Press "Enter" to skip to content

பாலுறவு கொள்ளாமல் இனப்பெருக்கம் செய்த மலைப்பாம்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Saint Louis Zoo

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் விலங்குகள் காட்சிச் சாலையில் இருக்கும் மலைப்பாம்பு ஒன்று ஆண் மலைப்பாம்பின் துணை இல்லாமலேயே ஏழு முட்டைகளை இட்டுள்ளது.

தற்போது முட்டை இட்டுள்ள இந்த பெண் மலைப்பாம்பு கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஓர் ஆண் மலைப்பாம்புடனும் தொடர்பில் இல்லை என்று விலங்குகள் காட்சி சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாலுறவு கொள்ளாமலேயே சில ஊர்வன உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை என்றாலும்கூட தற்போது முட்டையிட்டு உள்ள மலைப்பாம்பின் வயதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலைப்பாம்பு

பட மூலாதாரம், Saint Louis Zoo

இந்தப் பெண் ‘ராயல் பைத்தான்’ வகை மலைப்பாம்புக்கு வயது 62 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு தனியார் ஒருவரால் இந்தப் பாம்பு பூங்காவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட போது அதற்கு மூன்று வயதாகி இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது என்று அந்தப் பூங்காவின் அதிகாரிகளில் ஒருவரான மார்க் வேனர் தெரிவிக்கிறார் .

இந்த மலைப் பாம்பின் ஏழு முட்டைகளில் மூன்று முட்டைகள் நல்ல நிலையில் உள்ளன. அவை தற்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த முட்டைகளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் மலைப்பாம்பு குஞ்சுகள் வெளியே வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘ராயல் பைத்தான்’ அல்லது ‘பால் பைத்தான்’ என்று அழைக்கப்படும் இந்த வகை மலைப்பாம்புகள் மத்திய மற்றும் மேற்கு ஆஃப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டவை.

Presentational grey line

கொரோனா தடுப்பு மருந்து: பரிசோதனையை நிறுத்துவது அசாதாரணமானதா?

கொரோனா தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வகப் பரிசோதனையின் இறுதிக்கட்ட ஆய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆய்வகப் பரிசோதனையின்போது, அதில் பங்கேற்ற ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆய்வு நிறுத்தப்பட்டது.

Presentational grey line

இரானுக்கு முக்கியத்துவம் தரும் மோதி அரசு

மோதி அரசு

பட மூலாதாரம், Getty Images

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை இரானுக்கு பயணம் மேற்கொண்டு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃபை சந்தித்தார்.

முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரான் சென்றிருந்தார். அவர் இரானின் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹதாமியை சந்தித்தார்.

மோதி அரசின் இரண்டு கேபினட் அமைச்சர்கள், நான்கு நாட்களுக்குள் இரான் சென்றிருப்பதன் பொருள் என்ன?

Presentational grey line

இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்?

கழுதை பால்

பட மூலாதாரம், Getty Images

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின், ஹிஸ்ஸாரில் (ஹரியாணா) உள்ள தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.இ) விரைவில் கழுதை பால் பண்ணை ஒன்றை அமைக்கப் போவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.

இது தவிர, ஏபிபி நியூஸ், நவபாரத் டைம்ஸ், நேஷனல் ஹெரால்ட் போன்ற ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு, கழுதை பால் லிட்டருக்கு ரூ. 7,000 வரை விற்கலாம் என்று தெரிவிக்கின்றன.

Presentational grey line

வடிவேல் பாலாஜி உடல் அடக்கம்

வடிவேல் பாலாஜி உடல் அடக்கம்

பட மூலாதாரம், Facebook

உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று உயிரிழந்த சின்னத்திரை பிரபல நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலிக்காக சென்னை சேத்துப்பேட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Presentational grey line

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

11 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:58 IST

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »