Press "Enter" to skip to content

போயிங் மேக்ஸ் 737 விமான வடிவமைப்பே விபத்துகளுக்கு காரணம் – அமெரிக்காவின் புதிய விசாரணை அறிக்கை

போயிங் மேக்ஸ் 737 விமானங்கள் இரண்டு மோசமான விபத்துக்குள்ளானதுக்கு, அந்நிறுவனம் தொழில்நுட்ப விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாமல் இருந்ததும் ஒரு காரணம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் விசாரணை ஒன்று தெரிவிக்கிறது.

போயிங் நிறுவனத்தின் வெளிப்படையற்றத்தன்மையின் மீது குற்றம் சுமத்தும் அந்த அறிக்கை, ஒழுங்கு கட்டுப்பாட்டு அமைப்பின் மீது அடிப்படையில் குறை இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்களிலிருந்து “கடுமையான பாடங்களை கற்றுக் கொண்டதாக” போயிங் தெரிவித்திருந்தது.

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், போயிங் நிறுவனத்தின் மீதும் ஒழுங்கு கட்டுப்பாட்டாளர்கள் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

இந்த விசாரணை அறிக்கை போயிங் நிறுவனத்தையும், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் கட்டுப்பாட்டையும் சாடியுள்ளது.

“மேக்ஸ் விமானங்களின் வடிவமைப்பில் போயிங் நிறுவனம் தோல்வியடைந்துள்ளது என்றும், போயிங் விமானத்தை மேற்பார்வை செய்வதில் மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தோல்வியுள்ளது” என 18 மாதங்கள் நடைபெற்ற அந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த வகை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதின் கட்கரிக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

நிதின் கட்கரி

இந்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக புதன்கிழமை இரவு தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக கூறியுள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் 63 வயதாகும் நிதின் கட்கரி, மூத்த அமைச்சர்கள் வரிசையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அடுத்த நிலையில் 3ஆவதாக இருக்கிறார்.

இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா

உளவுப் பார்த்தல் சித்தரிப்பு

சீனா ஏன் வேவு பார்க்கிறது? இந்த கேள்வி இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் பலவித கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் இந்தியாவில் குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக இந்திய நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்புகள், சீன அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாக அந்த நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

“உணர்வை வெளிப்படுத்த முடியாவிட்டால் டெல்லி வருவதில் பயனில்லை” – சிவா

சிவா

இந்திய மாநிலங்களவையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பற்றி விவாதிக்க கூடுதல் நேரம் வழங்காததை எதிர்த்து திமுக எம்.பி திருச்சி சிவா கடுமையாக எதிர்வினையாற்றினார்.

மாநிலங்களவையில் கொரோனா சூழ்நிலை குறித்து அவையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதும் அது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அப்போது திருச்சி சிவா பேசினார்.

“கொரோனாவுக்கு எதிரான போர் முடிவு பெற இன்னும் பல காலம் ஆகும் என மிகத்தெளிவான எச்சரிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் அளித்திருக்கிறார். அனுபவம், அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நாம் இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே இருக்கிறோம். இந்தியாவில் 50 லட்சத்தை கோவிட்-19 பாதிப்புகள் கடந்துள்ளன. நேற்றுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆயிரமாக இருந்தது. இன்று அது 82 ஆயிரம் ஆகியுள்ளது. இந்த உலகில் உயிரிழப்புகள் வெறும் எண்ணிக்கையாக பார்க்கப்படுகின்றன. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்ட நபருக்கு அருகே கூட குடும்ப உறுப்பினர்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், இதை மிக, மிக எளிதாக எடுத்துக் கொள்கிறோம்.”

அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

டிரம்ப் மற்றும் ஜோ பிடன்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

சரி. ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »