Press "Enter" to skip to content

அண்டார்டிகா மர்ம முட்டை குறித்து பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடை: கால்பந்து அளவிலான முட்டை எதனுடையது?

சுமார் 10 பத்து வருடங்களுக்கு முன், அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முட்டை குறித்த மர்மத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டறிந்துள்ளனர்.

காற்று வெளியேறிய கால்பந்து போன்ற வடிவில் அந்த முட்டை படிமம் குறித்து பல வருடங்களாக அறிய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறினர்.

தற்போது, 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய கடல் ஊர்வன உயிரினத்தின் முட்டையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுவே உலகின் மிகப்பெரிய ஊர்வன உயிரினத்தின் முட்டை என நம்பப்படுகிறது.

இந்த ‘மர்ம முட்டை’ சிலி நாட்டில் 2011ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில்தான் இது காற்று வெளியேறிய ஒரு முட்டை என்பது கண்டறியப்பட்டது.

இந்த முட்டையை ஈன்ற உயிரினம் சுமார் 7 மீட்டர் நீளத்திற்கு இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு; 5 முக்கிய கேள்வி பதில்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான் தளர்த்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இந்த நெருக்கடி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டுவரும் கொரோனா தொற்று குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?

விரிவாக படிக்க: இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு; 5 முக்கிய கேள்வி பதில்கள்

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை: இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சு

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான தொலைபேசி அழைப்பின்போது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் தொடர்நிகழ்வுகளுக்கு காரணம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கும் காலத்தின் தேவை இருந்தது. ஜூன் 6 ம் தேதி இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் எட்டிய புரிந்துணர்வை இரு தரப்பினரும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும். இரு தரப்பு படையினரும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீன ராணுவத்தினர் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை கண்டிப்பாக மதித்து கடைபிடிக்க வேண்டுமே தவிர அதை மாற்றுவதற்கு ஒருதலைப்பட்சமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: “சீனா நடத்திய முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் காரணம்” – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

“சீன ராணுவத்தினரோடு கைகலப்புக்கு அனுமதி தந்திருக்க கூடாது” – முன்னாள் தளபதி வி.பி.மாலிக்

எல்லையோரத்தில் சீனப் படையினரோடு கைகளால் சண்டை போடுவதற்கு இந்தியப் படையினருக்கு அனுமதி அளித்திருக்க கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி வி.பி.மாலிக்.

இந்தியா – சீனா இடையே உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் ஏற்படுவதற்கு எதிராளிதான் காரணம் என்று இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொள்கின்றன.

ஜூன் – 15/16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பு இழப்பு குறித்து இதுவரை சீனா ஏதும் தெரிவிக்கவில்லை.

இரு தரப்பும் துப்பாக்கிகளால் சுட்டுக்கொள்ளவில்லை என்றும், நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாகவும் அதனால் காயம் ஏற்பட்டே மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கார்கில் போர்க்காலத்தில் இந்திய ராணுவத்துக்கு தலைமை வகித்தவரான முன்னாள் இந்தியத் தளபதி வி.பி.மாலிக்கிடம் இந்த எல்லைப் பதற்றம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்று கேட்டார் பிபிசியின் நிதின் ஸ்ரீவத்சவா.

விரிவாக படிக்க: “சீன ராணுவத்தினரோடு கைகலப்புக்கு அனுமதி தந்திருக்க கூடாது” – முன்னாள் தளபதி வி.பி.மாலிக்

“கொரோனா காலத்தில் இந்தியா – சீனாவால் ஒரு போரை தாங்க முடியாது” – எஸ்.எல். நரசிம்மன்

லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதல்களால் இரு நாடுகள் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

”எல்லையில் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், இறப்பு எண்ணிக்கை இப்போது உள்ளதை விட மிக அதிகமாக இருந்திருக்கும். 2013 முதல் இருநாட்டு எல்லையில் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதே போல அந்தப் பிரச்சனைகள் மேலும் வளராமல் தீர்க்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்” என்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் லெப்டினன்ட் ஜெனரருமான எஸ்.எல் நரசிம்மன்.

மேலும் அவர், ”திங்கட்கிழமை நடந்த மோதலை தவிர்த்திருக்கலாம். இரு நாட்டு ராணுவத்தினர் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியிருப்பதாகத் தெரிகிறது. இந்திய ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், சீன ராணுவத்தினருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இரு நாட்டுக்கும் இது நல்ல விஷயம் அல்ல” என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சனை தொடங்கியதிலிருந்தே இந்திய, சீன அரசுகளின் கருத்துகளைப் பார்த்தால், பிரச்சனையை மேலும் வளர்க்க இரு நாடுகளும் விரும்பவில்லை என்பது தெரிகிறது என நரசிம்மன் கூறுகிறார்.

விரிவாக படிக்க: “கொரோனா காலத்தில் இந்தியா – சீனாவால் ஒரு போரை தாங்க முடியாது” – எஸ்.எல். நரசிம்மன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »