Press "Enter" to skip to content

ஆஸ்கர் 2021: நோமேட்லேண்ட் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் குளோ கவ் – ஹைலைட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த இயக்குநர் சீனாவின் குளோ கவ் தேர்வாகியிருக்கிறார். ஆஸ்கரின் 93 வருட வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக பெண் இயக்குநருக்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த நடிகர் விருது 83 வயதாகும் பழம்பெரும் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸுக்கு “தி ஃபாதர்” என்ற படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளது.

சிறந்த நடிக்கைக்கான விருது ஃபிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு நோமேட்லேண்ட் படத்தில் நடித்ததற்காக கிடைத்திருக்கிறது.

சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்த குளோ கவ், திரையுலகில் நான் சந்தித்து வந்தவை அனைத்தும் நல்லதாகவே இருந்துள்ளது. அந்த நன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் எவ்வளவு சிக்கலான கட்டத்தில் இருந்தாலும், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் இந்து விருது அமையும் என நம்புகிறேன்,” என கூறினார்.

ஆஸ்கர் விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்களின் விவரம்:

சிறந்த படம் – நோ மேட்லாண்ட்

சிறந்த இயக்குநர் – க்ளோயி கவ் (நோ மேட்லாண்ட்)

சிறந்த நடிகர் – ஆன்டணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை – ஃபிரான்ட்சிஸ் மெக்டோர்மென்ட் (நோ மேட்லாண்ட்)

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் சுற்று (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் – பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

இரண்டு இடங்களில் நடந்த நிகழ்ச்சி

கொரோனா பெருந்தொற்று காரணமாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம், யூனியன் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தது. 2001ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் டால்பி திரையரங்கத்தில் நடத்தப்படுவது வழக்கம்.

முன்னதாக, இந்த ஆண்டு நிகழ்ச்சி லண்டனில் உள்ள அரங்கிலும் பாரிஸிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று தீவிரம் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காணொளி வாயிலாக நிகழ்ச்சியை நடத்த உடன்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »