Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

சரி. ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும், அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் ராணுவ பலத்தை கொண்ட நாடு அமெரிக்கா.

போர், உலகளாவிய பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் அமெரிக்க அதிபர் பதவி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒன்று, அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

தாராளவாத கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்தவர்.

இந்த இரு அதிபர் வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்ட் டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபரபாக அவர் இருப்பார். அவருக்கு வயது 78.

அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

நவம்பர் மாதம் அமெரிக்க பிரஜைகள் வாக்களிக்க செல்லும்போது, அவர்கள் டிரம்புக்கோ பைடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.

அதற்கு பதிலாக எலக்டோரல் கல்லூரி உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.

அது என்ன எலக்டோரல் கல்லூரி?

எலக்டோரல் கல்லூரி?

இதனை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம். அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பது இவர்கள் பணி.

இந்த வாக்களிப்பு முறை, 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

அமெரிக்கா ஜனநாயக அமைப்பையே கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடுவாரோ என்று கவலையடைந்தனர்.

அதற்காக அமைக்கப்பட்டதுதான் “எலக்டோரல் கல்லூரி” எனப்படும் வாக்காளர் குழு.

என்ன நடைமுறை?

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

இன்று மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர் இருக்கிறார்கள்.

இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும்.

அது என்ன எலக்டோரல் கல்லூரி?

பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்.

உதாரணமாக, கலிஃபோர்னியா மாகாணத்தை எடுத்துக் கொள்வோம்.

அங்கு வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த 55 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் வெற்றியாளருக்கே போய் சேரும்.

அதனால்தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும். ஏனெனில் அவரிடம் வாக்காளர் குழுவின் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கும். கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றது இப்படித்தான்.

2000ஆம் ஆண்டில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் மக்களின் வாக்குகள் குறைவாக பெற்று, வாக்காளர் குழு வாக்குகளில்தான் வெற்றி பெற்று அதிபரானார்.

அதற்கு முன்பு கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை அமெரிக்காவில் இருந்ததில்லை.

தேர்தல் பிராசாரங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரமானது, பெரும்பாலும் இந்த 270 வாக்காளர் குழு வாக்குகளை பெறுவதை இலக்காக வைத்திருக்கும்.

எலக்டோரல் கல்லூரி முறையை மாற்ற பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தும், அமெரிக்காவை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், சிறந்த தேர்தல் முடிவுகளை பெற இதுவே சரியான வழி என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

முடிவுகள் எப்போது தெரிய வரும்?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலையில் யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

முடிவுகள் எப்போது தெரிய வரும்?

2016ஆம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் அதிபர் டிரம்ப்.

ஆனால் இந்த ஆண்டு, தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெற்றியாளர் அதிபர் பொறுப்பை எப்போது ஏற்பார்?

ஒருவேளை வரும் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் டிரம்பின் இடத்திற்கு அவர் உடனடியாக வரமாட்டார். புதிய அமைச்சர்களை நியமனம் செய்யவும், திட்டம் தீட்டவும், அவருக்கு சிறிது காலம் வழங்கப்படும்.

வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20ஆம் தேதி, புதிய அதிபர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுக்கொள்வார்.

அதனைத் தொடர்ந்து தனது நான்கு ஆண்டு காலப் பணியைத் தொடங்க புதிய அதிபர் வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »