Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் – முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த பிபிசி தமிழின் முக்கியமான கட்டுரைகளை தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – 500 சொற்களில் தெரிந்து கொள்ளுங்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அமெரிக்க தேர்தல் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாக எளிய முறையில் பார்க்கலாம்.

அதிபரை தேர்ந்தெடுப்பது மக்கள் கிடையாதா?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

டிரம்ப் Vs பைடன் – முன்னணியில் இருப்பது யார்?

அமெரிக்காவின் இரண்டு அரசியல் கட்சிகள் காட்டும் சிலைகள்

குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை எதிர்த்து, வரவிருக்கும் தேர்தலில் களம் காண்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், துணை அதிபராக இருந்தவராக இவர் அறியப்பட்டாலும், உண்மையில் பைடன் 1970களிலிருந்தே அமெரிக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்படுவது சீனாவுக்கு ஆதரவாக அமையுமா?

டிரம்ப் Vs பைடன்

அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் தேசிய கூட்டங்கள், அடுத்து வரும் அதிபரின் உள்நாட்டு கொள்கைகள் எந்த மாதிரி இருக்கும் என்ற ஒரு வெளிச்சத்தை அமெரிக்க வாக்காளர்களுக்கு அளிக்கும்.

ஆனால், இந்தாண்டு சீனாவுடனான பிரச்சனைக்குரிய உறவு குறித்தும் பலரையும் சிந்திக்க வைக்கிறது.

கமலா ஹாரிஸ்: துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிபைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.

இந்திய வம்சாவளியை இலக்கு வைக்கும் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

நவம்பரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் வசிக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வாக்குகளை கவரும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் தரப்பில் காணொளி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிரம்ப் அதிபராக நீடிக்க முடியாமல் போனால் என்னாகும்?

ஒருவேளை அதிபர் துணை அதிபர் ஆகிய இருவருமே அதிபர் பொறுப்பை கவனிக்கும் உடல்நிலையில் இல்லை என்றால் பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அந்த பொறுப்புக்கு வரலாம் என அமெரிக்காவின் ‘ப்ரெசிடென்சியல் சக்சஷன்’ சட்டம் கூறுகிறது.

ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் யார் ?

மைக் பென்ஸ்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குழுவில் ஒரு மிக முக்கிய நபராக உருவெடுத்துள்ளார் துணை அதிபர் மைக் பென்ஸ்.

கடந்த 4 ஆண்டுகளாக, அவர் ஒரு சிறந்த துணை அதிபராக பணியாற்றி, நிர்வாகத்தில் முக்கிய நிகழ்வுகளை முடிவெடுக்கும் குழுக்களை வழிநடத்தி, ஊடகங்களை தனது சிறப்பான பேச்சினால் எதிர்கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »