொடுக்கும் நிலையை நோக்கி பயணிக்கிறது. 5ஜி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவின் வளர்ச்சி வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

அதுமட்டுமின்றி, உலகமெங்கும் வர்த்தகம் – நிதி உறவுகளை பலப்படுத்தி வரும் சீனாவின் ஆதிக்கம் சர்வதேச அரங்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவை மேற்குலக நாடுகள் கண்காணிக்க தொடங்கியுள்ளன.

குறிப்பாக, சர்வதேச அரங்கில் சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்வது அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு கொள்கைக்கான சவாலாக உருவெடுத்துள்ளது. ஆனால், அதே சூழ்நிலையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளில் சீனாவுடன் இணைந்து செயல்படும் வழியையும் அமெரிக்க அதிபர் ஆராய வேண்டியது அவசியம்.

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 10498 1773 459
குஜராத் 4395 613 214
டெல்லி 3515 1094 59
மத்தியப் பிரதேசம் 2660 482 137
ராஜஸ்தான் 2584 836 58
தமிழ்நாடு 2323 1258 27
உத்திரப் பிரதேசம் 2203 513 39
ஆந்திரப் பிரதேசம் 1403 321 31
தெலங்கானா 1038 397 26
மேற்கு வங்கம் 795 139 33
ஜம்மு & காஷ்மீர் 614 216 8
கர்நாடகம் 565 229 21
கேரளம் 497 383 4
பிகார் 418 82 2
பஞ்சாப் 357 90 19
ஹரியாணா 313 209 3
ஒடிஷா 142 39 1
ஜார்கண்ட் 109 20 3
உத்திராகண்ட் 57 36 0
சண்டிகர் 56 17 0
அசாம் 42 29 1
சத்தீஸ்கர் 40 36 0
இமாச்சல பிரதேசம் 40 28 1
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 33 15 0
லடாக் 22 16 0
புதுவை 8 5 0
கோவா 7 7 0
மணிப்பூர் 2 2 0
மிசோரம் 1 0 0

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

டிரம்ப் என்ன சொன்னார்?

“சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற கருத்துக்கு நம்பிக்கை அளிக்கும் ஆதாரத்தை நீங்கள் கண்டுள்ளீர்களா?” என்று கடந்த வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த டிரம்ப், “ஆம், என்னிடம் உள்ளது” என்று பட்டும்படாமல் பதிலளித்தார். மேலும், “சீனாவின் மக்கள் தொடர்பு நிறுவனத்தை போன்று செயல்படுவதற்கு உலக சுகாதார நிறுவனம் வெட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

இந்த கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்குமாறு பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் உங்களிடம் அதுகுறித்து சொல்ல முடியாது. அதை சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை” என்று டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைய வேண்டுமென்று சீனா விரும்புவதாக குற்றஞ்சாட்டினார்.

வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்ததா என்று விசாரிக்குமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமையன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல் தொடக்க கட்டத்திலேயே தெரிந்திருந்தும் அதை சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் மூடி மறைத்தனவா என்பது குறித்தும் விசாரிக்குமாறு வெள்ளை மாளிகை அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு அமைப்புகள் என்ன சொல்கின்றன?

அமெரிக்க உளவு நிறுவனங்களை மேற்பார்வையிடும் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் கடந்த வியாழக்கிழமையன்று கோவிட்-19 நோய்த்தொற்றின் தோற்றம் தொடர்பாக விசாரித்து வருவதாக அறிக்கை வெளியிட்டது.

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடனான தொடர்பு மூலம் இந்த நோய்த்தொற்று பரவல் தொடங்கியதா அல்லது வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக இது நேர்ந்ததா என்பதை கண்டறியும் பணியை அமெரிக்க உளவுத்துறை மேற்கொள்ளும்.”

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா – சீனாவில் பரப்பப்பட்டு வரும் உறுதிப்படுத்தப்படாத கோட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இந்த விவகாரம் குறித்த அமெரிக்க உளவுத்துறையின் தெளிவான பார்வையை இந்த அறிக்கை வழங்கியுள்ளது.

வுஹான் ஆய்வகம்

1950களில் நிறுவப்பட்ட வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, சீனாவின் முதல் உயிர் பாதுகாப்பு தர நிலை 4ஐ பெற்ற ஆய்வகத்தைக் கொண்டுள்ளது.

இத்தகைய ஆய்வகங்கள் சில தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் உள்ள மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளைக் கையாளுகின்றன. குறிப்பாக, வௌவால்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை இந்த ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »