Press "Enter" to skip to content

நிலவின் பாறை கற்களை ஆராய்ச்சி செய்யும் சீனா – அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு சீனா பெறும் சிறப்பு

1976ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகச் சீனா நிலவிலிருந்து பாறை கற்களை ஆராய்ச்சிக்கு எடுத்து வரப்போகிறது.

செவ்வாயன்று ஆளில்லாத விண்கலத்தைச் செலுத்தி நிலவில் உள்ள பாறைகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது சீனா.

இதன்மூலம் நிலவின் உருவாக்கமும், தன்மையையும் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு இந்த பணிக்காக 1976ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் `லூனா 24` என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் மூன்றாவது நாடு சீனா என்ற பெருமையைப் பெறும்.

`சேஞ்ச் 5` என்ற அந்த விண்கலம், நிலவைக் குறிக்கும் பழம்பெரும் சீன கடவுளின் பெயரை கொண்டது. இந்த விண்கலம் பெரிய ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு ஏவப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான `ஓஷன் ஆஃப் விண்மீன்ம்ஸ்` என்ற பகுதியிலிருந்து 2கிலோ பாறை கற்களை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1976ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட விண்கலம் 170கிராம் கற்களையும், அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட்ட திட்டத்தில் 382 கிலோ கிராம் பாறைகள் மற்றும் மணலையும் கொண்டு வந்தனர்.

இந்த `சேஞ்ச் – 5` விண்கலம் மூலம், நிலவில் எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்பது குறித்த விளக்கத்தையும், எந்த உயிரையும் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறியடிக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

2013ஆம் ஆண்டு சீனா முதன்முதலில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின் ஒரு தசாப்த காலத்திற்குள் செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »