Press "Enter" to skip to content

இந்திய – சீன எல்லை பதற்றம்: ‘எல்லை தாண்டி வந்து இந்திய படையினர் சுட்டனர்’ – சீன ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையை ஒட்டி அமைந்துள்ள ஷெண்பாவோ மலைப் பகுதி அருகே மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை , திங்களன்று இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவ ராணுவ வீரர்களை நோக்கி இந்தியப் படையினர் எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்ட பின்பு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீன எல்லை பாதுகாப்பு படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்றும் சீன ராணுவத்தின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் சாங் ஷூலி தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுடுவது என்பது பதற்றமான சூழல்களில், எதிர்த்தரப்பை நோக்கி சுடாமல், வானை நோக்கிச் சுடுவதாகும்.

இந்தியப் படையினர் சட்டவிரோதமாக மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து வந்தது இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள ஒப்பந்தங்களை கடுமையாக மீறும் செயல்; இது அப்பிராந்தியத்தில் பதற்றநிலை தூண்டுவதுடன், தவறான புரிதல்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் சீனா இடையேயான 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு மெய்யான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்று கூறப்பட்டாலும், இதற்கென தெளிவான வரையறை எதுவும் இல்லை.

சீனா ஒரு கோட்டையும் இந்தியா ஒரு கோட்டையும் எல்லைக் கோடு என்று கருதுகின்றன.

இதன் காரணமாக இரண்டு நாடுகளுமே எல்லையில் இருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கருதுகின்றன.

தங்கள் பிராந்தியம் என்று கூறி இந்திய ராணுவம் சீன ராணுவம் ஆகிய இரு நாட்டு ராணுவங்களும் ஒரே பகுதிக்கு ரோந்து செல்லும் போது ஒருவரையொருவர் எதிர் கொள்ளும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சாங் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய படையினரை உடனடியாக பணிநீக்கம் செய்து எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சீனப் படையினரை தூண்டும் விதமாக துப்பாக்கி பயன்பாடு நிகழ்த்திய இந்தியப்படையினர் மீது விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என்று இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »