Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வறுமையின் பிடியில் 5 லட்சம் அமெரிக்க இந்தியர்கள்

  • வினீத் கரே
  • வாஷிங்டன், பிபிசி

அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், அந்த நாட்டில் வறுமையில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகரிக்கும் என்று சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் வாழும் 42 லட்சம் இந்திய அமெரிக்கர்களில் 6.5 சதவீதம் பேர் வறுமையில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அது கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10.1 சதவீதமாக உயரக்கூடும் என்று ‘தி இன்விசிபிள் இந்தியன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவின் மிகவும் வசதியான சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்திய அமெரிக்கர்களின் சராசரி குடும்ப வருமானம் 1,20,000 டாலர்களாக உள்ளது. இது அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவர்களின் குடும்ப வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

அமெரிக்காவில் இதுவரை 73 லட்சம் பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 2,07,000 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம்கண்டுள்ளது.

“வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமான அளவுகோல் உள்ளது. அந்த வருமான அளவுகோலுக்குக் கீழே இருப்பவர்கள், ஏழைகள் என வகைப்படுத்தப்படுவார்கள்” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் தேவேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பேராசிரியர் கபூர் அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் தெற்காசிய ஆய்வுத்துறையின் பேராசிரியராக உள்ளார்.

வறுமையில் வாழும் மற்ற அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, கொரோனாவுக்கு பிறகான காலத்தில் வறுமையை எதிர்நோக்கியுள்ள இந்திய அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானோரே அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ளதாகவும், மேலும் அவர்கள் பெங்காலி அல்லது பஞ்சாபி பேசுபவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூர்விக அமெரிக்கர்களில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வறுமையில் இருக்கும் நிலையில், அது இந்திய அமெரிக்கர்கள் சமூகத்தில் நேரெதிர்மறையாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, இந்திய அமெரிக்கர்களில் ஆண்கள் முன்னெடுக்கும் குடும்பங்கள் ஒப்பீட்டளவில் வறுமையின் பிடியில் அதிகமாக உள்ளன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

“அது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் யாரிடமும் உதவியை நாடுவதில்லை” என்று பேராசிரியர் கபூர் கூறினார்.

வறுமையில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் எண்ணற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

“அவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள். திடீர் வருமான பற்றாற்குறையால் அவர்கள் வாடகையை செலுத்த முடியாமல் வீடற்றவர்களாக மாறக்கூடும். குறைந்த வருமானம் என்பது அடிப்படை உணவுத் தேவைகளை அரசு அளிக்கும் உதவி கூப்பன்களை கொண்டு மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதையும் குறிக்கிறது. சுகாதார காப்பீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது நோய்ப்பாதிப்பு ஏற்பட்டால் அது குடும்பத்தில் மேலதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் வறுமையை எதிர்நோக்கியுள்ள இந்திய அமெரிக்கர்களில் அங்கு சட்டவிரோதமாக வாழ்ந்து வருபவர்களும் அடக்கம்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

1 அக்டோபர், 2020, பிற்பகல் 1:49 IST

“கடந்த ஒரு தசாப்தகாலத்தில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளது. தரவு மூலங்களில் வேறுபட்ட கருத்துகள் நிலவினாலும், சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க இந்தியர்கள் இங்கு சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர் என்று கூறலாம்” என்று பேராசிரியர் கபூர் கூறுகிறார்.

சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இந்திய அமெரிக்கர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பரவலால் அந்த துறைகளை போன்றே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

“இந்தத் துறைகளில் பணிபுரியும் இந்திய அமெரிக்கத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அமெரிக்க குடியுரிமை இல்லை என்பதை நாங்கள் அறிகிறோம். எனவே, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், சமூகத்தில் ஆதரவுக்கரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று பேராசிரியர் கபூர் கூறினார்.

ஏழை இந்திய அமெரிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், நியூயார்க், கலிஃபோர்னியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ் மற்றும் நியூ ஜெர்சி முதலிய ஐந்து மாநிலங்களில் வாழ்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

இந்த நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் வசிக்கும் பகுதிகளை மையமாகக் கொண்டு, வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதலை வழங்குதல், அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் அல்லது வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றத்தை எதிர்கொள்பவர்களுக்கு சட்ட உதவியை வழங்குதல், குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக கூடிய துறைகளில் பணியாற்றுவதற்கு ஏற்ற பயிற்சிகளை அளித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்வைக்கும் பேராசிரியர் கபூர் அவை இந்திய அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க உதவும் என்று கூறுகிறார்.

“இந்த அறிக்கையின் மூலம், மிகவும் பின்தங்கிய இந்திய அமெரிக்கர்களின் நிலை குறித்து நாங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பினோம்” என்று இந்த அறிக்கையை வெளியிட்ட உலகளாவிய இந்திய புலம்பெயர் அமைப்பான இந்தியாஸ்போராவை சேர்ந்த எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »