Press "Enter" to skip to content

யேமென் பற்றிய பைடனின் முடிவால் சிக்கலில் செளதி

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியாளர்களின் சில முடிவுகள் தலைகீழாக மாற்றப்பட்டும் உள்ளன.

அமெரிக்காவிற்கு தஞ்சம் கோரி வரும் குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ள அவர், அமெரிக்கத் துருப்புக்களை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றும் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளார். இந்த வீரர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலத்திலிருந்து ஜெர்மனியில் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் முன்னாள் அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அரபு நாடுகளுடன் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தங்களையும் மறு ஆய்வு செய்து வருகிறது. அதன் முக்கிய முன்னேற்றங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »