Press "Enter" to skip to content

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய, இந்த சந்தேகநபர்களை விடுதலை செய்துள்ளார்.

கொழும்பு – ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்திற்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த நிலையில் கைதான 10 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடம் 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த, வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் கிடையாது என சட்ட மாஅதிபர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் அறிக்கையை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்ய தீர்மானித்துள்ளார்.

கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலையொன்று காணப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் பணிப்புரிந்த 10 பேர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மறுதினமான 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித சாட்சியங்களும் இல்லாமையால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மாஅதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 10 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

“சசிகலாவின் விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது”

அழகிரி

சசிகலாவின் விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி

கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்; அப்போது, “மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும். அவரால் எங்களது கூட்டணியின் வாக்கு வங்கி பாதிக்ககூடாது என நினைக்கிறோம். எனவே, கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது,” என தெரிவித்தார்.

“சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது. சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.”

“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது.

7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது, ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »