Press "Enter" to skip to content

அமெரிக்கா, கனடாவில் வலதுசாரி அமைப்பை முத்தம் மூலம் கடுப்பேற்றும் ஒருபாலுறவினர் மற்றும் பிற பிபிசி செய்திகள்

தீவிர வலதுசாரி அமைப்பான ‘ப்ரௌட் பாய்ஸ்’ அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அதே பெயருள்ள ஹேஷ்டேகில் தங்கள் அன்புக்குரியவர்கள் உடன் தாங்கள் இருக்கும் படங்களையும் ஒருபாலுறவுக்கு ஆதரவான படங்களையும் ஆண் ஒருபாலுறவுக்காரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இயங்கும் தீவிர வலதுசாரி அமைப்பான ப்ரௌட் பாய்ஸ், அந்நாட்டில் வெளிநாட்டவர் குடியேற்றத்துக்கு எதிரானது.

#ProudBoys எனும் வலையொட்டு (ஹேஷ்டேக்) மூலம் கடந்த ஒருவாரத்தில் சுமார் ஒரு லட்சம் படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன.

தாங்கள் ஒருபாலுறவுக்கு எதிரானவர்கள் அல்ல என்று அந்த அமைப்பு இப்போது தெரிவித்துள்ளது.

கனடிய – பிரிட்டிஷ் பூர்விகத்தைக் கொண்ட கவின் மெக்கின்ஸ் என்பவரால் இந்த அமைப்பு 2016இல் தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே உறுப்பினராக முடியும்.

கனடிய ஆயுதப் படையைச் சேர்ந்த இரு ஆண்கள் முத்தமிடும் படம் ஒன்றும் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்திப் பகிரப்பட்டுள்ளது.

Presentational grey line

நோபல் பரிசு 2020 வென்றவர்கள் யார்?

nobel prize winners 2020

2020ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

Presentational grey line

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு thalaivi movie tamil cinema

தலைவி படத்தில், மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் ஏ.எல். விஜய் மிகவும் பாசத்துக்குரியவர் என்று குறிப்பிட்டு அவருடனான படப்பிடிப்பு விவாத படங்களை பகிர்ந்துள்ளார்.

Presentational grey line

அர்மீனியா – அஜர்பைஜான் ராணுவ மோதல்

A building is on fire after shelling in Stepanakert, disputed Nagorno-Karabakh region. Photo: 3 September 2020

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையான மோதல் ஒரு நாட்டின் பகுதி மீது இன்னொரு நாடு குண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோசமாகியுள்ளது.

அஜர்பைஜான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கஞ்சா மீது அர்மீனிய பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளன.

Presentational grey line

ஒரு மகன் இரு தாய் வழக்கு

ஒரு மகன் இரு தாய் வழக்கு

மகன் ஒருவரை இரண்டு தாய்மார் உரிமை கோரும் வழக்கு, திங்கட்கிழமை. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Presentational grey line

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

5 அக்டோபர், 2020, பிற்பகல் 1:51 IST

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »