Press "Enter" to skip to content

அதிபர் ஷி ஜின்பிங்: திபெத்தில் கம்யூனிசத்தை வலுவாக்கி சோசியலிசம் கொண்டு வர விரும்பும் சீனா கனவு நினைவேறுமா?

பட மூலாதாரம், Xinhua

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத் மற்றும் இந்தியா இடையிலான எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலை வரும் சூழலில் ‘நவீன, சோசியலிச திபத்தை உருவாக்க வேண்டும்’ என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் திபெத்துக்கு பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இந்திய எல்லையோரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ கட்டுமானங்களை மேற்பார்வையிட்டார்.

திபெத்தில் நிலைத்தன்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட சீனா அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திபெத் குறித்து பீஜிங்கில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டம் ஒன்றில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரும், சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனா கட்டுப்பாட்டில் திபெத்

1950 முதல் திபெத் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சீன ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் திபெத் மக்களுக்கும் கலாசாரத்துக்கும் சீனா கெடுதல் விளைவித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

திபெத்தில் சீனா செய்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு அங்கு உள்ள அதிகாரிகளை பீஜிங்கில் நடந்த கூட்டத்தில் ஜின்பிங் பாராட்டிப் பேசியுள்ளார்.

சீனாவின் அரசு செய்தி முகமையான சின்குவா “திபெத்தில் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அங்குள்ள ஒவ்வொரு இதயத்திலும் சீனா மீதான பற்று விதைக்கப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அங்குள்ள இனக் குழுக்களை ஒருங்கிணைத்து அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக்குவது அவசியம் என்று ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதம் சோசியலிசம் மற்றும் சீன சூழ்நிலைகளை உள்வாங்கிக் கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திபெத்தில் கம்யூனிசத்தை வலுவாக்கி சோசியலிசம் கொண்டு வர விரும்பும் சீனா

பட மூலாதாரம், XINHUA

ஜின்பிங் கூறுவதுபோல சீனாவால் திபெத் உண்மையாகவே பயனடைந்து இருந்தால் அங்கு பிரிவினைவாதம் நிலவு குறித்தும் அங்கு அரசியல் ரீதியான சிந்தனையை விதைப்பது குறித்தும் சீனா கவலைப்பட வேண்டியதில்லை என்று சீன அரசின் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பௌத்த மத பெரும்பான்மையான திபெத்

பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும், ‘உலகின் கூரை’ என்று கூறப்படும், தொலைதூர பகுதியான திபெத் சீனாவின் தன்னாட்சிப் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு இறையாண்மை உள்ளது என்கிறது சீனா. ஆனால் திபெத்திலிருந்து தாமாக வெளியேறி இந்தியாவில் வசிக்கும் பௌத்த மதகுரு தலாய் லாமாவே தங்கள் தலைவர் என்கிற பல திபெத் மக்கள் கருதுகிறார்கள்.

தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் அவரை வாழும் கடவுளாக பார்க்கிறார்கள். ஆனால், சீன அரசு அவர் ஒரு பிரிவினைவாதி என்று கூறுகிறது.

மன்னராட்சி காலத்தில் மங்கோலியா மற்றும் சீனாவில் இருந்த சில சக்தி வாய்ந்த அரசு வம்சங்களின் கீழ் திபெத் இருந்துள்ளது. சில காலம் எந்த ஆதிக்கத்தின் கீழ் இல்லாமலும் இருந்துள்ளது.

1950ஆம் ஆண்டு அங்கு தமது படைகளை அனுப்பிய சீனா திபெத்தின் சில பகுதிகளை சீன எல்லையில் இருந்த மாகாணங்கள் உடன் இணைத்துக் கொண்டது.

இந்தியாவில் தலாய் லாமா

பிற பகுதிகளைத் தன்னாட்சி பிரதேசம் என்று அறிவித்தது. 1959ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிரான தோல்வியடைந்த புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய மதகுருவான பதினான்காம் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்தியாவில் அவர் நாடுகடந்த அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளார்.

இந்தியாவில் தலாய் லாமா

பட மூலாதாரம், Getty Images

திபெத்தில் இருந்த பல பௌத்த மடாலயங்களில் 1960 மற்றும் 70களில் நடந்த சீன கலாசாரப் புரட்சியின் போது அழிக்கப்பட்டன.பல்லாயிரம் திபெத் மக்களும் கொல்லப்பட்டனர்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மையப் பகுதி முதலில் திபெத் தங்களது ஆட்சியின்கீழ் இருப்பதாக சீனா கூறுகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக தாங்கள் தன்னாட்சி பெற்றவர்களாக இருப்பதாக திபெத் மக்கள் கூறுகிறார்கள்.

மங்கோலிய மன்னன் குப்லாய் கானின் ஆட்சிக்காலத்தில் இன்றைய சீனா, கொரியா, வியட்நாம், திபெத் ஆகிய பகுதிகள் அனைத்தும் யுவான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தன.

அதன்பின்பு பதினேழாம் நூற்றாண்டில் சீனாவில் ச்சிங் பேரரசும் சில தொடர்புகளை கொண்டிருந்தது. அதன் பின்பு இருநூற்றி அறுபது ஆண்டுகள் கழித்து ச்சிங் பேரரசு தீபத்தை தனது பகுதியாக அறிவித்துக் கொண்டது.

ஆனால் அதற்கு எதிராக போராட்டம் நடத்திய திபெத்தியர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர்.

திபெத் சுதந்திரம் அடைந்துவிட்டதாக 1912ஆம் ஆண்டு பதின்மூன்றாவது தலாய் லாமா அறிவித்தார்.

1951இல் திபெத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த சீனா திபெத் சீனாவின் இறையாண்மையின் கீழ் வருவதாக அதன் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

திபெத்தில் கம்யூனிசத்தை வலுவாக்கி சோசியலிசம் கொண்டு வர விரும்பும் சீனா

பட மூலாதாரம், Getty Images

அதன்பின்பு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா திபெத்தின் சுதந்திரத்திற்காக போராடி வருகிறார்.

மொழி, மதம், கலாசாரம்

சீன ஆட்சியின் கீழ் திபெத் வந்த பின்பு வெளியுலகுடனான அப்பகுதியின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அதன்பின்பு மொழி, கலாசாரம், மதம் என அனைத்தும் சீனமயமாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா ஒப்புக் கொண்டது.

அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயீ மற்றும் சீன அதிபர் ஜியாங் ஜெமின் ஆகியோர் இடையே நடந்த சந்திப்பின்போது இந்தியா இவ்வாறு ஒப்புக்கொண்டது.

இது இந்திய மற்றும் சீன உறவில் ஒரு முக்கியமான மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதன்பின்பு சிக்கிமையும் இந்தியாவில் ஒரு பகுதியாக சீனா அங்கீகரித்தது.

திபெத்தின் முழு பகுதியும் சீனாவின் இறையாண்மைக்கு கீழ் இருப்பதாக இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதிகளை மட்டுமே சீனாவின் இறையாண்மையின் கீழ் வருவதாக இந்திய ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அப்போது இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »