Press "Enter" to skip to content

அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குற்றம்: சிறை தண்டனை இல்லை மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 84 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரு பெருநிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் மிகவும் மோசமான கார்ப்பரேட் குற்றமாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.2018-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ உருவானதற்கு தங்களது நிறுவனத்தின் தவறே காரணம் என பசிஃபிக் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மின் பகிர்மான இணைப்புகளை அந்த நிறுவனம் முறையாகப் பராமரிக்காததால் காட்டுத்தீ உண்டானது.நீதிமன்ற விசாரணையின்போது, காட்டுத்தீயில் இறந்தவர்களின் பெயர்களை நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்குத் தெரிவிக்கும் விதமாக நீதிபதி சத்தமாக வாசித்தார்.இந்த குற்றத்தைச் செய்தற்காக அந்நிறுவனத்துக்கு 3.5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை.

காட்டுத்தீயில் இறந்தவர்களின் பெரும்பாலோனோர் வயதானோர் அல்லது மாற்றுத்திறனாளிகள்.நிறையப் பேரின் உடல்கள் எரிந்த நிலையில் கார்களில் கண்டெடுக்கப்பட்டன. தங்களது அக்கம் பக்கத்தினருடன், தப்பித்துச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி அவர்கள் இறந்துள்ளனர்.

இந்திய – சீன எல்லை மோதல்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விரிவாகப் படிக்க: இந்திய – சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியானதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் மருந்து

டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் டெக்ஸாமெத்தாசோன்: முக்கிய கண்டுபிடிப்பு

கொரோனா சீனாவில் 2019 ஆகஸ்ட் மாதமே பரவத் தொடங்கியதா?

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பரவியது என்று கூறும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

விரிவாகப் படிக்க: கொரோனா சீனாவில் 2019 ஆகஸ்ட் மாதமே பரவத் தொடங்கியதா? – பிபிசி புலனாய்வு

பதற்றத்தின் மையமாக கல்வான் பள்ளத்தாக்கு

கல்வானில் இருநாட்டு படைகளுக்கிடையே இப்படி கைக்கலப்பு நடப்பது இது முதல்முறையல்ல. ஆனால் அது உயிர்பலி வரை சென்றிருப்பதுதான், பதற்றத்தை உச்சகட்டமடையச் செய்திருக்கிறது.

விரிவாகப் படிக்க: இந்திய – சீன எல்லை பதற்றத்தின் மையமாக கல்வான் பள்ளத்தாக்கு இருப்பது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »