Press "Enter" to skip to content

தங்கம் யாருக்கு சொந்தம்? – நிரூபிக்க 5 ஆண்டுகள் அவகாசம் மற்றும் பிற செய்திகள்

மக்கள் ரயிலில் பயணிக்கும் போது மொபைல், ஹெட்போன் அல்லது பர்ஸ் என எதையாவது தவறவிட்டுச் செல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கிலோ கணக்கில் தங்கத்தைத் தவற விட்டு சென்றுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ரயிலில் 3 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தைத் தவறவிட்டுச் சென்ற நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் செயின்ட் கேலன் மற்றும் லூசெர்ன் நகரங்களுக்கு இடையேயான ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கத்தின் உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் இது தங்களுடையதுதான் என்பதை லூசெர்னில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நிரூபித்த பின்னர் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், தற்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாராவது முன்வந்து இது தங்களுடைய தங்கம் என கூறினால் அதிகாரிகள் அதை எப்படி உறுதிப்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

‘ரெம்டிசிவிர்’: விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தி

கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு ‘ரெம்டிசிவிர் மருந்தில் பாதுகாப்பு, ஆற்றல், நிலைத்தன்மை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: கொரோனா கொல்லி ‘ரெம்டிசிவிர்’: விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தி

புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா?

கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன.

விரிவாகப் படிக்க: லாக் டவுன் குற்றங்கள்: புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா?

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிகர் தற்கொலை

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதை மும்பை காவல்துறை உறுதிசெய்துள்ளது.

விரிவாகப் படிக்க: துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை பயணம்

குஜராத் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர்.

விரிவாகப் படிக்க: குஜராத்தின் புஜ் நகரில் 5.5 அளவில் நிலநடுக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »