Press "Enter" to skip to content

இஸ்லாத்தின் பொற்காலம்: அறிவியலுக்கு பங்களித்த அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி

பிபிசி வானொலி 3-யின் சிறப்புத் தொடரான ‘இஸ்லாத்தின் பொற்காலம்’ என்ற இந்த தொடரில் இந்த அத்தியாயத்தில், அரபு தத்துவஞானி அல்-கிந்தியைக் குறித்துப் பேராசிரியர் ஜேம்ஸ் மாண்ட்கோமெரி குறிப்பிட்டுள்ளார். அதன் கட்டுரை வடிவம் இது.

அபு யூசுப் யாகூப் இப்னே ஐசக் அல்-கிந்தி ஒன்பதாம் நூற்றாண்டில் ஈராக்கில் வாழ்ந்தார். இந்தக் கால கட்டம், மனித சிந்தனை மற்றும் கலாசார நடவடிக்கைகளின் ஒரு முக்கியமான காலமாகக் கருதப்பட்டது. ஏதென்ஸ், ரோம் போன்ற பெரிய மையங்களுடன் கூட பாக்தாத் எளிதில் போட்டியிட்ட காலம் இது.

கிந்தி என்ற பெயர் அரேபிய குலமான கிந்தாவுடன் தொடர்புடையதைக் குறிக்கிறது. கிந்தியின் பரம்பரை அல்-அஷ் அத் பின் கைஸுடன் தொடர்புடையது. ஆரம்ப கட்டங்களில் இஸ்லாத்திற்கு மாறியவர்களில் அல்-அஷ் அத் பின் கைஸ் ஒருவர், மேலும் நபிகள் நாயகத்தின் நண்பராகவும் இருந்தார்.

அல்-கிந்தியின் தந்தை கூஃபாவின் இளவரசர் ஆக இருந்தார். அவர், பணக்கார மற்றும் உயர் வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவர் அரபியில் தத்துவத்தின் அடித்தளத்தை அமைத்ததால் “அரபு தத்துவஞானி” என்ற பட்டத்தைப் பெற்றார்.

இந்தப் பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமான ஒன்று தான். காரணம், அல்-கிந்திக்கு முன்பு அரபியில் தத்துவம் என்ற எதுவும் இல்லை. அல்-கிந்தியின் தத்துவத்தின் மீதான விருப்பம் அவரது சகாக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. சிறிது நேரம் அத்தகைய ஒரு காட்சியைப் பார்ப்போம்.

கி.பி. 850 இல் பாக்தாத்தில் ஒரு புத்தகச் சந்தையின் காட்சி இது. புத்தக ஆர்வலர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். பிரபல உரைநடை எழுத்தாளரும், இறையியல் நிபுணரும், பல பிரபலமான புத்தகங்களின் ஆசிரியருமான ஜாஹிஸ் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

“அரேபிய உரைநடைகளின் தந்தை”(த ஃபாதர் ஆஃப் அரேபிக் ப்ரோஸ்) என்ற புதிய புத்தகத்தின் சாராம்சத்தைப் பற்றி அறிய அவரது போட்டி எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அபு உஸ்மான் உமர் பஹர் அல்-கனானி அல்-பஸ்ரி அல் மாரூப் ஜாஹிஸ் அவர்களின் முந்தைய இரண்டு நூல்களான அல்-பயான் வா-அல்-தபிய்யின் மற்றும் எழு கண்டங்கள் குறித்த நூலான அல்-ஹயவான் ஆகியன கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமான புத்தகங்களாகும். இந்தப் புத்தகங்கள் மக்களால் விரும்பப்பட்டதுடன் மட்டுமல்லாமல், அரபு இலக்கிய பாணியிலும் இவரது போட்டியாளர்களிடமும் ஒரு முடிவில்லாத அடையாளத்தையும் விட்டுச் சென்றுள்ளன.

இஸ்லாத்தின் பொற்காலம்

குறிப்பாக, அல்-ஹயவான் புத்தகம் மிகவும் பிரபலமடைந்தது. அரிஸ்டாட்டிலின் மிகச்சிறந்த படைப்பு கூட ஜாஹிஸுக்கு முன்னால் குறைவாகவே தோன்றும் அளவுக்குப் பிரபலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரிஸ்டாட்டில் படைப்பின் மொழிபெயர்ப்பைத் தவிர வேறு எதையும் படிக்க விரும்புபவர் எவரும் இல்லை என்ற நிலை இருந்தது. அரிஸ்டாட்டிலின் அல்-கிதாபா, மாபாத் அல்-தபியா மற்றும் அல்-மக்கூலாத் போன்ற புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. அந்த வாசகர்கள், அரிஸ்டாட்டிலின் ஞானத்தை வெகுவாகப் போற்றினர்.

இருப்பினும், இப்போது, ஜாஹிஸ்-ன் எழுத்துக்கள் காரணமாக, வாசகர்கள் பெரிய இறையியல் மோதல்கள் குறித்த புத்தகங்களைப் படிக்க விரும்பினர்.

அந்தக் கால கட்டத்தில் ஈராக்கில் உள்ள சிறந்த சிந்தனையாளர்களையும் குழப்பிய விவகாரங்கள் குறித்து ஜாஹிஸ் தனது புதிய நூலில் விவாதித்திருப்பதாக அவரது பதிப்பாளர் அறிவித்தார். அதாவது “கடவுள் சிறந்த உலகைப் படைத்தாரா?” எல்லா நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கியிருக்க முடியுமா? அவர் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கியிருக்க முடியும் என்றால், அவர் அதை ஏன் செய்யவில்லை? தீமை நிறைந்து இருப்பதன் பொருள் கடவுள் இல்லை என்றாகுமா?” போன்ற விவாதங்கள் அதில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜாஹிஸின் இந்த புத்தகம் வெளியிடப்பட்டபோது, அதை எதிர்த்து அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. அது புரிந்துகொள்ள முடியாதது என்று அறிவிக்கப்பட்டது. இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவியது. ஜாஹிஸ் இந்த புத்தகத்திற்கு கிதாப் அல் புகலா என்று பெயரிட்டார். அங்கு இருந்த ஒருவர், ஒரு கஞ்சனுக்குத் தீமை குறித்து என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

இஸ்லாத்தின் பொற்காலம்

இந்த வயதானவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது உணர்வை இழந்துவிட்டார் என்று அனைவரும் சொன்னார்கள். விரும்பத்தகாத எண்ணமுடைய எதிர்ப்பாளர், அவர் எழுதியதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறினார்.

இருப்பினும், மக்கள் இந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியபோது, இது உண்மையில் ஒரு வகையான நகைச்சுவையாக இருந்தது, அதில் சமூகத்தின் நடைமுறைகள் மற்றும் சிலர் நையாண்டி செய்யப்பட்டனர்.

அதன் பக்கங்களில் சமகாலத்தவர்களைப் பற்றிய விவரங்கள் நிறைந்திருந்தன. இதில் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கலாம். ஜாஹிஸ் எழுதிய வரி வரைபடங்களில் இருக்கும் கதாபாத்திரங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஒருவருக்கொருவர் போட்டியிடத் தொடங்கினார்கள்.

மக்கள் ஒருவருக்கொருவர் உரையாடலில், “எண்ணெயைச் சேமிப்பதற்காக கல் விளக்குக்கு பதிலாக கண்ணாடி விளக்கைப் பயன்படுத்தும் கஞ்சன் யார்?”

“இரு இரு. இது அல்-கிந்தியைக் குறிக்கிறது.”

“என்ன? அரபு தத்துவஞானி அல் கிந்தியா?”

“ஆம், இதில் வெறும் அல் கிந்தி என்று தான் எழுதியிருக்கிறது”

“அப்படியென்றால் அல் கிந்தியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எங்களுக்குச் சொல்”

சில காலமாக அல் கிந்தியின் குத்தகைதாரராக இருந்த மத அறிஞர் மாபத் சொன்ன நீண்ட கதை இது.

இஸ்லாத்தின் பொற்காலம்

ஒரு சந்தர்ப்பத்தில், மாபத் ஒரு மாதத்திற்கு இரண்டு விருந்தினர்களைத் தங்க வைக்க வேண்டியிருந்தது. அல்-கிந்தி இந்த மாதத்திற்கான வாடகையை 33 சதவீதம் உயர்த்தியுள்ளார். வீட்டில் இரண்டு கூடுதல் நபர்கள் இருப்பது, அது ஒரு மாதத்திற்கு மட்டுமே என்றாலும், தர்க்கரீதியாக, காரணம் மற்றும் விளைவுக் கோட்பாட்டின் படி உரிமையாளரின் மீது சுமையைச் செலுத்துகிறது என்று கிந்தி வாதிட்டார்.

அவரைப் பொறுத்தவரை, இது அங்குள்ள வடிகுழாய்களில் அழுத்தம் கொடுக்கிறது மற்றும் குடிநீருக்கான தேவையை அதிகரிக்கிறது. நில உரிமையாளர் தனது சொத்தின் மதிப்பு குறைந்து வருவதால் எதிர்காலத்தில் யாரும் இங்கு வாழ விரும்பமாட்டார்கள் என்பதால், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடும்.

இது அல்-கிந்தியின் வாதமாகவும் தெரிகிறது.

கேள், இதுவும் அல் கிந்தியாகத் தானிருக்கும்.

“ஆசை எழுந்தவுடன் அதைக் கொன்றால், உங்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை நான் உத்தரவாதம் அளிக்க முடியும்” என்பதும் அவருடைய வார்த்தைகள். அவரது தார்மீக கோட்பாடு இந்த முறையில் நையாண்டி செய்யப்படுவதைக் கண்டு அல் கிந்தி மகிழ்ச்சியடைய மாட்டார்.

பிரபுக்களுடனான உறவுகள் கலிபாவின் சபையில் அல்-கிந்தியின் முக்கியத்துவத்தை அதிகரித்தன. 833 முதல் 842 வரை ஆட்சி செய்த கலீஃபா அல்-முதாசிம், அரிஸ்டாட்டிலின் “முதல் ஃபிலாசஃபி”(முதல் தத்துவம்)-ல் பணிபுரியும் பொறுப்பை அல்-கிந்தியிடம் ஒப்படைத்தார்.

சாம்ராஜ்யத்தின் வலிமையான நபர்களில் ஒருவராக கலிஃபா மதிக்கப்பட்டதால், தத்துவம் குறித்த ஒரு புத்தகத்தை எழுதச் செய்யும் கலீஃபாவின் நடவடிக்கை பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவரின் நம்பிக்கையைச் சுக்கு நூறாக நொறுக்கக்கூடிய ஒரு இதழ் அது. ஒருவேளை அல்-முதாசிம் தனது வாழ் நாள் முழுவதையும் போர்க்களத்தில் கழித்தபின் தனது மனோதிடத்தையும் மேம்படுத்திக்கொள்ள விரும்பியிருக்கலாம்.

இஸ்லாத்தின் பொற்காலம்

அல் கிந்தியின் நூலகம் மற்றும் அவரின் மோசமான காலம்

அல்-கிந்தியின் கெட்ட காலம் என்பது கலீஃபா அல்-முத்தவகிலின் (847-861) ஆட்சிக் காலத்தில் வந்தது. பிரபுக்களுடனான அவரது உறவுகள் மற்றும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் அவர் பிறந்ததும் அவருக்குப் பயனளிக்கவில்லை. கிலாஃபத் காலத்தில் பாக்தாத் மிகவும் போட்டி நிறைந்த சமூகமாக இருந்தது. இங்கே போட்டியின் முக்கியமான அம்சம் – அறிவியல்.

கலீஃபாவின் முழு ஆதரவைக் கொண்டிருந்த, அக்காலத்தின் பிரபல கணிதவியலாளர் பனு மூசா சகோதரர்களுடன் அல்-கிந்திக்கு ஒத்துப் போகவில்லை. அல் கிந்திக்கு எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிக்கச் சொல்லி அவர்கள் கலீஃபாவை வற்புறுத்தினர். அதன்படி, அல் கிந்தியின் நூலகத்தை அவரிடமிருந்து பறிக்க முடிவு செய்யப்பட்டது.

நூலகம் இல்லாமல், எந்த ஒரு அறிஞராலும் சுதந்தரமாகச் செயல்பட முடியாது. அப்படி, அல் கிந்தியை முடக்க நினைத்தனர். ஆனால் இந்தக் கதையில் ஒரு திருப்புமுனை இன்னும் வரவேண்டியிருந்தது. பனு மூசா சகோதரர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரமும் விரைவாக வந்துவிட்டது.

இஸ்லாத்தின் பொற்காலம்

தனது சாம்ராஜ்யத்தை ஒழுங்காக வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கலீஃபாவுக்கு இருந்தது. ஈராக்கின் முக்கிய நகரங்கள் வழியாகச் சென்ற பல்வேறு சிக்கலான கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளை நிர்வகிப்பதும் இதில் அடங்கும். பனு மூசா சகோதரர்கள் ஒரு கால்வாய்த் திட்டத்திற்கு தகுதியற்ற ஒரு பொறியியலாளரை நியமித்தனர். இந்தத் திட்டம் மோசமாகத் தோல்வியுற்றது. மேலும், அல் கிந்தியின் நண்பர் ஒருவரே அதை வெற்றிகரமாக மாற்றினார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, பனு மூசா சகோதரர்கள் கலீஃபாவின் மரியாதையை இழந்தார்கள். இதனால் அல்-கிந்தி தனது நூலகத்தைத் திரும்பப் பெற்றார். ஒன்பதாம் நூற்றாண்டின் போது, ஈராக்கில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு பஞ்சமில்லை. இருப்பினும், அத்தகைய கால கட்டத்தில் கூட, அல்-கிந்தியின் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் மற்றும் நுண்ணறிவு அவரது முக்கியத்துவத்தையும் அந்தஸ்தையும் அதிகரித்தது.

அவரது சுயசரிதையை எழுதிய ஆசிரியர்கள் அவரது அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான படைப்புகளைக் கொண்ட முன்னூறு ஆவணங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

அல்-கிந்தி ஒரு சிறந்த தத்துவஞானி மட்டுமல்ல, அவரது படைப்புகளுக்கு ஒரு நடைமுறை முக்கியத்துவமும் இருந்தது. அது இராணுவத் துறையிலும் பயன்படுத்தப்படலாம் என்பதே அவரது கண்ணாடி தொடர்பான உருவாக்கங்கள், கலீபாவின் இராணுவத்தால் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர் பல்வேறு வகையான வாள் மற்றும் இரும்பு போன்ற ஆயுதங்கள் தொடர்பான பணியும் ஆற்றினார். அவற்றின் பயன்பாடு குறித்த குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கினார், மேலும் அவற்றைக்கொண்டு சிறந்த ஆயுதங்களை எவ்வாறு தயாரிக்க முடியும் என்பதையும் விளக்கினார்.

பெருங்கடல் பகுதிகளில் உருவாகக்கூடிய பிளவு, மேக இடி, மின்னல் உள்ளிட்ட வானிலை தொடர்பான போக்குகளையும் அவர் ஆய்வு செய்தார். அவர் விலங்குகள் மற்றும் ஈக்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். அவரது வாசனை திரவியம் மற்றும் தூர அளவிடும் ஆராய்ச்சியும் பிரபலமாக உள்ளன. அவர் அரசியல் மற்றும் நெறிமுறைகளிலும் பங்களித்துள்ளார். தவிர, சாக்ரடீஸின் கருத்துத் தொகுப்பை உருவாக்கினார். அல்-கிந்தி, துக்கம் மற்றும் சோகத்தை கையாள்வது குறித்தும், ஆட்சி குறித்தும் கூட எழுதினார்.

இஸ்லாத்தின் பொற்காலம்

அவர் ஆன்மாவைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தார், இஸ்லாமியரல்லாத குழுக்களுடனான மத மோதல்கள் தொடர்பான அவரது படைப்புகளும் உள்ளன. வானியல், ஜோதிடம், அண்டவியல், மருத்துவம், கணிதம், பொருள் வடிவியல், கணிதம், வட்டங்கள் மற்றும் இசை ஆகியவற்றிலும் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவர் தர்க்கம் மற்றும் தத்துவத்திலும் பெயர் போனவர்.

தத்துவவியலின் போக்கு என்னவாக இருக்க வேண்டும், அரிஸ்டாட்டில் புத்தகங்களைத் தொகுத்தல் மற்றும் அவரது மிக விரிவான படைப்பு, அதாவது ‘முதல் ஃபிலாசஃபி” ஆகியவற்றில் அவர் தனது நேரத்தையும் உழைப்பையும் செலுத்தினார்.

எந்தவொரு கண்ணோட்டத்தில் பார்த்தாலும், இது நிச்சயமாக மிகவும் அதிசயிக்கத்தக்க பட்டியல். இருப்பினும், அல்-கிந்தியின் நூலகத்திற்கு அதிக ஆயுளைக் காலம் கொடுக்கவில்லை. இந்த அறிவார்ந்த சிந்தனையாளர் ஆற்றிய பெரும்பாலான பணிகளை நாம் இழந்துவிட்டோம்.

அல்-கிந்தியின் மிகவும் பிரபலமான படைப்பு முதல் ஃபிலாசஃபியில் உள்ளது. அவரது புத்தகத்தின் முதல் பகுதி மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளது. இது மேலும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு தலைப்பு விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதி தத்துவத்திற்கு ஆதரவாகவும் அதைப் பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுப்பதாகவுள்ளது. அல்-கிந்தி அரபியில் தத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தத்துவம் குறித்த அவரது கருத்துக்களை எதிர்ப்பவர்கள் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

இரண்டாம் பாகத்தில் இந்த உலகம் நித்தியமானது என்ற இந்தத் தத்துவ பார்வை மறுக்கப்பட்டது, எனவே அதை உருவாக்க, எந்தவொரு படைப்பாளியும் தேவையில்லை.

மூன்றாம் பகுதி ஏக இறைவன் என்ற தத்துவத்தின் உண்மையான பொருளைப் பற்றி பேசுகிறது, நான்காவது பகுதி ஏக இறைவன் தத்துவம் பற்றிக் கூறுகையில், அதன் இருப்பை விரிவாக விவரிக்க முடியாது, அதாவது அது வர்ணனைக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »