Press "Enter" to skip to content

கிழக்கு லடாக் பதற்றம்: “எல்லை தாண்டி முகாமிட்டது இந்தியாதான்”- சீன அதிகாரப்பூர்வ பதிலால் புதிய சர்ச்சை

பட மூலாதாரம், @GLOBALTIMES

கிழக்கு லடாக் பகுதியில் எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டு கோடு நிர்ணயிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி சீன படையினர் முகாமிட்டதாக இந்தியா கூறி வந்த நிலையில், “எல்லை தாண்டி வந்தது நாங்களல்ல, இந்திய படையினர்தான்” என்றும் “அவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும்” என்றும் சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சன்யிங், எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் சீனா கைப்பற்றவில்லை என்று கூறினார்.

“சீனா ஒருபோதும் எந்தவொரு சண்டையையும் மோதலையும் தூண்டவில்லை அல்லது வேறு எந்த நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. சீன துருப்புக்கள் ஒருபோதும் எல்லை மீறவில்லை. ஒருவேளை இது தகவல் தொடர்பு பிரச்சனையாக இருக்கலாம்” என்று ஹுவா கூறினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள சீன தூதர் சார்பில் தூதரக செய்தித்தொடர்பாளர் ஜி ரோங், இந்திய படையினர்தான் சட்டவிரோதமாக எல்ஏசியின் வெவ்வேறு பகுதிகளை கடந்து முன்னேறியிருப்பதாக குற்றம்சாட்டி தமது டிவிட்டர் பக்கத்தில் தூதரகத்தின் எதிர்வினையை பதிவு செய்தார்.

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தமது படைத்துருப்புகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்ட அவர், எல்லை கடந்த பகுதியில் இந்திய படையினரின் ஆத்திரமூட்டல் செயல்பாடுகள், சீன பிராந்திய இறையாண்மை மற்றும் இரு தரப்பு உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்ட்ட பதில்கள் அடங்கிய இணையதள பக்கத்தையும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

அதில், பாங்கோங் ட்செளவின் தெற்குப் பகுதியில் இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக நுழைந்தார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, முந்தைய காலங்களில் இந்தியா, சீனா இடையே செய்து கொள்ளப்பட்ட பல நிலை பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகளினால் ஏற்பட்ட கருத்தொற்றுமையை இந்திய துருப்புகள் மீறியுள்ளனர். பாங்காங் ட்செள ஏரியின் தெற்குக் கரை குதியில் மீண்டும் இந்திய படையினர் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்திய -சீனா எல்லையில் உள்ள நிலைமைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, எல்ஏசி பகுதியில் முதலில் அத்துமீறி வந்தது சீனாதான் என்று இந்தியா தெரிவித்தது. இரு தரப்பும் முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதியை மீறி சீன படையினர் மேலும் முன்னேறி வந்து எல்ஏசி பகுதிகலை ஆக்கிரமித்திருந்ததாகவும் அவர்களை இந்திய படையினர் தடுத்ததாகவும் இந்தியா கூறியது.

இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்தைப் பொருத்தவரை, ஆகஸ்ட் 29-30ஆம் ஆண்டு இரவில் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் எழுந்ததாக இந்தியா கூறியது. ஆனால், தங்கள் படையினர் எல்ஏசி பகுதியில் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச்செல்லவில்லை என்று சீனா கூறியது.

இந்திய படையினர்

பட மூலாதாரம், SOPA IMAGES

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,500 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு எல்லை உள்ளது, அங்கு தற்போது இரு தரப்பும் எல்ஏசி பகுதிக்கு அப்பால் இருந்தாலும், இதுதான் எல்லை என்று வரையறுக்கப்படாத இடத்தில் இரு நாடுகளும் அவற்றின் எல்லைக்குள் சுருங்கிக் கொள்ளாததால் அவ்வப்போது பதற்றம் எழுகிறது. கடைசியாக 1962ஆம் ஆண்டில் எல்லை விவகாரம் உச்சத்துக்கு சென்று இரு தரப்பிலும் போர் மூண்டது.

அதன் பிறகு அவ்வப்போது சிறிய அளவில் ஆத்திரமூட்டல் செயல்பாடுகல் இருந்தாலும், அது கடுமையான உச்சத்தை எட்டி, கடந்த ஜூன் 15ஆம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு வீரர்களும் வன்முறை மோதலில் ஈடுபட்டார்கள். அந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு இரு நாடுகளின் உயர்மட்ட அளவில் தலைவர்களும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

படையினர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு, எல்ஏசியில் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் இரு தரப்பும் செல்லாமல் சுருங்கிக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து முன்பு வந்த பகுதியிலேயே சீன படையினர் மீண்டும் முகாமிடுவதாக இந்திய படையினர் கூறுகிறார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பாங்காங் ட்செள பகுதியில் ஏற்கெனவே பல இடங்களில் சீன படையினர் நிலைகளை நிறுவியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரு தரப்பும் லடாக் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில், அவரவர் நிலைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்வா வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டு படைத்துருப்புகளும் பரஸ்பரம் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து திரும்பப்பெறப்பட்டால் மட்டுமே அங்கு இயல்புநிலை திரும்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »