Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் – `உடனடியாக செயல்பட வேண்டிய நேரமிது` – உலக தலைவர்கள்

ஐநாவின் பல்லுயிர் உச்சி மாநாட்டில் சுமார் 150 உலகத் தலைவர்கள் காணொளி கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்து கொண்டனர்.

“இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் இங்கர் ஆண்டர்சன், வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது தவறான மேலாண்மையால் ஏற்பட்ட ஒரு நோயால் நாம் அனைவரும் உள்ளேயே பூட்டிக் கொண்டிருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.

“நாம் இயற்கையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகக் கூடும்,”

சர்வதேச அளவில் பல நாடுகள் கோவிட் -19ஆல் பொதுச் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் என போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இயற்கை பேரழிவை தடுப்பதற்காக உலகத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற அவர்கள் மீது மேலும் அழுத்தங்கள் சூழ்ந்துள்ளது.

உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் நோக்கம் பல்லுயிர் பெருக்கம் அழிவில் உள்ளதால் மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசுவதாகும். மேலும் நீடித்த ஒரு மேம்பாட்டிற்காக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இருப்பினும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் பல்லுயிர் கூட்டத்தில்தான் இயற்கையை பாதுகாப்பதற்கான நாடுகளின் பங்களிப்புகள் தீவிரமாக முன்வைக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன் ஐநாவால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் 2011ஆம் ஆண்டு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு இலக்கும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

“ஒரு முஸ்ஸிமாக தொடர்ந்து அவமானப்படுகிறேன்” – ஒவைஸி எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்

ஓவைஸி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்துள்ள லக்னெள சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு, இந்திய நீதித்துறையில் ஒரு கறுப்பு தினமாக இருக்கும் என்று கருதுவதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தள்ளார்.

தீர்ப்பு வெளிவந்த பிறகு தனது முழுமையான கருத்தை அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சகோதரத்துவத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் யாராயினும் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த முடிவால் இன்று நிச்சயமாக மனம் வருந்துவர்,” என்று அவர் கூறினார்.

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: உ.பி அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவிப்பு

உறவினர்கள் மட்டுமல்லாது செயல்பாட்டாளர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது ஆகியவை தொடர்பாகவும், அந்த பெண்ணின் சடலத்தை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்ய உறவினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்ப்டடிருந்தது.

இந்த சம்பவங்கள் மிகவும் வலியைத் தருபவையாக உள்ளன என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதை உணர முடிகிறது என்றும், இதில் ஈடுபட்ட நபர்களின் செயல் சட்டத்தைக் கண்டு அஞ்சாதவர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் அறிய முடிகிறது என்று கூறியுள்ளது.

இலங்கை போர் முடிந்தபோது பொருளாதாரத்தை மீட்க முன்வந்தது சீனா

இலங்கை

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே இதனை அவர் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் அக்டோபர் 31வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன?

பெண்

இந்தியாவில் வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு, கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அன்லாக் 5.0 என்ற பெயரில் புதிய வழிகாட்டுதல்களை இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், மல்டிபிளெஸ்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிகளை இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிடும்.

நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி இயங்க அனுமதிக்கப்படும்.

பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் அதை ஒத்த இடங்கள் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி செயல்பட அனுமதிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »