Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): 6 மாதங்களாக பாதிப்புடன் போராடும் பெண்ணின் கோர அனுபவங்கள்

  • ஸ்டெஃபனி ஹெகார்டி
  • பிபிசி

கோவிட்-19 நோய்த் தொற்று தொடங்கிய போதே அதனால் பாதிக்கப்பட்டவர் மோனிக் ஜாக்சன். ஆறு மாதங்கள் கடந்துவிட்டாலும் அவர் இன்னும் நலமின்றியே இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவர் இதுபோன்ற நிலைமையில் இருக்கிறார்கள்.

தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் பற்றியும், அதற்கு சிகிச்சை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தராதது பற்றியும் அவர் விவரங்களுடன் டைரியில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

ஓராண்டுக்கு முன்பு காளான்கள் பற்றிய டெட் உரையை, மோனிக் ஜாக்சன் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பூஞ்சான்கள் தான் உலகம் முழுக்கப் பரவியிருக்கும் வலைப்பின்னல் போன்றது. காடுகள் முழுக்க பூஞ்சான்கள் படர்ந்திருக்கும். மரங்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இவைதான் உதவும் என்று அந்த உரையில் பேசியவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து 24வது வாரமாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராகப் போராடி வரும் இந்த நாட்களில், மோனிக் அதைப் பற்றிதான் அடிக்கடி சிந்தித்து வருகிறார்.

“நீண்ட வால் கொண்ட கோவிட்” என்ற இந்த வைரஸின் விநோதமான செயல்பாட்டின் பாதிப்பு, தனக்கு ஏற்பட்டிருப்பதாக அவர் சந்தேகிக்கிறார். இந்த விநோதமான பாதிப்பு பற்றி டாக்டர்கள் இப்போதுதான் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளனர்.

மோனிக் கடந்த மார்ச் மாதம் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானார். அது லேசான பாதிப்பு என கண்டறியப்பட்டது. ஆனால் பாதிப்பின் அறிகுறி இன்னும் நீங்காமலே உள்ளது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தன் உடலில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியாமல் அவர் திணறி வருகிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பொது நல நோக்கம் கொண்டவராக மோனிக் இருக்கிறார். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர் என்று மோனிக் தெரிவிக்கிறார். சாதாரண சமயங்களில் தாய்லாந்து குத்துச்சண்டை பயிற்சியும், ஜப்பானிய தற்காப்புக் கலை பயிற்சியும் செய்வதாக அவர் கூறுகிறார்.

லண்டனில் மத்தியப் பகுதியில் உள்ள ஆர்ட் கேலரிக்கு வேலைக்குச் சென்று வருவதற்கு தினமும் 12 மைல்கள் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

ஆனால் கடந்த சில மாதங்கள் அவருடைய வாழ்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. தினமும் பல் துலக்குவது உள்ளிட்ட பணிகளுக்கு சக்தியை சேமிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களைக் குறிப்பிடும் ஒரு பட்டியலை படுக்கை அறையில் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

“நான் சோம்பேறி கிடையாது” என்கிறார் அவர். சில நாட்களில் மாடியில் இருந்து இறங்கி வருவதற்கு மட்டுமே அவரால் முடிகிறது.

அவருடைய மனதுக்கு ஒத்துழைப்பு கொடுக்க உடல் மறுக்கிறது. இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி, வடிகாலாகப் பயன்படுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை படங்களுடன் டைரியாக அவர் பதிவு செய்து வருகிறார்.

இந்தப் புதிய சூழ்நிலை குறித்து மக்களுக்குச் சொல்வதற்கு அந்த டைரியை அவர் பயன்படுத்துகிறார். அதே நிலையில் உள்ள “நீண்ட கால சிகிச்சை பெறுபவர்களுடன்” தொடர்பு கொள்ளவும் இதைப் பயன்படுத்துகிறார்.

கொரோனா வைரஸ் பற்றி டாக்டர்கள் நிறைய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

ஆனால் “நீண்ட வால்” கோவிட் செயல்பாடு என்பது, இந்த நோய்த் தொற்றில் புரியாத புதிரான அம்சமாக இருக்கிறது. இந்த மாதிரியான வைரஸ் தாக்குதல் ஏன் சிலருக்கு ஏற்படுகிறது, ஏன் இது குணமாகாமல் உள்ளது – பெரும்பாலும் அவர்கள் லேசான பாதிப்புக்கு உள்ளான நிலையில் இருந்தாலும், ஏன் குணமாகவில்லை என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

மோனிக் உடல்நலம் பாதிக்கப்பட்ட அதே சமயத்தில் வேறொரு நண்பருக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. ஒன்றாக ரயில் பயணம் செய்ததால் இருவருக்கும் பாதிப்பு வந்தது. ஆரம்பத்தில் இருவரும் தொடர்பில் இருந்தனர். இருவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், இப்போது சில காலமாக அவர்களுடைய தொடர்பு அறுந்துவிட்டது.

கொரோனா வைரஸ்

“நான் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அது மிகவும் அசாதாரணமாக இருக்கிறது” என்று மோனிக் கூறுகிறார்.

முதல் இரண்டு வாரங்கள் அவர் லேசான காய்ச்சல் போல உணர்ந்தார். மிகவும் களைப்பாக இருந்தார். படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே சிரமப்பட்டார். லண்டனில் இன்னும் குளிராக இருக்கிறது என்றாலும் அவர் குறைவான உடைகளையே அணிந்திருக்கிறார். உடலை குளிர்விப்பதற்காக தலையில் அரிசி நிரப்பிய பை வைத்திருக்கிறார். தெர்மாமீட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு தெர்மாமீட்டர் இருந்தால் நல்லது என அவர் நினைக்கிறார்.

இரண்டாவது வாரத்தில் அவர் மூச்சுவிட சிரமப்பட்டார். ஆம்புலன்ஸில் சென்று பரிசோதனை செய்ததில், ஆக்சிஜன் அளவு இயல்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“அதிர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு என்றும், அறிகுறிகளால் அப்படி ஏற்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறினர்” என்று மோனிக் தெரிவித்துள்ளார். அப்போது மோனிக் ஜாக்சனுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் அப்போது பிரிட்டனில் குறைந்த அளவிலான மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் மட்டுமே இருந்தன. மிக மோசமான பாதிப்புக்கு ஆளானவர்களுக்குப் பரிசோதனை செய்வதற்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினர்.

இயற்கை நிவாரணிகள் மூலம் தாமாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள மோனிக் முயற்சி செய்தார். பச்சைப் பூண்டு மற்றும் முழு மிளகு சாப்பிட்டபோது, அது ரொம்ப காரமாக இருந்தது, வேறு எதையும் சாப்பிட முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் களைப்பாகி இருந்தார். “ஒரு நாளில் இரண்டு பேருக்கு மேல் என்னால் செல்போன் மெசேஜ் அனுப்ப முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் கழித்து சில அறிகுறிகள் மறைந்துவிட்டன. ஆனால் புதிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. “என் மார்பின் மத்தியில் இந்த தடிப்பு ஏற்பட்டது. அது நெருப்பு போல எரிச்சல் தர ஆரம்பித்தது” என்கிறார் அவர்.

“இடதுபுறம் கடுமையான வலி இருந்தது. எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

அவசர உதவிக்கான “111” எண்ணில் தொடர்பு கொண்டபோது, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளுமாறு அறுவுறுத்தினர். அதை சாப்பிடுவதால் சிலருக்கு வலி மறைந்து போகிறது என்றும், அதற்கான காரணம் தங்களுக்கு முழுமையாகப் புரியாது என்றாலும் நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறினர்.

பாரசிட்டமால் பலன் தந்தது. ஆனால் அந்த வலி மறைந்ததும், உணவு சாப்பிடும்போது வயிறு மற்றும் தொண்டையில் “நெருப்பு போல” எரிச்சல் ஏற்பட்டது.

அவருக்கு அல்சர் ஏற்பட்டிருக்கும் என டாக்டர்கள் கருதினர். இந்த வைரஸ் பாதித்தால் வாயுக் கோளாறுகளும் ஏற்படும் என்பது அப்போது தான் கண்டறியப்பட்டது.

6 வாரங்கள் கழிந்த நிலையில், சிறுநீர் கழிக்கும்போது மோனிக் ஜாக்சனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. கீழ் வயிறு பின்புறத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. டாக்டர்கள் மூன்று வெவ்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தனர். அது பாக்டீரியா தொற்று இல்லை என பிறகு முடிவுக்கு வந்தனர்.

“அது வெறும் துன்பம்தான். பிறகு அது போய்விட்டது” என மோனிக் பதிவு செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இருந்து மோனிக் விலகி இருந்தார். பாட்காஸ்ட்களை கவனிப்பது கூட அவருக்கு சிரமமாக இருந்தது. கோவிட் பற்றி எதைப் பேசினாலும் அவர் பதற்றமாகி, சுவாசிக்க சிரமம் ஏற்படத் தொடங்கியது. செய்திகளை அறிவதில் ஆர்வம் மிக்கவர் என்று சொல்லிக் கொண்டிருந்த அவரால், அப்போது செய்திகளைக் காண முடியாமல் போனது.

சமூக ஊடகத் தொடர்பில் இருந்தால், அடுத்தடுத்து சடலங்களின் பதிவுகளைத்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று அவர் அச்சப்பட்டார்.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அவருக்கு ஆறுதல் கிடைத்தது. ஆனால் அதற்கான தேடுபொறியில் உடையின் அளவை உள்ளீடு செய்வதற்குக்கூட அவர் சிரமப்பட்டார். “கூகுள் தளத்திற்குச் செல்வதற்கே நான் பயப்பட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்கள் கழித்து, நாட்டு நடப்புகளை தனக்கு சொல்லுமாறு ஒரு நண்பரை கேட்டுக் கொண்டார். கருப்பினத்தவர் மற்றும் சிறுபான்மை இன பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் மரணிக்கிறார்கள் என்பது அவருக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்றாக இருந்தது. மோனிக் கலப்பு இனத்தவர் என்பதால் பயம் ஏற்பட்டது.

“கருப்பின மக்கள் எல்லோரும் இறந்து போகும் கொடூரமான திரைப்படம் போல உணர்ந்தேன்” என்கிறார் அவர்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

ஒரு நாள் பாட்காஸ்ட் கேட்டுக் கொண்டே குளியலறையில், குளியல் தொட்டியில் இருந்தபோது, கோவிட்-19 நோய் பாதிப்பால் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அதிக அளவில் உயிரிழக்கிறார்கள் என, நிகழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்த வெள்ளை இனத்தவர்கள் இருவர் சாதாரணமாக கூறினர்.

உடனே எழுந்து உட்காந்த மோனிக், செல்போனை எடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பின உறவினர்களுக்கு இமெயில் அனுப்பினார்.

தான் சார்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் என்பதை பின்னர் அவர் உணர்ந்தார்.

அவரை வெளியில் அழைத்துச் செல்லும் ஊபர் வாடகைக் கார் ஓட்டுநர், மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கான உணவை அனுப்பும் தெருமுனைக் கடைக்காரர்கள் என எல்லோரும் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தனர்.

“எனது கோவிட் பாதிப்பில் இவர்களுடன் பயணித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தினசரி வாழ்வில் இப்படி யோசித்தது கிடையாது.

வாரங்கள் கடந்த நிலையில், பழைய அறிகுறிகள் மறைந்து, புதிய அறிகுறிகள் தோன்றின. அதனால் பயம் மேலும் மேலும் அதிகரித்தது. கழுத்தில் வலியும், அத்துடன் மொறு மொறு சிப்ஸ்களை கையில் வைத்து நொறுக்குவதைப் போன்று காதில் சப்தம் கேட்கும் விநோதமான உணர்வும் தோன்றியது. கைகள் நீல நிறமாகிவிட்டன. ரத்த ஓட்டத்தை இயல்புநிலைக்குக் கொண்டு வர, மிதமான சூடான தண்ணீரில் கைகளை வைக்க வேண்டியிருந்தது. அதைப் படம் எடுத்து வைத்திருக்கிறீர்களா என டாக்டர் கேட்டார். ஆனால் அந்த எண்ணம் தனக்கு தோன்றவில்லை என்று மோனிக் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்குப் புதிய அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருந்தன. “உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது” என கேட்டார்கள். இந்த அறிகுறிகளுக்கு சிகிச்சை கிடையாது அல்லது உண்மையான வலி கிடையாது” என்பது இதன் அர்த்தமாக இருந்தது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

2 செப்டம்பர், 2020, பிற்பகல் 2:24 IST

உடல் முழுக்க விநோதமான தடிப்புகள் அவருக்குத் தோன்றின. கால் பாதங்கள் சிவப்பாகக் கன்றிவிட்டன. சிலநேரங்களில் கால் பாதத்தின் மேல் பகுதியில் குத்துவதைப் போன்ற வலியால் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வார்.

ஒரு நாள் இரவில் நண்பருடன் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, முகத்தில் வலதுபுறம் உணர்வில்லாமல் போனது. உடனே சென்று கண்ணாடியில் பார்த்தபோது முகம் இயல்பாக இருந்தது. தனக்கு மாரடைப்பு ஏற்படுகிறது ஆனால், அதற்கான அறிகுறிகளை டாக்டர்களால் உணர முடியவில்லை என்று அவர் கவலைப்பட்டார்.

உடல் முழுக்கவே அவருக்கு விநோதமான உணர்வுகள் தோன்றின. சில நேரங்களில் யாரோ அவருடைய கால்களை பிடித்து இழுப்பதாக அல்லது தலைமுடியை முகத்தை சுற்றி கட்டியதாக, வாயிலும் திணித்தது போல உணர்ந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

தனக்கு என்ன நடந்தது என்பதை டாக்டர்களுக்கு விவரிக்கவே அவர் அதிக நேரத்தை செலவிட்டார். அவருக்கு ஐந்து அல்லது 10 நிமிட நேரங்கள் மட்டுமே மருத்துவ ஆலோசனைக்குக் கிடைக்கும். அந்த நேரத்திற்கு, தாம் எதிர்கொண்ட அனுபவங்களை விவரித்தாக வேண்டும். அந்த நேரம் அவருக்குப் போதுமானதாக இல்லை.

“அவர்கள் `உங்களுக்கு கோவிட் இருக்கிறது. அதற்கு எப்படி சிகிச்சை தர வேண்டும் என எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறுவார்கள்” என்று மோனிக் கூறியுள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி கூறும்போது அவர் பதற்றம் அடைகிறார். தேசிய சுகாதாரத் திட்ட அலுவலர்களை குறைகூறுவதற்கு அவர் விரும்பவில்லை. பல அலுவலர்கள் நன்றாகக் கவனித்தனர். ஆனால் தன்னுடைய நிலையில் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலனளிக்கவில்லை என்று மோனிக் தெரிவித்துள்ளார்.

9 வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடந்தது. அப்போது அவர் மூலமாக வேறு யாருக்காவது வைரஸ் பரவியிருக்கலாம் என்ற பயம் இருந்தது.

குறைந்தது ஏழு நாட்கள் வரையிலோ அல்லது அறிகுறிகள் மறையும் வரையிலோ தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு ஆலோசனை கூறியுள்ளது. ஆனால், அறிகுறிகள் மறையவே இல்லை என்றால் என்ன செய்வது என அவர் யோசித்தார்.

அவருடன் தங்கி இருந்தவர்கள், அவருடைய தொடர்பைத் தவிர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை கையாண்டனர். குளிர்சாதனப் பெட்டியைத் திறக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தைப் பிடித்து இழுத்தனர்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

பிறகு தங்கள் அறைக்குச் சென்று தனியாக சாப்பிடுவார்கள்.

ஒருநாள் காற்று வாங்குவதற்காக நண்பருடன் பூங்காவிற்கு மோனிக் சென்றபோது, ஒரு சிறிய குழந்தை அவரை நோக்கி ஓடி வந்தது. குழந்தையிடம் இருந்து மோனிக் விலகி ஓடினார். குழந்தையின் தாய் இதைப் பார்த்து கோபம் கொண்டார். “குழந்தை உங்களுக்கு அருகில் வரவில்லையே!” என்று கூறினார். தனக்கு நோய் வந்துவிடுமே என்று பயப்படவில்லை என்றும், தன்னால் வைரஸ் பரவிடக் கூடாதே என அச்சப்பட்டதாகவும் மோனிக் விளக்கம் தந்திருக்கிறார். நோயாளிகள் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே என்று அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.

எல்லாம் எப்போதும் எளிதாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கு தனது டைரி உதவும் என்று மோனிக் நம்புகிறார்.

அவருக்கு உதவ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் மற்றவர்கள் சலிப்பு காட்டினர் என்கிறார் மோனிக். அவருக்கு நடந்த எதுவுமே, யாருக்குமே பிரச்சனையாகத் தோன்றவில்லை. “கோவிட் நோயுடன் இருப்பதற்கு நான் விரும்புகிறேன் என்று ஒருவர் கூறினார்” என மோனிக் தெரிவித்துள்ளார்.

கடைசியாக, அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்தது. அவருக்கு அதில் உற்சாகம் கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. டிரைவ் இன் வரை சென்றால் தான் பரிசோதனை செய்ய முடியும். ஆனால் அவரிடம் கார் கிடையாது. “என் நண்பர்கள் பலரும் கார் ஓட்ட முடியாமல் உள்ளனர்” என்றார் அவர்.

ஒரு நண்பர் முன்வந்து உதவ முற்பட்டார். தனக்கு ஆபத்து உள்ளபோதிலும் அவர் லிப்ட் கொடுக்க முன்வந்தார்.

பரிசோதனை மையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்று மோனிக் எதிர்பார்த்தார். ஆனால் காக்கி உடை அணிந்த சீருடைப் பணியாளர்கள், ஜூன் மாத வியர்வையுடன் பணியில் இருந்தனர். மூக்கில் இருந்து சளியை எடுப்பதற்கான பஞ்சு மூக்கிலேயே சிக்கிக் கொண்டது. அதில் இருந்தே அந்த அலுவலர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதை மோனிக் அறிந்து கொண்டார்.

கோவிட் பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்தது. அது பெரிய நிம்மதியாக இருந்தது. ஏனென்றால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தன் மூலமாக நோய் பரவாது என அவர் நிம்மதி அடைந்தார். ஆனால் விநோதமாக அவர் உணர்ந்தார்.

“தொற்றும் தன்மையுள்ள நோயுடன் இருப்பது உளவியல் ரீதியில் மிகவும் கடினமானது” என்று பின்னர் அவர் டைரியில் எழுதியிருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்பதால் அவர் குழப்பம் அடைந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

நோயுற்று நான்கு மாதங்கள் கழித்து, கிழக்கு லண்டனில் உள்ள வீட்டில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்தார். நண்பர்களுடன் செலவை பகிர்தல் அடிப்படையில், அங்கு தங்கியிருந்தார். சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்வதற்கே கஷ்டப்படும் நிலையில், குடும்பத்தினருடன் இருந்தால் உதவிகரமாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

அவருடைய சுவாசம் மேம்பட்டிருந்தது. ஆரம்பத்தில் மாடிப்படி ஏறும்போது இடையில் சிறிது நேரம் நின்று மூச்சு வாங்க வேண்டியிருக்கும். ஜூலை மாதத்தில், நிற்காமல் படியேறிச் செல்ல முடிந்தது.

வீடு சுத்தம் செய்யும் கருவியை ஆன் செய்து சுமார் 4 நிமிடங்கள் அறையை சுத்தம் செய்தபோது, மூச்சடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார். அதன்பிறகு 3 வாரங்களாக அவர் படுக்கையில் இருக்கிறார்.

எப்படி குணம் பெறுவது என்பது பற்றி மோனிக்கிற்கு எதுவும் தெரியவில்லை.

நிறைய பேர் என்னிடம் `உன்னால் மீண்டும் சைக்கிள் ஓட்ட முடியும். குத்துச்சண்டை பயிற்சி செய்ய முடியும். குணமானதும் என் வீட்டுக்கு வர முடியும்’ என்கிறார்கள்.

ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு நம்பிக்கை தருபவையாக இல்லை என்று மோனிக் கூறியுள்ளார்.

அறிகுறிகள் மறையாமல் இருக்கும் இதுபோன்றவர்களுக்கு எப்படி சிகிச்சை தருவது என்று டாக்டர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

“என்ன செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் ஏதாவது செய்ய நினைப்பீர்கள். ஆனால் உங்கள் உடல் ஒத்துழைக்காது” என்கிறார் மோனிக்.

“இமெயில்கள் அனுப்புவது அல்லது டாக்டர்களுடன் பேசுவதில் நான் மூழ்கிவிடுவேன். என் நண்பர்களுடன் பேசுவேன். இதில் பல் துலக்குவதற்கு மறந்துவிடுவேன்” என்று மோனிக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Monique Jackson

புதிதாகத் தோன்றியிருக்கும் ஆரோக்கிய கேடு சூழலை எப்படி கையாள்வது என்பது குறித்து மனநல ஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவைத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் ஆதரவு திரட்ட அவர் முயன்று வருகிறார்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைபாடு, காளான்களை விரும்பும் மற்றவர்களுக்குப் பரவிடக்கூடும் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.

காளான்களுக்கு வைரஸ் எதிர்ப்பு குணங்கள் உண்டு என தன்னுடைய ஒரு பதிவில் மோனிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவையும் பெரியவை, அழகானவை என கூறியுள்ளார்.

பூஞ்சான் இலைப் பின்னல்களால் உருவானவை இந்தக் காளான்கள். பூமிக்கு அடியில் உள்ள பின்னல்களால் உருவானவை. அருகில் உள்ள மரங்களின் வேர்களுடன் காளான்கள் தொடர்பில் இருக்கின்றன. அங்கிருந்து சத்துகளைப் பெறுகின்றன. மரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதற்கு இந்தப் பூஞ்சான் வலைப் பின்னல்கள் உதவுகின்றன என்று பூஞ்சான் நிபுணர்கள் பலர் கூறுகின்றனர். சத்து மிகுந்த ஒரு மரத்திடம் இருந்து, சத்துக் குறைபாடு உள்ள வேறொரு மரத்திற்கு சத்துகளைக் கொண்டு செல்ல பூஞ்சான்கள் உதவுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

அடுத்தடுத்த மாதங்களில் தனக்கு உணவு கொண்டு வந்த நண்பர்கள் இதை நினைவுபடுத்துவது போல இருக்கிறது. தனக்கு இயலாமல் போனபோது உதவியாக வந்தவர்கள் இந்த பூஞ்சான்களைப் போன்றவர்கள் என கருதுகிறார்.

“என் அறையில் தனிமையில் இருக்கிறேன்” என தனது இன்ஸ்டாகிராம் டைரியில் அவர் பதிவிட்டுள்ளார். “மற்ற சமயங்களைவிட இப்போது அதிக தொடர்பில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »