Press "Enter" to skip to content

கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்`

உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர் திட்டமிட்டிருக்கிறார்.

81 வயதான கார்லோஸ் சொரியா, இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மீண்டும் இமய மலையில் அடர்த்தி குறைந்த காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை எதிர்பார்க்கிறார். இவர் நேபாளத்தில் இருக்கும் தெளலகிரி சிகரத்தை ஏறவிருக்கிறார்.

அதன் பிறகு இலையுதிர் காலத்தில், திபெத்தில் இருக்கும் சிஷபங்மா சிகரத்தை ஏறத் திட்டமிட்டு இருக்கிறார். அப்படி ஒருவேளை இந்த இரு சிகரத்தையும் ஏறி உச்சத்தைத் தொட்டுவிட்டால், இவர் தான் உலகிலேயே 14 வானுயர்ந்த சிகரங்களையும் ஏறிக் கடந்த வயதானவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். இந்த 14 சிகரங்களும் 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் தலைநகரான மேட்ரிட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அவிலாவில் பிறந்த கார்லோஸ் சொரியா, ஒரு ஓய்வுபெற்ற ஆசாரி. இவர் கடந்த இரு தசாப்தங்களாக மலையேறுவதில் பல சாதனைகளைச் செய்து

60 வயதுக்குப் பிறகு தான் உலகின் உயர்ந்த 14 சிகரங்களில் 11 சிகரங்களின் உச்சங்களைத் தொட்டுவிட்டார். தன் 62-வது வயதில் தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சத்தைத் தொட்டார். எனவே உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயதானவர் என்கிற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். தன் 70 வயதுக்குள் உலகிலுள்ள ஏழு கண்டங்களிலும் உள்ள சிகரங்களின் உச்சங்களைத் தொட்டார் கார்லோஸ் சொரியா.

என் சொந்தக் காலில் பயணம்

இவர் சிகரங்களை ஏறி இறங்கிய விதத்தைத் தான் பெரிய சாதனையாகக் கருதுகிறார்.

“நான் உறைபனியால் எப்போதும் பாதிக்கப்பட்டதில்லை. என்னைக் காப்பாற்ற வேண்டிய சூழல் எழவில்லை. நான் எல்லா சிகரங்களையும் என் சொந்த கால்களாலேயே ஏறி இறங்கினேன் என்பது தான் நான் மகிழ்ச்சி கொள்ளும் பெரிய சாதனை” என்கிறார் சொரியா.

கடந்த வருடமே 14 சிகரங்களையும் ஏறி இறங்கும் பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார் சொரியா. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது நடக்கவில்லை. நான் எப்போது இரு சிகரங்களை ஏறினாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வேன் என கூறியுள்ளார் சொரியா.

“கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, என் வயதுள்ளவர்களுக்கும், பராமரிப்பு இல்லங்களில் கெட்ட காலத்தை எதிர்கொண்டு வருபவர்களுக்கும், மிகவும் பயந்து போயிருப்பவர்களுக்கும் என் மரியாதையைச் செலுத்த விரும்புகிறேன்” என்கிறார் சொரியா.

கார்லஸ் சொரியா

“என்னோடு கொஞ்சம் பூக்களை எடுத்துச் செல்ல இருக்கிறேன். அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில், அச்சிகரங்களின் உச்சியில் வைத்துவிட்டு வருவேன்” என்கிறார்.

சொரியா தற்போது மேட்ரிட்டுக்கு அருகில் இருக்கும் சியாரா டி கோடரமா மலைத் தொடரில் கடினமான பயிற்சியில் இருக்கிறார். அவர் வீட்டுக்குப் பின் புறத்திலேயே ஒரு நல்ல உடற்பயிற்சிக் கூடம் இருக்கிறது. அதில் உடற்பயிற்சிஎந்திர இருசக்கரக்கலன் (பைக்), பளுதூக்கும் கருவிகள், சிறிய மலை ஏறும் சுவர் என எல்லாம் இருக்கிறது.

“இதுவரை யாரும் உலகத்தில் இப்படிச் செய்ததில்லை” என்கிறார் கார்லோஸ் சொரியா உடன் மலையேறிய புவியியலாளர் சிடோ கார்காவில்லா.

கார்லஸ் சொரியா

“கார்லோஸ் சொரியா ஒரு வயதானவர். அவர் தன் தொழிலில் இருந்து ஓய்வுபெற்ற பின் என்ன செய்து பொழுதைக் கழிப்பது எனத் தெரியாமல், மலை ஏறத் தீர்மானித்தார்” எனக் கூறுகிறார் கார்காவில்லா.

கார்லோஸ் சொரியா தற்போது தன் அடுத்த பயணத்துக்கான நிதியைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த கொரோனாவால் பயணம் தடைபடாது என நம்புகிறார்.

இப்படி சிகரங்களை அசால்டாக ஏறும் இவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“என் கால்களில் கொஞ்சம் வலுவை இழந்திருக்கிறேன், என் கால்களின் ஸ்திரத்தன்மையையும் கொஞ்சம் இழந்திருக்கிறேன்.கொஞ்சம் புத்திகூர்மையை இழந்திருக்கிறேன்” என்கிறார் சொரியா.

“வயதானவர்கள் தங்கள் வாழ்கை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் பலரும் ஆம் எனக்கு 70 வயது ஆகிவிட்டது அதற்கு என்ன இப்போது என்கிறார்கள். அது ஒரு அருமையான வயது” என்கிறார் சொரியா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »