Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): 2.55 கோடி பேருக்கும் அதிகமாக பாதிப்பு – அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2.55 கோடிக்கும் அதிகமாகயிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை 8.50 லட்சத்தை கடந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் இந்த வைரஸ் மனிதர்களிடமே காணப்பட்டது. இருப்பினும் அது பற்றிய அதிக விவரம் நம்மிடம் இல்லை. வைரஸை எதிர்க்க மேற்கொள்ளப்படும் தடுப்பு மருந்து பரிசோதனைகள் அனைத்தும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.

ஆனாலும், அந்த வைரஸ் பற்றி இன்னும் நாம் அறியாத சில தகவல்கள் உள்ளன. அதில் 5 முக்கிய விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.

1) கொரோனா வைரஸ் காற்று மூலமும் பரவும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. அது வெறும் எச்சில் உமிழும்போதும் தும்மல் அல்லது இருமலின்போது வெளிப்படும் துளிகள், சளி மூலமாக மட்டும் பரவாது.

2) தூசுப்படலம் வழியாகவும் வைரஸ் பரவும். அதன் மூலம் மேலும் நீண்ட தூரம் காற்றில் அது பயணிக்கக்கூடும். எனவே 2 மீட்டர் இடைவெளி, வீட்டுக்குள்ளேயே இருந்தால் போதும் என்ற தகவல் எல்லாம் தவறாக வழிநடத்தக்கூடியவையாக இருக்கலாம். ஏனென்றால் சமூக வைரஸை தவிர்க்க இந்த நிர்ணயிக்கப்பட்ட இடைவெளி போதாது என மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

3)) கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் பலருக்கும் அதன் அறிகுறி தென்படுவதில்லை. அவர்கள் ஏசிம்டொமேட்டிக் வகையைச் சேர்ந்தவர்களாக மருத்துவத்துறை அழைக்கிறது. சிலருக்கு மிதமாக வைரஸ் பாதிப்பு இருந்தாலும், அதை அவர்கள் உணருவதில்லை. சிறுவயதில் அவர்கள் ஏதோ சில நோய் தடுப்புக்காக போட்டுக் கொண்ட தடுப்பூசி அல்லது பிற கொரோனா வைரஸிடமிருந்து அவர்களின் டி-செல்கள் எதிர்ப்பு சக்தியை பெறக்கூடியதாக இருக்கலாம் என்று மெடிக்கல் நியூஸ் டுடே கூறுகிறது.

4) கோவிட்-19 வைரஸ் பாதிப்பு கடுமையாக இருப்பவர்களின் ரத்தம் பிசிபிசுப்புத்தன்மை கொண்டதாக மாறலாம். அதுவே, ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படவும் உறுப்பு பாதிப்புக்கும் காரணமாகலாம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

5) கொரோனா வைரஸ், மக்களின் மன நலன் மற்றும் உடல் ரீதியாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பிரிட்டனில் உள்ள தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் அங்குள்ள பலரிடம் நடத்திய ஆய்வில் வைரஸ் பெருந்தொற்று காலத்தில் ஆண்டுகள், பெண்கள், சிறார்கள், குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மன ரீதியாக மிகுந்த உளைச்சலுக்கு இருந்தார்கள் என்பதை கண்டறிந்துள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் பற்றி அதிகமாக படியுங்கள், அறிந்து கொள்ளுங்கள். அதன் சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்களை தேடிப்படியுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு வைரஸ் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு அதை நம்மை நெருங்காமல் கட்டுப்படுத்த முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »