Press "Enter" to skip to content

நெட்ஃப்ளிக்சில் பின்கு கார்டூன் பார்க்கும் பென்குயின்: ஆஸ்திரேலியாவில் ஓர் அற்புதம்

  • கேளம் லெஸ்லீ
  • பிபிசி நியூஸ்பீட்

பட மூலாதாரம், perth zoo

தன்னைப் போலவே உருவம் கொண்டிருக்கும் கேலிச் சித்திரமான பின்குவை ஐ-பேடில் பார்த்து மகிழ்கிறதாம் ஒரு பென்குயின் பறவை. இந்த பென்குயின் தன்னை தனிமையில் இருந்து விடுத்துக்கொள்ள பின்கு கேலிச் சித்திரத்தை காணொளியில் பார்த்து மகிழ்கிறதாம்.

இது உண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் வனவிலங்கு பூங்காவில் சட்டப்பூர்வமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

பியரி என்று பெயரிடப்பட்டுள்ள பென்குயின் பறவை ஒன்று ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பியரி பென்குயின் பறவை மிக அறிய வகை நார்த்தர்ன் ராக்ஹூப்பர்ஸ் பென்குயின் இனத்தை சேர்ந்த பறவை.

பியரி சற்று வளர்ந்த பிறகு அதை மீண்டும் அதன் இனத்தோடு வாழும் விதத்தில் இயற்கையான சூழலில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என அதன் பாதுகாவலர்கள் விரும்புகின்றனர்.

எனவே மற்ற பென்குயின்களுடன் பேசிப் பழகுவதற்காக தற்போது பியரிக்கு பின்கு என்ற கேலிச் சித்திரத்தை நெட்ஃப்ளிக்ஸ் இணையதளம் மூலம் அதன் பாதுகாவலர்கள் காட்டுகின்றனர்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ராக்ஹூப்பர்ஸ் இன பென்குயின்கள் காணொளியாக பியரிக்கு காண்பிக்கப்படுகிறது. எடின்பெர்க் வனவிலங்கு பூங்காவில் உள்ள பென்குயின்களுடன் பியரி காணொளி மூலம் உரையாடி வருகிறது.

‘பியரியால் நீச்சலடிக்க முடியாது’

தனிமையிடம் இருந்து தப்பிக்க கார்டூன் பார்க்கும் பென்குயின்

பட மூலாதாரம், CBBC

பியரி இந்தநேரத்தில் இந்தியப் பெருங்கடல் அல்லது அண்டார்டிக் பெருங்கடலில் இருந்திருக்க வேண்டும் என பிபிசி வானொலியில் பேசிய டானிலி ஹென்றி கூறுகிறார்.

”பியரி எங்கள் கைக்கு கிடைத்தபோது, அதன் உடல்நிலையில் பாதிப்பு இருந்தது. அது இங்கே இருக்கவேண்டிய பறவை அல்ல,” என்றும் டானிலி கூறுகிறார். பியரின் சிறகுகள் இந்த நேரத்தில் விழுந்து மீண்டும் புதிதாக முளைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

இதன் மூலம் பியரியால் தற்சமயம் தண்ணீரில் வாழ முடியாது என்பது தெரிகிறது. எனவே பியரின் பிரச்சனைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

பியரிக்கு ஒரு வயதுதான் ஆகி இருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக பியரிக்கு இறக்கைகள் இல்லாததால், பியரியால் தண்ணீரில் நீந்த முடியாது. தனக்கு தேவையான மீன்களை பிடித்து உண்ணவும் முடியாது. எனவே தற்போதைக்கு பியரிக்கு நிச்சயம் எங்கள் உதவி தேவைப்படும் என்கிறார் டானிலி .

பியரிக்கு பின்குவை பிடித்ததா இல்லையா என்பதுதான் உங்கள் மனதில் ஏழும் கேள்வியாக இருக்கும்? சரியா?

உண்மையில் பியரிக்கு பின்குவை பிடிக்கும். ஏனென்றால் பின்கு தன் இனத்தை சேர்ந்த பென்குயின் பறவைதான் என்பதை பியரி இன்னும் உணரவில்லை.

எனவே பியரிக்கு பின்குவை மிகவும் பிடிக்கும். பின்குவை ஒரு பறவையாக பியரி அடையாளம் கொள்ளவில்லை என்றாலும், அதன் நிறம் மற்றும் அசைவுகளை கண்டு பியரி மகிழ்கிறது.

பியரி சமீபமாக நிறையப் பேச முயற்சிக்கிறது. அதற்கு காரணமும் பின்குதான். பியரி உண்மையில் பின்குவுடன்தான் பேசுகிறது. இதையே நாங்களும் எதிர்பார்த்தோம் என்கிறார் டானிலி.

ஆனால் நிச்சயம் பியரியை அதன் இயற்கையான சூழலில் கொண்டு சேர்ப்போம் என டானிலி உறுதியாக கூறுகிறார்.

ஆனால் அதற்குள் பியரியை வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்று தன் இனப் பறவைகளுடன் பழக வைக்க வேண்டும் என்றும் டானிலி கூறுகிறார். நிபுணர்களும் இவ்வாறே அறிவுறுத்துகின்றனர்.

பியரியை காணொளிகள் மகிழ்விக்கின்றன. அதே போல இந்த ஊரடங்கு நேரத்தில் காணொளிகள் மனிதர்களையும் மகிழ்விக்கிறது என்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. மனிதர்கள் இந்த நேரத்தில் தொடர்ந்து ஒரே காணொளியை மீண்டும் மீண்டும் காண்பதில் தவறு எதுவும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »