Press "Enter" to skip to content

சர்ச்சையை கிளப்பும் உயிரிழந்தவர்களை அனிமேட் செய்யும் டீப் ஃபேக் சாதனம்

  • ஜேன் வேக்ஃபீல்ட்
  • தொழில்நுட்ப செய்தியாளர்

மை ஹெரிடேஜ் என்கிற வலைதளம் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த சொந்த பந்தங்களின் புகைப்படத்தில் இருப்பவர்களை அனிமேட் செய்யும் ஒரு புதிய சாதன அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதை டீப் நாகடைஜியா என்று அழைக்கிறது அந்நிறுவனம். சிலர் இந்த புதிய அம்சதை மோசமானதாகக் கருதலாம், சிலர் ஏதோ மந்திர தந்திரம் போலக் கருதலாம் என அந்நிறுவனமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

போலித்தனம் உருவாகாமல் இருக்க, இந்த அம்சத்தில் இறந்த சொந்தபந்தங்கள் பேசும் வசதி சேர்க்கப்படவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

பிரிட்டன் அரசு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் சம்மதம் இல்லாமல் டீப் ஃபேக் காணொளிக்களை உருவாக்குவது சட்ட விரோதமானது என, பிரிட்டனின் சட்ட ஆணையம் ஒரு விதியைக் கொண்டு வரவும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

உயிரோடு இருப்பவர்கள் பேசுவது போல டீப் ஃபேக் காணொளிகள் வெளியாகி, அதை யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்கிற நோக்கத்தில், காணொளியில் பேசும் வசதியைச் சேர்க்கவில்லை என மை ஹெரிடேஜ் வலைதளம் கூறியுள்ளது.

“நம் அன்பிற்குரிய முன்னோர்களை நம் வாழ்கையில் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, ஓர் உணர்வுப் பூர்வமான பயன்பாட்டுக்கு இந்த வசதியை கொண்டு வந்திருக்கிறோம்” என அவ்வலைதளம் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் குறித்து தன் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.

“சிலர் இந்த டீப் நாகடைஜிக் அம்சத்தை விரும்புவார்கள், ஏதோ மந்திரம் போலக் கருதுவார்கள், சிலர் இதை மோசமானதாகக் கருதி வெறுக்கலாம்” என அவர்களே ஆமோதித்து இருக்கிறார்கள்.

போலி ஆபிரஹாம் லிங்கன்

லின்கன் வடிவம்

டீப் ஃபேக்ஸ் என்பது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் காணொளி. இதை தற்போது இருக்கும் புகைப்படங்களை வைத்து உருவாக்கலாம்.

டீப் நாகடைஜியா தொழில்நுட்பத்தை இஸ்ரேலைச் சேர்ந்த டி-ஐடி என்கிற நிறுவனம் மேம்படுத்தி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஏற்கனவே பதிவு செய்த காணொளிகள் மூலம் அவர்களின் முக பாவனைகள் மற்றும் அசைவுகளை வைத்து தன் அல்காரிதத்தைப் பழக்கி இருக்கிறது.

மை ஹெரிடேஜ் வலைதளத்தில் பிரிட்டனின் மகாராணி விக்டோரியா, ஃப்ளோரென்ஸ் நைடின்கேல் போன்றவர்கள் அனிமேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஆபிரஹாம் லிங்கனின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு காணொளியை யூடியூப் தளத்தில் பதிவிட்டிருக்கிறது மை ஹெரிடேஜ் வலைதளம்.

அக்காணொளியில் ஆப்ரகாம் லிங்கன் வண்ணமயமாக பேசுவது போல இருக்கிறது.

மக்கள் தாங்களே தங்களின் முன்னோர்கள் போன்று அனிமேட் செய்யப்பட்ட காணொளிகளை ட்விட்டரில் பதிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு கலவையான எதிர்வினைகள் மற்றும் பாராட்டுக்கள் வந்திருக்கின்றன.

சிலர் இந்த முடிவுகளை பாராட்டியும், உணர்வுப் பூர்வமாக இருப்பதாகவும் விவரிக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம், சேனல் 4 நிறுவனம் டீப் ஃபேக் ராணியை உருவாக்கி, க்றிஸ்துமஸ் வாழ்த்து கூறுவதுபோல செய்தது. இந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி செய்திகளைப் பரப்ப முடியும் என்பதை எச்சரிப்பதற்காக இந்த காணொளி உருவாக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »