Press "Enter" to skip to content

சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் நோக்கத்தை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளத்தில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.

இந்த உத்தரவில் கையெழுத்திடும் போது சமூக ஊடக தளங்களுக்கு “சரிபார்க்கப்படாத அதிகாரம்” இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எனினும், இந்த செயலாக்க ஆணையே சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பழைமைவாத கருத்துகளை கட்டுப்படுத்துவது அல்லது தணிக்கை செய்வதாக சமூக ஊடக இணையதள நிறுவனங்களை டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

கடந்த புதன்கிழமையன்று, தனது இரண்டு ட்வீட்டுகளுக்கு உண்மை சரிபார்ப்பு இணைப்புகளைச் சேர்த்த ட்விட்டர் நிறுவனத்தின் மீது தேர்தல் தலையீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டிரம்ப் முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவத் தொடங்கியதாக ட்விட்டரில் பதிவிட்ட சீன அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவரின் இரண்டு பதிவுகளில் “கோவிட்-19 தொடர்பான உண்மைகளை தெரிந்துகொள்ள” என்ற இணைப்பை சேர்த்ததாக நேற்று ட்விட்டர் தெரிவித்தது.

தமிழ் இலக்கியத்தில் வெட்டுக்கிளி தாக்குதல்: 1662ல் மதுரையில் நடந்தது என்ன?

தமிழ் இலக்கியங்களில் வெட்டுக் கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் நிறையவே இருக்கின்றன. 1976ல் கி. ராஜநாராயணன் எழுதி வெளிவந்த கோபல்ல கிராமம் நாவல், இந்த மாதிரி ஒரு தாக்குதலை விரிவாகவே விவரிக்கிறது.

“ஸ்ரீனி நாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக் கொண்டிருந்தன.

இதுகுறித்து விரிவாக படிக்க: தமிழ் இலக்கியத்தில் வெட்டுக்கிளி தாக்குதல்: 1662ல் மதுரையில் நடந்தது என்ன?

கொரோனா வைரஸ், உம்பான், வெட்டுக்கிளிகள், சுட்டெரிக்கும் வெயில் – தாங்குமா இந்தியா?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் நாம் மீண்ட பாடில்லை. எப்போது இயல்பு நிலை திரும்பும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. முதலில கொரோனா, அடுத்து உம்பான் புயல், அடுத்து வெட்டுக்கிளிகள் என தொடர் பிரச்சனைகள் பட்டியலில் வந்து சேர்ந்திருக்கிறது சுட்டெரிக்கும் வெயில்.

அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது இந்தியா. செவ்வாயன்று இந்தியத் தலைநகர் டெல்லி 47.6 டிகிரி வெப்பநிலையை பதிவு செய்தது. வட இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. ராஜஸ்தானில் சுரு என்ற இடத்தில் அதிகபட்சமாக 50 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ், உம்பான், வெட்டுக்கிளிகள், சுட்டெரிக்கும் வெயில் – தாங்குமா இந்தியா?

இந்தியா – சீனா எல்லை தகராறு: 1962 போர் முதல் 2020 வரை

இந்தியா-சீனா இடையே தொடரும் மோதல் குறித்து, சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியின் எல்லையில் இந்தியா, “சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு அமைப்புகளை” கட்டியுள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விரிவாக படிக்க: இந்தியா – சீனா எல்லை தகராறு: 1962 போர் முதல் 2020 வரை

புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க கூடாது: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் முயற்சிகளின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்றவை குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதுகுறித்து விரிவாக படிக்க: புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க கூடாது: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »