Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு மற்றும் பிற செய்திகள்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுடனான இரண்டாவது விவாதத்தை இணைய வழியே நடத்தினால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்புக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணைய வழி விவாதத்துக்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதால், வரும் வாரங்களில் நடைபெற வேண்டிய அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் எங்கு, எப்படி நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

டிரம்புக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற விவாதம் அவமதிப்புகள் மற்றும் குறுக்கீடுகள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ஜோ பைடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், தேர்தல் முடிவானது, இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே அமையும்.

ஜோ பைடன்

தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, இந்த விவாதம் குறித்து தொலைபேசி வாயிலாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் வணிகம் சேனலிடம் பேசிய டிரம்ப், “ஒரு கணினிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு நடைபெறும் மெய்நிகர் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், “டிரம்ப் தனது முடிவுகளை ஒவ்வொரு நொடிக்கும் மாற்றுகிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி வழக்கமான முறைப்படி, மியாமியில் விவாதத்தை நடத்துவதற்கு ஜோ பைடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Presentational grey line

ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்

ராம் விலாஸ் பாஸ்வான்

இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு விநிகோயகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (74), டெல்லியில் நேற்று (அக்டோபர் 8) காலமானார். இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணம் இறக்கங்களை விட பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது. ஆனால், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை.

Presentational grey line

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் காவலர்கள் இடமாற்றமா?

பெரியார் சிலை

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறையின் காவலர்கள் மூன்று பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கடந்த மாதம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள், அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Presentational grey line

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று (அக்டோபர் 8) பள்ளிகள் திறக்கப்பட்டன. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவினால் பள்ளிகள் நடத்த எடுக்கப்பட்ட முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Presentational grey line

அர்மீனியா – அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?

அர்மீனியா - அஜர்பைஜான்

அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான நாகோர்னோ – காராபாக் எல்லை பிரச்சனை கடும் மோதலாகி மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. பாகிஸ்தான், இரான், துருக்கி ஆகிய நாடுகள் அவற்றின் ஆதரவை அஜர்பைஜானுக்கு வழங்கியுள்ளன. ஆனால், அங்குள்ள நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும், எல்லை பிரச்சனைக்கு அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா பதில் அளித்துள்ளது.

Presentational grey line

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

7 அக்டோபர், 2020, பிற்பகல் 1:32 IST

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »