Press "Enter" to skip to content

BDSM பாலுறவு என்பது என்ன? வலிக்கும், பாலுறவுக்கும் என்ன தொடர்பா?

ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது – போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது.

நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நடைமுறை பற்றிய விவாதத்தை எழுப்புவதாக அது இருந்தது.

நாக்பூர் சம்பவம் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், இதுகுறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் மனதில் எழுந்தால் அதைப் புறக்கணித்துவிடக் கூடாது.

தனிப்பட்ட வாழ்வில் ஏதும் பிரச்னை இருந்தால், பாலுறவு வாழ்வில் பிரச்னைகள் இருந்தால், வினோதமான எண்ணங்கள் ஏதும் மனதில் தோன்றினால், அதுகுறித்து நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

உங்களுடைய செயல்பாடு பாலுறவு துணைவரையோ அல்லது அவருடைய செயல்பாடு உங்களையோ துன்புறுத்தும் வகையில் இருந்தால், உதவியை நாட வேண்டும். தவறான தகவல்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால், பிரச்னை மேலும் சிக்கலாகிவிடும்.

பி.டி.எஸ்.எம். என்றால் என்ன?

மேற்கத்திய சமுதாயத்தில் பி.டி.எஸ்.எம். என்பது நன்கு அறியப்பட்ட விஷயமாக இருக்கிறது. ஆனால் பல நாடுகளில் இது கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறது. பி.டி.எஸ்.எம். (BDSM) என்பது `உடல், செயல்பாடு, ஆதிக்கம் செலுத்துதல், அடங்கிப் போதல், துன்பத்துக்கு ஆளாகி சிற்றின்பம் அனுபவித்தல்’ என்பதன் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துகளின் சுருக்கம் ஆகும்.

பி.டி.எஸ்.எம்.

இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையாவது துன்புறுத்துதல் அல்லது தனக்குத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் பாலுறவு விருப்பத்தைத் தூண்டுதல் பெறுகிறார்கள். பி.டி.எஸ்.எம். பாலுறவு வகையில் இவையெல்லாம் உள்ளன.

இதில் கட்டுப்பாட்டை காட்டுபவர் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும், துன்புறுத்தல்களை ஏற்பவர் அடங்கிச் செல்பவர் என்றும் கருதப்படுகிறார்.

துன்புறுத்தல் செயல்களை செய்பவரும், அதை ஏற்பவரும் இந்தச் செயலால் பாலுறவு எண்ணத்தின் தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஒருவரை அடிமை போல நடத்துதல் அல்லது தானே அடிமை போல நடந்து கொள்வது என்ற பாணியும் இதில் இருக்கிறது.

`துடைப்பத்தால் தூண்டப்படும் பாலுறவு

இந்தியாவில் யாரும், எங்கேயும் பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. எனவே, பாலுறவு குறித்து அவர்களுக்குப் போதிய விஷயங்கள் தெரியவில்லை. அவர்களிடம் பல தவறான புரிதல்கள் உள்ளன.

எனவே, பத்திரிகைகள், இதழ்களில் பாலுறவு குறித்து நிறைய பேர் கேள்விகள் கேட்கிறார்கள், பாலியல் நிபுணர்கள் பதில்கள் அளிக்கின்றனர். மஹிந்தர் வத்ஸா என்பவர் அதுபோன்ற ஒரு நிபுணர். சமீபத்தில் அவர் காலமாகிவிட்டார்.

பி.டி.எஸ்.எம். பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார். சுமார் 35 ஆண்டு காலமாக அதுபோன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வந்துள்ளார்.

பி.டி.எஸ்.எம். பற்றி பிபிசியுடன் பேசிய அவர், “என் மனைவி என்னை துடைப்பத்தால் அடித்தால் தவிர, எனக்கு பாலுறவு விருப்பம் தூண்டப்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் என் மனைவி இறந்துவிட்டார். எனவே, துடைப்பத்தால் என்னை அடித்து, பாலுறவு விருப்பத்தைத் தூண்டக் கூடிய ஒரு மனைவியை நான் எப்படி கண்டுபிடிப்பது” என்று ஒருவர் கேட்ட நிகழ்வைக் குறிப்பிட்டார்.

பி.டி.எஸ்.எம்.

“இதில் எந்தத் தவறும் இல்லை. இதுபற்றி மக்கள் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அது தவறானது என நினைக்கிறார்கள். இப்போது, தங்களுடைய பாலுறவு விருப்பங்கள் பற்றி இந்தியர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, நகர்ப்புறங்களில் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது’ என்று மருத்துவர் வத்ஸா பதில் அளித்துள்ளார்.

நாவல் விற்பனை மூலம் வெளிப்பட்ட இந்தியர்களின் எண்ணம்

2012 ஆம் ஆண்டில் Fifty Shades of Grey என்ற நாவல் வெளியானது. கல்லூரிக்குச் செல்லும் ஒரு மாணவிக்கும், ஒரு தொழிலதிபருக்கும் இடையிலான விநோதமான உறவு பற்றியதாக அந்த நாவல் இருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, கோடிக்கணக்கான மக்கள் அதைப் படித்தார்கள்.

லட்சக்கணக்கான இந்தியர்களும் அந்த நாவலைப் படித்தனர். 2015ல் அந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்ட போதும், நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்தப் படம் வெளியான சமயத்தில், பாலுறவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்தது.

பி.டி.எஸ்.எம்

இந்தியாவில் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, பாலுறவு தொடர்பான பொருட்களை விற்கும் ஒரு இணையதளம் Fifty Shades of Grey கிட் என்ற பொருட்களின் தொகுப்பை விற்பனைக்குக் கொண்டு வந்தது. கைவிலங்குகள், ஒரு சவுக்கு, ஒரு பெல்ட், கண்களை மூடி கட்டும் ஒரு பட்டை போன்றவை அதில் இருந்தன. விற்பனை தொடங்கியதும், முதல் ஒரு வாரத்தில் 80 சதவீதம் விற்பனை அதிகரித்தது என்று அந்த இணையதளத்தின் நிர்வாகி சமீர் சரய்யா தெரிவித்தார்.

2015ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், “அந்தத் திரைப்படம் பற்றிய கலந்தாடல்களால், அதன் பெயரில் விற்பனைக்கு வந்த பொருட்கள் நன்கு விற்கப்பட்டன. பொதுவாக, பார்வையாளர்கள் இணையதளத்திற்கு வந்து ரூ.4,600 செலுத்தி அந்தப் பொருட்களின் தொகுப்பை வாங்குகின்றனர்” என்று கூறியுள்ளார்.

2015 பிப்ரவரி மாதத்தில், அதுபோன்ற ஒரு இணையதளத்தின் தலைமை நிர்வாகியான ராஜ் அர்மானி பிபிசிக்கு பேட்டி அளித்தார். இந்தத் திரைப்படம் தொடர்பான பொருட்களின் விற்பனை ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 122 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“பாலுறவு உணர்வுகளில் புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்க்கும் காலக்கட்டத்துக்கு இந்திய சமூகம் வந்துவிட்டது. உயர் வருவாய் பிரிவில் உள்ள, மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்துக்கு ஆட்பட்ட இளைஞர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். எனவே இதுபோன்ற பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை” என்று அவர் கூறியுள்லார்.

எதிர்காலம் பற்றி விழிப்பாக இருங்கள்

இந்திய சமூகத்தில் சீரான வேகத்தில் மாற்றங்கள் நிகழ்வதை இந்த விஷயங்கள் காட்டுகின்றன.

இதுபோன்ற பல நோயாளிகளிகள் தன்னிடம் வந்திருப்பதாக, இந்தியாவில் பிரபல பாலுறவு நிபுணரான மருத்துவர் நாராயண் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

திர்காலம் பற்றி விழிப்பாக இருங்கள்

அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக, நடுத்தர அல்லது உயர் வருவாய் பிரிவினராக உள்ளனர்.

பாலுறவு துணைவரின் மூர்க்கத்தனமான செயல்பாடு குறித்து பலரும் புகார் கூறினர். சிகரெட்டால் சூடு வைப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது, சங்கிலியால் கட்டிப் போடுவது, நாயின் கழுத்தில் போடும் பெல்ட்டை துணைவரின் கழுத்தில் கட்டிவிட்டு நாயை போல சுற்றி வரச் செய்வது, அவன் அல்லது அவளை மோசமாக நடத்துவது போன்ற புகார்கள் அதிகமாக வந்தன. எனவே, உறவில் ஈடுபடுபவரில் ஒருவருக்கு இது பிடித்திருக்கிறது, இன்னொருவருக்கு இது பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

“ஒரு பாலுறவில் வலியும் காயங்களும் தான் ஒருவருக்கு பாலுறவு விருப்பத்தைத் தூண்டும் என்றால், அவருக்கு பாலியல் ரீதியில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். நீண்டகால நோக்கில் பார்த்தால், இது கேடு ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று மருத்துவர் ரெட்டி தெரிவித்தார்.

“புதுமையாகச் செய்வது ஆரம்பத்தில் கிளர்ச்சியைத் தருவதாக இருக்கலாம். ஆனால், சில காலம் கழித்து அது உடல் ரீதியாக வலியை ஏற்படுத்தும், மனதையும் பாதிக்கும்” என்கிறார் அவர்.

வன்முறை செயலை `இயல்பானதாக’ ஏற்கும் மனோநிலை

ஸ்டீபன் போப் என்ற உளவியல் சிகிச்சையாளர், பாலுறவு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

வன்முறை செயலை `இயல்பானதாக' ஏற்கும் மனோநிலை

பிபிசி வானொலியின் 5 லைவ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுபோன்ற செயல்பாடுகளில் எதிர்மறை தாக்கங்கள் பற்றி குறிப்பிட்டார்.

“இது ஒரு வகையான, அமைதியாகப் பரவும் தொற்றுநோய் போன்றது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் மக்கள் இதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக முடியும். உறவுகளின் தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக இது இருக்கும். வன்முறைத்தனமாக நடந்து கொள்வதை இயல்பான செயல்பாடு என கருதும் மனப்போக்கு உருவாவது வருத்தமான விஷயம்” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, இதனால் ஏற்படும் கேடுகள் பற்றி எதுவும் தெரிவதில்லை என்றார் அவர்.

“கடைசி நேரத்தில் தான் என்னிடம் வருகிறார்கள். கழுத்தை நெரிப்பதால் மூச்சுத் திணறி மயக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்ட பிறகு தான் என்னிடம் வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

“கழுத்தை நெரிப்பது மிகவும் ஆபத்தான செயல்பாடு. ஆனால், கடைசி நேரத்தில்தான் அதுபற்றி அவர்கள் உணர்கிறார்கள்” என்றும் ஸ்டீபன் போப் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »