Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உங்களோடு வரிசையில் நிற்கும் ஒருவர் திடீரென தும்மினால், அது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்தாக அமையும்? நீங்கள் உணவு விடுதிக்குப் போகலாமா? அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாமா?

உலக நாடுகள் பலவும், தற்போது ஊரடங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. பொது வெளிகளில் மக்கள் செல்ல அரசுகள் மெதுவாக அனுமதிகளை வழங்கத் தொடங்கியுள்ளன இந்த நிலையில், ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாவதற்கான மற்றும் வைரஸை பரப்புவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதன்மூலமாக, வைரஸ் இரண்டாவது முறையாக நாட்டினுள் பரவலாம் என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.

இத்தகைய அச்சத்தை தவிர்த்து, கோவிட்-19 வரைஸ் தொற்றிற்கு ஆளாகாமல், மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல இருக்கும் வழிகளை என்னென்ன என்று அறிந்துகொள்ள, நோயெதிர்ப்பு நிபுணரும், உயிரியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் இரின் பிரோமேஜை சந்தித்தோம்.

அமெரிக்காவில் இருக்கும் மாசச்சுவர்ட்ஸ் டார்ட்மௌத் பல்கலைக்கழகத்தில், கொள்ளை நோயியல் குறித்து கற்பிக்கிறார். இவர் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கூர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த துறையில் வல்லுநர் என்பதையும் தாண்டி, இது குறித்த அறிவியல் சார்ந்த தரவுகளைப் பிறருக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக அவர் பார்க்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் தனது சமூகதளத்தில் எழுதிய கட்டுரை இதுவரை 1.6 கோடி முறை படிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் வெளியே செல்லத்தொடங்கும் இந்த நிலையில், தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்ற அவரின் அறிவுரைகளைப் பார்ப்போம்.

மக்களுக்கு நோய்த்தொற்று எங்கு ஏற்படுகிறது?

பெரும்பான்மையான மக்களுக்கு இந்த நோய், வீட்டில் உள்ள நபர்கள் மூலமாகவே பரவுவதாக அவர் கூறுகிறார். நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர், தன்னை அறியாமல் அதனோடு வீட்டிற்கு வரும்போது இவ்வாறு ஆகிறது என்கிறார்.

ஆனால், வீட்டிற்கு வெளியே நமது பாதுகாப்பு என்பது எப்படி உள்ளது? தினமும் நாம் நடைபயிற்சிக்காக செல்லும் பூங்காக்களில் நமக்கு பாதுகாப்பு இருக்குமா? மற்றவர்களைப்பற்றி சிந்திக்காமல், முகக்கவசம் அணியாமல் பூங்காவில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் மூலம் நமக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதா?

“பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பு குறைவு” என்கிறார் பேராசிரியர் பிரோமேஜை. “பொதுவெளிகளில், நோய் கரைந்துபோக நிறைய வாய்ப்புள்ளது. சுவாசத்தை நீங்கள் வெளியே விடும்போது, அது மிக்குறைந்த அளவுகளாக சிதரிப் போய்விடுகின்றன.”

ஆக, இந்த வரைஸ் உங்களில் உடலை தாக்குவதற்கு தேவையான நேரம் வரையில் நீங்கள் அந்த ஒரே இடத்தில் நிற்கமட்டீர்கள்.

“ஒரு வரைஸ் மூலமாக உங்களின் உடலில் தொற்று ஏற்பட வேண்டுமென்றால், அது குறிப்பிட்ட அளவில் உங்களின் உடலை வந்து சேர வேண்டும். மெர்ஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து கணக்கிட்டதில் சார்ஸ் வைரஸின் 1,000 வரைஸ் துகள்கள் இருந்தால், ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.” என தனது கட்டுரையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறிப்பிட்ட எண்ணிக்கை என்பது, நிச்சயம் விவாதத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். இவற்றை பரிசோதனைகள் மூலம் தீர்மானிக்கும் அவசியம் இல்லை என்றாலும், ஒரு நோய்தொற்று எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள தேவையான தகவல்களை இவை அளிக்கின்றன.

“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 1000 வைரஸ் துகள்களை நீங்கள் எப்படி நுகர்ந்தாலும் உங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். அது ஒரே நேரத்தில் நீங்கள் 1000 வைரஸ் துகள்களை சுவாசத்தின் மூலமாக உள்ளிழுத்துக்கொண்டதாக இருக்கலாம் அல்லது 100 துகள்களை 10முறை உள்ளிழுத்திருக்கலாம் அல்லது 10 துகள்களை 100 முறை இழுத்திருக்கலாம். எப்படியும் அது உங்களை தொற்றுவரை கொண்டு செல்லும்.” என்கிறார் அவர்.

அறிகுறிகளை வெளிப்படுத்துவோர் மூலம் எப்படி பரவுகிறது?

இருமல் மற்றும் தும்மல் மூலம் நிச்சயமாக நோய்கள் பரவுகின்றன என்றாலும், அவை பரவும் வேகத்தில் அதிக வித்தியாசம் உள்ளன. நீங்கள் ஒருமுறை இருமும்போது, 3000 நீர்த்துளிகள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வெளியேறுகிறது என்கிறார் மருத்துவர் பிரோமேஜ்.

இதில் உள்ள துளிகளில் பெரும்பான்மையானவை பெரியதாக இருக்கும் என்பதால், ஈர்ப்பு விசையின் காரணமாக அவை பூமியில் உடனடியாக விழுந்துவிடும். ஆனால், சில துளிகள் காற்றில் இருக்கும், அவை நீங்கள் இருக்கும் அறையையும் தாண்டிச்செல்லக்கூடும்.

ஆனால், உங்களோடு லிப்டில் வரும் ஒருவர் இருமுவதற்குப் பதிலாக தும்பினால், உங்களின் பிரச்சினை இன்னும் 10 மடங்கு அதிகம் என்றே கூறலாம்.

ஒருவர் தும்பும் போது, 30,000 துளிகள் வெளியேறுகின்றன. அவை மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வெளியேறுவதால், சிறுதுளிகள் கூட அந்த அறையைத்தாண்டி வெகுதொலைவிற்கு எளிதில் செல்ல முடியும், என்கிறார் பிரோமேஜ்.

நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஒருவர் ஒரு அறையில் இரும்பினாலோ, தும்பினாலோ, அதிலிருந்து 200 மில்லியன் வைரஸ் துகள்கள் வெளிவரக்கூடும் என்று அவர் எழுதியுள்ளார்.

“எனவே, உங்களுடன் நேருக்கு நேர் நின்று பேசிக்கொண்டு இருக்கும் ஒருவர் தும்பினாலோ இரும்பினாலோ, உங்களின் உடலில் 1,000 வைரஸ் துகள்கள் சென்று, நீங்கள் நோய்த்தொற்றிற்கு உள்ளாவது எவ்வளவு சுலபம் என இதன்மூலமாக புரிந்துகொள்ள முடியும்.” என்கிறார்.

அவர் தும்பும்போதோ, இரும்பும்போதோ நீங்கள் அங்கு நிற்கவில்லை என்றாலும் கூட, நீங்கள் முழுமையாகப் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்று கூறிவிட முடியாது. வைரஸ்களுடன் இருக்கும் துகள்கள் சில நிமிடங்களுக்குக் காற்றில் இருக்கும். அவை இருக்கும் நேரத்தில் நீங்கள் அந்த அறைக்குள் நுழைந்தால், தொற்றுள்ள காற்றை நீங்கள் சுவாசிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது, நோய்த்தொற்று ஏற்பட இவை போதுமானவை.

அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து எப்படிபரவுகிறது?

நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அறிகுறிகளைக் காண்பிக்கத் தொடங்க 5 நாட்கள் வரை ஆகக்கூடும்; சிலர் கடைசி வரை அறிகுறிகள் காண்பிப்பது இல்லை.

இதையும் தாண்டி, ஒருவர் சுவாசிக்கும்போது வெளிவிடும் காற்றில் கூட, வைரஸ் சுற்றுச்சூழலை வந்தடைய வாய்ப்புள்ளது.

“ஒருவர் ஒருமுறை காற்றை சுவாசித்து வெளிவிடும்போது, 50-5,000 துகள்கள் வெளியேறுகின்றன. இதில் பெரும்பான்மையானவை மெதுவாக வெளியேறுவதால், பூமியில் விழுந்துவிடுகின்றன.” என்கிறார் அவர். அதிலும், மூக்கில் மூச்சு விடுவோரிடமிருந்து இன்னும் குறைவான துகள்களே வெளிவருவதாக பிரோமேஜ் கூறுகிறார்.

சுவாசத்தின் மூலமாக, ஒவ்வொரு முறையும் கொரோனா வைரஸின் எத்தனை துகள்கள் வெளியே வருகின்றன என நமக்கு தெரியாது என்னும் போதிலும், இன்புளூவென்சா நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின், ஒரு நிமிட சுவாசத்தில் மூலமாக 3-20 வைரஸ் ஆர்.என்.ஏ நகல்களை வெளியிடுகின்றனர் என ஒரு ஆய்வு முடிவு கூறுவதாகக் குறிப்பிடுகிறார் மருத்துவர் பிரோமேஜ்.

இதே எண்ணிக்கையை நாம் கொரோனாவிற்கும் பயன்படுத்த முடிந்தால், ஏற்கனவே நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் 20 வைரஸ் துகள்களை வெளிவிடுவதாகப் பொருள்படும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள ஒருவரிடமிருந்து வெளியேறும் சுவாசத்தை மற்றொருவர் 50 நிமிடங்களுக்கு உள்வாங்கும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே முன்பு நாம் குறிப்பிட்ட 1,000 வைரஸ் துகள்களை உள்ளிழுத்து, நோய்வாய்ப்பட முடியும் ( இது பரிந்துரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை மட்டுமே, சரியான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.)

அதனால், தொடர்ந்து இரும்பாமல், தும்பாமல் இருக்கும் ஒருவருடன் ஒரே அறையில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதை இதன்மூலமாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தொடர்ந்து பேசுவது, இவ்வாறு வெளியேறும் துகள்களின் எண்ணிக்கையை 10 மடங்கு அதிகமாக்குவதாக மருத்துவர் பிரோமேஜ் குறிப்பிடுகிறார். இதன்மூலம், ஒரு நிமிடத்தில் சுமார் 200 வைரஸ் நகல்கள் வெளிவரலாம் என அவர் கூறுகிறார்.

பாட்டுப் பாடுவதும், சத்தமாக கத்துவதும், காற்றில் அதிக துகள்களை உருவாக்கும் என்கிறார் பிரோமேஜ்.

“நீங்கள் பாடினாலோ, சத்தமாக கத்தினாலோ, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் துகள்கள் நீண்ட தூரத்தைச் சென்றடையக்கூடும். மேலும், அவை நீங்கள் மிகவும் அழுத்தம் கொடுப்பதால், இவை உங்களின் நுரையீரலின் அடியிலிருந்து வரக்கூடும்.”

இத்தகைய துகள்கள், நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நுரையீரலின் திசுக்கள் உள்ள இடங்களிலிருந்து வெளிவருகின்றன.

“அழுத்தத்தின் மூலமாக வெளியேறும்போது, சுவாசத்துகள்கள் அதிக அளவில் காற்றில் சேர்கின்றன; அதிலும், இவை அதிக வைரஸ் தாக்கம் உள்ள உடல்பகுதிகளிலிருந்து வெளிவருகின்றன.”

ஆகவே, வீட்டிற்கு வெளியே ஏற்படக்கூடிய வைரஸ் பரவல் என்பது பெரும்பாலும் அறிகுறிகள் வெளிவராத நபர்கள் மூலமாகவே பரவுகின்றன.

எத்தகைய சுற்றுச்சூழல் மிகவும் பாதுகாப்பாற்றது?

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் பணிகளில் உள்ளவர்களுக்கே பாதிப்பு அதிகம். சில குறிப்பிட்ட சுற்றுச்சுழல்களும், அதிகப்படியான பரவலுக்கு வழிவகுத்துத்ததை நாம் பார்த்துள்ளோம். சொகுசுக் கப்பல்கள் மூலம் எப்படி பரவியிருக்கும் என்று மக்கள் கற்பனை செய்துபார்க்கும் நேரத்தில், அலுவலகங்கள், விளையாட்டுக்கூடங்கள், பிறந்தநாள், இறுதிச்சடங்கு உள்ளிட்ட இடங்களை சுட்டிக்காட்டுகிறார் பிரோமேஜ்.

வீட்டிற்குள் இருக்கும் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட உள்ள வாய்ப்புகளைவிட இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மக்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர். காரணம், இந்த மக்கள் அத்தகைய வைரஸ் நிறைந்துள்ள காற்று இருக்கும் இடத்தில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

“அவர்கள் 50 அடி இடைவேளையிலேயே அமர்ந்து இருந்தாலும், கால் சென்டர் போன்ற இடங்களில் பணியாற்றும்போது,காற்றில் வெளியாகும் வைரஸ் துகள்கள் குறையான அளவிலானதாக்வே இருந்தாலும், குறிப்பிட்ட சில நேரத்திற்கு அவர்கள் அந்த சுற்றுச்சூழலிலேயே இருந்தால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதுவே போதுமானது ஆகும்.” என்கிறார்.

சரியான காற்று வசதி இல்லாத அலுவலகங்கள் மிகவும் ஆபத்தானவை. தென்கொரியாவில் ஒரு அலுவலகத்தில் உள்ள 216 பேரில் 96 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார் பிரோமேஜ். அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அலுவலகத்தில் ஒரு பக்கமாக அமைக்கப்பட்டிருந்த ஒரே அலுவலகப்பகுதியை பயன்படுத்தியது தான் காரணம் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

இதேபோல, பல் மருத்துவர்களுக்கும் இதற்கான பாதிப்பு அதிகமாக உள்ளது என்கிறார் அவர்.

“அவர்களின் பணியே, அதிக அளவிலான துகள்களை உருவாக்கக்கூடிய ஒரு தொழில் தான். பிறருக்கு பாடம் கற்பிக்கும் தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் உள்ளது” என்கிறார் அவர்.

“இப்போது நம்மைச்சுற்றி இருக்கும் பல வகுப்பறைகள், அதிகப்படியான இளம் மாணவர்களையும், வயதான ஆசிரியர்களையும் கொண்டதாக உள்ளன. இதுபோன்ற இடங்களை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவது என்பது குறித்து அதிக சிந்தனைகள் நடக்கின்றன.”

திறந்தவெளிகளும் – கட்டடங்களும்

திறந்தவெளி சுற்றுசூழல்களிலிருந்து மிகவும் குறைவான நொய்த்தொற்றுகளே ஏற்பட்டுள்ளன என்கிறார் மருத்துவர் பிரோமேஜ். காற்றும், அங்குள்ள பரந்த இடமும், துகள்களை கரைந்துபோகச் செய்கின்றன. அதேபோல, சூரிய வெளிச்சம், வெப்பம் ஆகியவை கூட, வைரஸ் தொடர்ந்து காற்றில் இருக்கும் நேரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், கட்டடங்களுக்குள்ளே நடக்கும் பேச்சுவார்த்தைகளாக உங்களின் நிகழ்ச்சி இருந்தால், சற்று ஆப்பத்தானவையாக இருக்கலாம்.

அதிக மக்கள் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கும் இடமாக இருந்தால், அங்கு ஆபத்து அதிகமே. கட்டடங்களுக்கு உள்ளே என்று வரும்போது, சமூக விலகல் பழங்கள் கூட, காலபோக்கில் சற்று குறைந்த தாக்கத்தை கொண்ட ஒரு பழக்கங்களாகவே மாறுகின்றன.

மறுசுழற்சி செய்யப்பட்ட காற்று வந்துபோகும் இடமோ, அளவான காற்றுச்சுழற்சி இருக்கும் இடமாக இருந்தால் அவை குறிப்பாக பிரச்னைக்குறைய இடங்களாகவே இருக்கின்றன.

ஆனால், ஒரு இடத்திற்கு பொருட்கள் வாங்கச்சென்றால், வாடிக்கையாளர் என்ற முறையில், உங்களுக்கு அது குறைவான ஆபத்தாகவே இருக்கின்றது. அதிலும், அந்த குறிப்பிட்ட சூழலில் நீங்கள் முடிந்த அளவு குறைந்த நேரத்தை செலவிட்டால் மட்டுமே இதுவும் சாத்தியமாகிறது.

ஆபத்தை எப்படி அளவிடுவது?

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாம் தினமும் என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடப்போகிறோம், அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் பிரோமேஜ்.

கட்டடங்களுக்கு உள்ளே நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால், அங்கு எவ்வளவு காற்று வந்து செல்லும் வசதி இருக்கிறது, அங்கு எவ்வளவு மக்கள் இருப்பார்கள், நீங்கள் அங்கு எவ்வளவு நேரம் இருக்கப்போகிறீர்கள் உள்ளிட்டவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

“நல்ல காற்றோட்டம் இருக்கும் இடத்தில், மிகவும் குறைந்த நபர்களுக்கு இடையே இருக்கப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஆபத்து குறைவே. ஒரு பெரிய அலுவலக தளத்தில் இருக்கப்போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக என்னென்ன ஆபத்துகள் உள்ளன என பாருங்கள் (காற்றோட்டம், எத்தனை நபர்கள், அந்த இடத்தின் அளவு அகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்). உங்களின் வேலை காரணமாக நீங்கள் தினமும் சத்தமாக கத்த வேண்டும் அல்லது யாரிடமாவது நேருக்கு நேர் பேச வேண்டும் என்றால், உங்களுக்கு இருக்கும் ஆபத்துகள் குறித்து யோசித்து முடிவு செய்யுங்கள்.”

சுவாசத்திலிருந்து வரும் துகள்கள் வேகமாக கரைந்து போய்விடும் என்பதால், திறந்தவெளிகள் சற்று ஆபத்து குறைந்தவையே. ஆனாலும், ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட தேவைப்படும் துகள்களின் அளவு மற்றும் கால அளவு ஆகியவற்றில் கவனம் கொள்ளுங்கள்.

“சுவாசத்தின் மூலமாக வரக்கூடிய பாதிப்புகள் குறித்து நான் இங்கு பேசியுள்ளேன். ஆனாலும், ஒரு தரைப்பகுதியிலிருந்து வரக்கூடிய பாதிப்புகளை மறக்காதீர்கள். நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் அந்த சுவாசத்துகள்கள், நிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் விழதான் செய்கின்றன. உங்களின் கைகளை தொடர்ந்து பல முறை கழுவுங்கள். முகத்தை தொடாதீர்கள்!” என்று தனது கட்டுரையில் பிரோமேஜ் எழுதியுள்ளார்.

உங்களின் பிறந்தநாளின் போது, கேக் மேல் வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தியை ஊதி அணைக்காமல் இருப்பது இந்த ஆண்டு மிக முக்கியம் என்பதையும் மறக்காதீர்கள்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »